ஷோபாசக்தியின் மண்டைக்கனம்

தமிழில் இலக்கியம் எழுதும் ஷோபாசக்தி என்ற ஒரு நபர் இருக்கிறார். இவர் தமிழ் நாட்டில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர். அவரது நடத்தை பற்றியது மட்டுமல்ல இந்த விமர்சனங்கள். அவரது அடாவடித் தனங்கள்  – சண்டித்தனங்கள் –முதலானவற்றுக்கு அப்பால் அவரது விவாத முறையும் – அவரது அரசியல் நிலைப்பாடுகளும் -கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானதுதான். ஆனால் மனிசன் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என இயங்கி –எழுதி வருபவர். இத்தனை பேர் எடுத்து சொல்லி இருக்கின்றனரே விவாத முறையை கொஞ்சமாவது மாற்றிக் கொள்வோம் என ஒருபோதும் அவர் எண்ணியதில்லை.

கருத்துகளுக்கு நேரடியாக பதில் சொல்லும் பழக்கம் ஒருபோதும் அவருக்கு இருந்ததில்லை. பூசணிக்காய் பற்றி பேசினால் கத்தரிக்காய் பிழை – நான்தான் முதன்முதலாக கத்தரிக்காய் பற்றி எழுதியிருக்கிறேன் என சொல்லிக் கொண்டு வரும் ஆள் அவர். நான் சொல்வது உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் தயவு செய்து இதுவரை அவர் ஈடுபட்ட விவாதங்களைத் தொகுத்துப் பாருங்கள். இது பற்றி மிக தெளிவான ஒரு கட்டுரையை வளர்மதி கீற்று இணையத் தளத்தில் எழுதி இருக்கிறார். கிடைப்பாவர்கள் அதைப் படியுங்கள் – எனக்கும் அனுப்பி வையுங்கள்.

இவரது நாவல்கள் ஒரு சாராசரி நாவல்கள் என பலர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தான் ஏதோ அதி உயர் இலக்கியம் படைத்து விட்டது போன்ற தெனாவெட்டுடன் இவர் பேசுவதை – எழுதி வருதைப் பார்க்கலாம். அவற்றின் மொழி பெயர்ப்புக்கு புக்கர் கிடைக்காததால் அந்த அவார்ட் தகுதி இழந்து விட்டது போன்ற பாவனைகள்தான் அதிகம். ஆங்கிலத்தில் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு தெரியும் அவை சராசரியிலும் கீழானவை என – ஒரு மொழி பெயர்ப்பு கூட எந்தக் கவனத்தையும் பெறவில்லை.

அவர் தனது எழுத்தால் பிரான்சில் கவனம் பெறவில்லை. மாறாக அவருக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது – அந்த படம் கான் அவார்ட் வாங்கியது என்பதால் மட்டுமே இவர் கவனத்துக்கு உள்ளானார். இந்த ஆக்கினைக்கு பிறகுதான் முண்டு பிடித்து மேலதிக தன் முனைப்பு தள்ளிக் கொண்டு இருக்கிறார். வேறு ஒரு மட்டரும் கிடையாது.

இதை வைத்துக் கொண்டு மற்றயவர்கள் மேல் இவர் செய்யும் அராஜகம் படு மோசம். உண்மையில் இந்த அராஜக நடவடிக்கைகள் மற்றும் இவரது மட்ட கரமான அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். விரைவில் வரும்.

