கொக்கட்டிச் சோலை

14/04/2007
கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான்
கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை.

மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியாணம்
சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து
வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேனி
இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா.

பிஞ்சுப்பனை செத்துப்போச்சென்டா கவலை
அஞ்சு செடி கருகிப்போச்சென்டா கவலை
மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடயும்வேளை
கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை.

அவவுக்கு புதுக்கவிதை போலவோரு பிள்ளை
தாயின் எடுப்புக்கும் சாய்ப்புக்கும் இனையாக
கடுப்பான உடம்போட – தோட்டத்தில்
கண்டபடி திரிஞ்சா.

கள்ளடிச்சுப்போட்டு நானொருக்கா
கட்டிப் புடிச்சிட்டன்.

பொல்லா வியாதி வந்தாப்போல் துடிச்சா – நான்
வெள்ளாச்சி தெரியுமோ வென்றழுதா.

அவ வீட்டு மாட்டுக்கும் வெள்ளச்சி பேர்.

பொல்லாப் பிளையடி பெட்ட
சொல்லாதே என்று சொன்னதில் விட்டிட்டா.

பின்பிந்த
வெள்ளாளர் வந்தார்கள் வெளிநாடு
வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று – மக்கள்
கலர்களராய் கலப்புக் கலியாணங்கள் செய்வாராம்.

சுpவப்புக் கொடியனிந்த தோழி அவவின்
ஆங்கிலப்படிப்புக்கு வழி சொன்னா
வெள்ளயனைப் பிடியடி தானா வரும் மொழி என்று.

இன்னும்
வெள்ளையனோ கறுப்பனோ
வலையில் விழுந்த பாடில்லை
தங்கச்சி வாயில் இங்கிலீசு
தவண்டபாடுமில்லை.

சிவப்புக்கொடியணிந்த தோழி
தமிழ் நாட்டில் தமிழ் கற்று
அகதிகள் புணர் வாழ்வில் கருத்தோடு இருந்தா

இந்த வெள்ளச்சியும் வெள்ளாச்சியும்
இணைபிரியா நன்பர்கள் என்று
வெளியில் கதை
ஊரில் கதை
உலகெல்லாம் கதை.

வீட்டில் விசேசமென்றால்
வெள்ளச்சிக்கு சொல்லித்தான் மறுவேளை.

எடுபிடிக்குப்போன நான்
எட்டி நின்று பார்த்தேன்.

வுந்து போகும் தமிழர்கள்
வெள்ளச்சியை வின்ணானம் பார்க்க
சேர்ந்து பார்த்த நானும் – ஒருக்கா
பியர் அடிச்சுப்போட்டு
கட்டிப்பிடிச்சிட்டன்.

தப்போ தவறோ என்று
எட்டி நடக்க இருந்த என்னை
எட்டி இழுத்து
பல்லும்பல்லும் இடிபட இட்டா ஒரு முத்தம்.

பட்டென்று வந்ததொரு பொறாமை
ஊரில இவையோட பழகோம் – நீயோ
படுப்பதென்பது மேலும் கீழாமென்று எடுத்தோதி
ஆக்கினை வரிகளை அடுக்கியும்
வெள்ளச்சி என்னை விடாப்பிடியா காதலிச்சா.

கள்ளியடி அவள்.
யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் இரவுக்கு காதலிச்சா
அதுபோதுமென்றில்லை ஆனாலும் கானும்!

என்னை நினைச்சு நினைச்சு வெள்ளாச்சி உருக
நான் வெள்ளச்சியோடிருப்பேன்.

அவ வீட்டு மாட்டுக்கும் அதுதானே பேர்.

இதுகள் மிருகங்கள்
ஆடு மாடு நாய் புனை போல
கண்டபடி சேருதுகள் கண்டபடி பிரியுதுகள்
என்றவா தாய்க்கு கடிதம் போட்டா.

படிச்ச வெள்ளாட்டி
ஏதோ புதினமென்று
விழுந்து விழுந்து சிரிச்சா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *