கானகன் : அட்டன்பராவும் அப்பாவி ஆடுகளும்

உடலுறவு கொண்ட காதலர்கள் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்துகொள்ளும் கதைப்படத்தைப் புரட்சிப் படம் எனக் கொண்டாடும் “டமில் சினிமா” கால கட்டத்தில்…,

நடிக்கத் தெரியாத நடிகர் நிண்ட நிலையில் முழுசிக் கொண்டிருக்க, பின்னணி இசையைப் போட்டு இழு இழு என இழுத்து வெற்றிகரமாக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கும் “ரீவி சீரியல்” கால கட்டத்தில்…,

கானகன் ஒரு திரைப்படமாக வந்திருந்தால் அது ஒரு சிறந்த படம் என முற்போக்காளர்கள் கொண்டாடியிருக்கக்கூடும். “வந்த படங்களில் ஒரு நல்ல படம்” என நாமும் சொல்ல நேர்ந்திருக்கும். ஆனால் லக்ஷ்மி சரவணகுமார் “நாவல்” எழுதியிருக்கிறார். இதைத் திரைக்கதை விமர்சனமாக எழுதியிருந்தால் வேறு விதமாகப் பார்க்க வேண்டியிருக்கும். நல்ல நாவல்களும் வந்துகொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நாம் அடக்கி வாசித்துவிட முடியாது.

கதையால் நிமிர்த்த முடியாத புத்தகத்தை அரசியலால் நிமிர்த்திவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்து அதிலும் பெயிலாகியாச்சு. நாவல் தொடும் அரசியல் “தொடப்பட வேண்டியதே”. ஆனால் புதிதில்லை. டேவிட் அட்டன்பரா தொடங்கி அவதார் படம் வரை இது “தொட்ட” விசயமே. உலகின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும், இணையத்திலும் அட்டன்பரா பாணியில் எடுக்கப்பட்ட டாக்குமென்ரிகள் குவிந்து கிடக்கின்றன. வேட்டை இன்று புதினமில்லை. கானகத்தின் உயிர்ப்பை உறிஞ்சிக் குடித்து வதைபட்டு சதையும் ரத்தமுமாக முகத்தில் அடிக்காமல் வெறும் புலி ரத்தத்தில் வழுக்கி வழுக்கி நடக்கிறது கதை. கானகத்துக் கதை என்பதால் மட்டும் கவனத்தை யாசி நிற்பது தவறு.

“பேசாப் பொருளைப் பேசுகிறேன்” என்ற போர்வையில் தொடாத ஒன்றைத் தொட்டுக் கவனம் கொள்வதை முன்னிறுத்தி இயங்கும் அரியலை நாம் உடைக்க வேண்டும். அதிகாரம் தவிர்க்கும் “கதைகள்” பல உண்டு. அனைத்தும் சொல்லப் படவேண்டியவையே,பேசப் படவேண்டியவையே. ஆனால் அவற்றைத் “தொடுவதால்” மட்டும் எமது புல்லரிப்பை வாங்கி விட முடியாது. ஒதுக்கப்பட்டதன் உயிரும் அதன் விடுதலையும் எமக்குள் துடிக்கவேண்டும் என அம்புலோதிப் படுகிறோம். தூர நிண்டு தடவித் தடவிக் காட்டுவதால் எமக்கு என்ன தெரியாததைத் தெரியப்படுத்தி விட முடியும் உங்களால்? “மலைதான் எல்லா வளங்களையும் விட அதிகமாய் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றைப் பதிவு செய்யும் அவசியத்தை இங்கு பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை” என நாவல் ஆசிரியர் நமது “தாழ்வு மனப்பான்மையில்” நேரடியாக கையை வைக்கிறார். போராட்டங்களை முன்னெடுக்காதவர்கள் சற்றுப் பயப்படத்தான் வேண்டும்.