தீபன் படம் எவ்வாறு ‘பூர்சுவா வெள்ளை’ மன சாயலில் வெற்றி அடைகிறது என்பது பற்றி – அல்லது அந்த படம் முன் வைக்கும் கலாச்சார –புரிதல் போதாமை பற்றி நிறைய பேசவேண்டும். ஷோபாசக்தி உட்பட அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு முன் ‘திறமை’ இருக்கவில்லை எனவும் – அவர்களை வேகமாக நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்க வேண்டி இருந்தது எனவும் அதன் இயக்குனர் சொல்லி இருப்பார். இதை உடைத்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி இருகிறேன். சந்தர்ப்பவாதி ஷோபாசக்தி இந்த போதாமை அரசியல் பற்றி இன்றுவரை ஒரு சொல் பேசியது இல்லை. அவ்வளவுதான் அவரது நேர்மை. இதற்கு பிறகு சில படங்களில் இவர் வேலை செய்துள்ளார் – நடித்துள்ளார். எனக்குத் தெரிந்து ஒன்றில் கூட ஆகா ஓகோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் சாதிக்கவில்லை. இப்படி இருக்க மலை போன்ற தெனாவெட்டு எப்படி வந்தது இவருக்கு.

தமிழ் இலக்கிய – சினிமா பரப்பில் நிறைய போதாமை உண்டு. தமிழில் இது பரவாயில்லை – வருகிற படத்தில் இது பரவாயில்லை என பேசும் பழக்கம் தான் பலரிடம் உண்டு. வர்க்கம் – மற்றும் சாதி – பால் அடிப்படையில் ஆதிக்க சக்தியாக இருப்பவர்கள் தமிழ் இலக்கிய பரப்பைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைதான் ஆரம்பம் தொட்டு இருந்து வந்திருக்கிறது. தலித்துகள் பெண்கள் பல்வேறு அடிபாடுகள் – போராட்டங்கள் மூலம்தான தங்களை சிறிதளவேனும் நிறுத்த முடிந்திருக்கிறது.

உருட்டல்கள் பிரட்டல்கள் செய்பவர்கள்தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்கள் இறந்த பிறகுதான் ஓரளவு கவனம் பெறும் நிலைதான் இருந்து வந்திருக்கிறது.

இந்த அடாவடியின் தொடர்ச்சிதான் ஷோபாசக்தி. சுய விளம்பரம் செய்வது – அதற்காக பல அடாவடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பதை ஆரம்பத்தில் இருந்து செய்து வருபவர் இவர். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். என்னை புகழ்ந்து எழுதுங்கள் பேசுங்கள் என தானே கெஞ்சி கேட்டு திரியும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

இந்த சுய மோகம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது தலைக்குள் இறுகி மரத்துவிடது. சில வால்கள் ‘நீங்கள் தான் ஐயா பெரிய ஆள்’ என வலம் வர இது இறங்குவதற்கான வாய்ப்பு இல்லமால் போய் விட்டது.

அவரது கீழ்த்தரமான புலி எதிர்ப்பும் – பிறகு வசதிக்கு ஏற்றபடி தேசியம் பேசுவதும் – முன்னுக்கு பின் முரணாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி பேசுவதும் எல்லோருக்கும் தெரியும். சந்தர்ப்பவாதம் மட்டும் இன்றி – மிதவாத கருத்துக்களை வைக்கும் கணவானாக அவர் நடமாடி வருகிறார். இந்த கணாவன் நடைமுறை அவரது பலவீனங்களை மேலும் வெளிகாட்டி உள்ளது. ஒரு சிறு விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு வந்து விட்டார். தான் கட்டிய கனவுக் குகைக்குள் சிறைப்பட்டு கிடந்தபடி புற நிலை யதார்த்தம் தெரியாது நடமாடி வருகிறார்.

இந்தப் பேயை பிடித்து கீழே இறக்க வேண்டிய தேவை எமக்கு அவ்வப்போது வந்து விடுகிறது. அதற்கு காராணம் இவர் செய்யும் அராஜகம் – திரிபு பிரட்டு.  தன்னை நோக்கி கவனம் குவிய வேண்டும் என்றால் எதையும் செய்யலாம் என்பதுதான் இவரது மோட்டோ.