தயவு செய்து கதையைப் படமாக எடுங்கள். பரப்புங்கள் கானகத்துக் கொடுமைகளை. இதை ஒரு அரசியல் நடவடிக்கையாக முன்வைத்தால் நாம் உங்கள் காலடியில். கதை எழுதி – அதை நாலுபேர் படிச்சு – நாப்பது பேர் கலந்துரையாடி – கானகத்தைக் காப்பாற்றுவதெல்லாம் நடக்கிற காரியமா? ஏறத்தாள 3000 வனப் புலிகள் மட்டும்தான் உலகில் எஞ்சியிருக்கின்றன என அழுது அழுது மில்லியன் கணக்கான டாலர்களை கரைத்துக்கொண்டிருக்கும் விலங்கு நல தொண்டர்கள், குழு குழுவாக காணாமற் போய்க்கொண்டிருக்கும் வன மனிதர்களைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை என்பது புதிய கதையில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்டுகள், ஸ்டாலினிஸ்டுகள், குறிப்பாக ட்ரொட்ஸ்கிஸ்டுகளில் இருந்து மாந்தர்நல சங்கங்கள் வரை பேசப்பட்டு, ஒப்பாரி வைத்து முடிக்கப்பட்ட விசயம்தான் இது. அந்த ஒப்பாரியில் தனது குரலையும் இணைத்துக் கொண்டதற்கு அண்ணன் லக்ஷ்மி சரவணகுமாரை நாம் வருக வருக என வரவேற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்த விசயத்தில் நாவலை நாம் தலையில் வைக்கிறோம்.

கானகம் சார்ந்து இன்னுமொரு அரசியல் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. இன்று தமிழக இலக்கியத்தை முதுகு சொறியும் சனி ஒன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. கண்ட கண்ட பாட்டுக்குப் புத்தகங்கள் தூக்கி எறியப் படுவதும் – பப்பாவில் ஏற்றிப் பூசிக்கப்படுவதும் நிகழ்வதற்கு பின்னால் ஒரு “சொறி”யும் அரசியல் இயங்குகிறது. சொறிமுறை மற்றும் சொறிதல் அளவுகள் ஆகியன வைத்து இலக்கியங்களின் பலம் பலவீனம் பேசப்படுகிறது. சொறிமுறை அரசியலை ஊக்குவிக்கும் பிதாவாக சாருநிவேதிதா ஒரு நவ அவாதாரம் எடுத்தியங்குகிறார். விற்பனையையும் விலாசம் காட்டுதலையும் முன்வைத்து இன்று சில “கூட்டுக் குடும்பங்கள்” கலைக்கொலை செய்து வருகின்றன. இதுதான் கலை என இங்கு ஒரு வரைவிலக்கணம் வைப்பதற்கு ஒரு துணிவும் எமக்கில்லை. பிறகு ஆயிரத்தெட்டு ஆங்கிலப் பெயர்களுடன் சாரு நமக்குப் பொல்லெடுத்துக் கொண்டு வந்துவிடுவார். வேண்டாம் பிரச்சினை. அவருக்கு கிடைத்த “சொறியில்” ஒரு பாதியாவது எனக்கும் கிடைத்திருந்தால் நாமும் புழுகி எழுதியிருக்கலாம்.

ஆனால் சாரு சொன்ன ஒரு விசயம் சரி. கானகன் நாவலுக்கு “திருஷ்டி” கழிப்பதுபோல் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் எஸ்.வி. ஆர். அவர் ஏதோ தன்ர பாட்டுக்கு எழுதிக் கொண்டே போகிறார். தான் ஒரு நாவலுக்கு முன்னுரை எழுதுகிறோம் என்ற எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தான் முன்பு சந்தித்த வன அதிகாரியில் தொடங்கி பலதும் பத்தும் எழுதிக் கொண்டு போகிறார் அவர். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எஸ்.வி. ஆரின் கெட்டித் தனம் விளங்கிவிடும். நாமும் விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயத்தில் மேற்படி கிறுக்கி தள்ளிக் கொண்டிருக்கவில்லையா?அதுதான் இது. இதுதான் அது. அவரும் அதே வேதனையைப் பட்டிருப்பார் போல. அவருக்கு கிடைத்த “சொறி”யின் அளவு அவ்வளவாக இருந்திருக்கிறது போல. அறிஞர் பின்வருமாறு நாவலைப் பாராட்டியிருக்கிறார் என்றால் பாருங்கள்! ‘விலங்குகளை நேசிப்பவர்களுக்கு அவற்றின் மொழியில் பேசத் தெரியும்’ என ஒரு குண்டைப் போடுபவர் சொல்கிறார்-: “ஆக ‘கானகன்’ நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகிறது”. டேக் தட் அட்டன்பரா!