இவரது புதிய நாவல் ‘இம்சை’ பற்றி நான் சொன்ன சில விபரங்கள் – (எனது நாவலுடன் இருக்கும் உத்தி சார் தொடர்புகள் பற்றி) இவருக்கு புறக்கேறி விட்டது. எனக்கு தமிழ் தெரியாது – எழுத தெரியாது என அழும் அளவுக்கு அது உறைத்து விட்டது. நான் ஒரு முக்கியமே இல்லாத – இலக்கியத்துக்கு தகுதி அற்ற – ஏற்கனவே தமிழ் இலக்கியம் புறம் தள்ளி விட்ட ஒரு ஆள் என்றால் – எதற்கு ஐயா இத்தனை பதற்றம்?

எதுக்கு குத்தி முறிகிறீர்கள்? உள்கிடக்கை என்ன? உள்ளார கிடக்கும் பலவீனம்தான் இங்கு பளிச்சென்று தெரிகிறது.

அவதூறுகளை எடுத்து வீச முன் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. நான் இது பற்றி என்ன சொல்லி இருக்கிறேன் என எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. லண்டனில் நடந்த எனது நாவல் விமர்சனக் கூட்டத்தில் மிகவும் ஆச்சரியப் பட்டு கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் அடாவடி சுய விளம்பர அலட்டல்களை மட்டும் குறைக்கவில்லை. நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக பின்பு ஒரு புலம்பல் எழுதி பதிவு செய்துள்ளார். இது ஒரு மிக கேவலமான மன நிலை.

ஏதாவது சொல்லி அடிக்க வேண்டும் என்ற அவாவில் சகட்டு மேனிக்கு எழுதும் முறை இது. சோபசக்தியிடம் மட்டுமின்றி பலரிடம் இந்த நடைமுறை உண்டு. கோபத்தில் ஏதாவது அலட்டி – திரிபு செய்து – புரட்டு செய்து அடித்து விடாமல் அவர்கள் மனம் சாந்தப் படுவதில்லை. அத்தகைய ஒன்றுதான் இதுவும்.

ஒரு விமர்சன கட்டுரையை – அல்லது ஒருகுறிப்பிட்ட விமர்சனத்தை ஒருவர் வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அந்த குறிப்பிட்ட விசயத்தை பற்றி எழுதுவீர்கள் பேசுவீர்கள். அதை விட்டு அத்தகைய மரத்தில் இந்த மாடு கட்டப் பட்டு இருந்தது என்பதுபோல் சம்மந்தமே இல்லாமல் அலட்டி எதிர்வினை செய்தால் எப்படி உரையாடல் சாத்தியம் ? தொடர்ந்து உங்கள் போக்கிரித்தனத்தை வெளிக்காட்டி வருவதை விட வாதிடவா முடியும் ?

இதைப் படிப்பவர்கள் வேண்டுமானால் ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். ஷோபாசக்தியை விமர்சித்து – (அவரது இலக்கியம் அல்லது அரசியல் பற்றி) – ஒரு கட்டுரை போட்டுப் பாருங்கள். ஒற்றை வரியில் ஒரு சராசரி கவுண்டமணி நக்கலுடன் (இது அந்த நடிகரை அவமானப் படுத்த சொல்லவில்லை) ஒதுங்குவார். இல்லாவிட்டால் ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டு வேறு திசையில் வேறு கதை பேசி சண்டித்தனத்துக்கு வருவார். செய்து பாருங்கள். நான் சொல்வது சரியா பிழையா என அப்ப விளங்கும் உங்களுக்கு.

ஷோபாசக்தி எனக்கு எழுத தெரியாது என சொன்னதால் – இனிமேல் தொடர்ந்து இவரது போக்கிரித் தனங்களையும் விடாது எழுதி – எனக்கு எழுத தெரியும் என அவரிடம் பெயர் வாங்க வேண்டும் என முடிவு எடுத்து உள்ளேன்!

இந்த தளத்தில் தொடர்ந்து எழுதுவேன் – வாருங்கள் படியுங்கள். இனி அவர் விட்டாலும் நான் விடுவதாயில்லை. எத்தைனையோ பேரை உங்களின் வெறும்  புரட்டுகளால் முடக்க முயன்றுள்ளீர்கள். உங்களின் அந்த விஷம் – விஷமம் என்னிடம் சரிப்பட்டு வராது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.