தமிழகத்தோடு ஒப்பிடும் பொழுது ஈழத்து நாவல் சூழல் பாராட்டப்பட வேண்டியதே. வருங்காலத்து ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு நாவல் எப்படி எழுதக்கூடாது என்பதை அறிய இது போன்ற நாவல்களைப் படிக்கவேண்டும். ஒருகாலமும் தமிழகத்து தொய்வு தொத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்து நாவல் பண்பாடு “பக்கங்கள் நிரப்புதல்” அழுத்தத்தில் தொங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. “தினமும் இரண்டு மணி நேரம் வீதம் ஒரு அறுபது பக்கங்கள் எழுதியிருந்தேன். பின் மூன்றே நாட்களில் இரவு பகலென மொத்த நாவலையும் எழுதி முடித்து விட்டேன்” என வெட்கப்படாமல் எழுதியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். கதை விளக்கத்தை விரிக்க என, அல்லது அது போன்ற ஏதாவது ஒரு பொய்யை எழுதி எங்களைக் காப்பாத்தியிருக்கக்கூடாதா?
நண்பர்கள் மேலும் சில பக்கங்களை எழுதச் சொன்னதால் – பக்கங்களை எழுதிச் சேர்த்தேன் என ஆசிரியர் எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுது – பெரும்பான்மை நாவலை மூன்று நாளில் எழுதி முடித்திருக்கிறார் என்பதைப் படிக்கும் பொழுது – “பரிசுத் தொகை உடனே நாவலை எழுதச் சொன்னது” என விழுந்தடித்து எழுதிய கதையைப் படிக்கும் பொழுது – எமக்கு அழுகை அழுகையாக வருகிறது, ஐயோ. ஐயோ. ஐயோ. வறுமை எழுத்தாளனுக்கு புதிதில்லை. வறுமையிலும் கலையை வறுக்காத வரலாறு ஒன்றுண்டல்லவா? அதை நினைத்து நாம் நம்மை தேற்றிக்கொள்வோம்.

நீங்கள் அட்டன்பராவைப் பாருங்கள். வீணாக ஏன் கதையோடு மோதுவான். வேண்டுமானால் ஆசிரியருக்கு ஓரு போன் போட்டுப் பேசுங்கள். சொறிகளைப் பரிமாறிக் கொள்ளலாம். அதன் பிறகு புலிகளிடம் அடிவாங்கிய ஆடுகளுக்கும் கவலை செய்வோம். இப்படிப்பட்ட விமர்சனங்கள் எமை “சொறி”களை இழந்து வாட வைக்க வல்லன. ஒதுக்குதல் ஓதுங்குதலை வரவேற்பன. அதனால் என்ன. “இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா” என்ற பாட்டுக்கு “சொறியால் வாழ்ந்தவன் நானடா” என பதில் பாட்டு பாடிவிட முடியாதல்லவா. பரப்பு விரிகிறது – பாம்பு படமெடுக்கிறது – கோழி கூவுகிறது – புலி வேட்டையாடுகிறது – என்றெல்லாம் கதை எழுதவும் முடியாது – அவ்வாறு எழுதிய கதைக்கு விமர்சனமும் எழுத முடியாது.

 

–பின்னூட்டங்கள்

 

 

ளக்ஷ்மி ஸரவனகுமர்
யாரோ சேனனாம், கானகனுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என்று சொன்னதால் ஆர்வமாகப் படித்தேன். ம்ம்ம் அவர் அவதார் படம் பார்த்து எழுதியிருக்கிறார். பாவம் லண்டனில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு பளிகனைப் பற்றிப் பேசுவதென்றால் மனிதருக்கு கொஞ்சம் சிரமம் தான். நாவலை உள் வாங்ங்ங்ங்ங்ங்ங்கி நீங்கள் எழுதிய விமர்சனம் படித்து மெய் சிலிர்த்துப் போனது டோலர்…. ஆனால் ஒரு விசயம் குறித்து இங்கு பேசியே ஆக வேண்டும். ஈழத்து நாவல்கள் தான் பெரிதாக சாதித்துக் கொண்டிருப்பதாய் குறிப்பிட்டிருக்கிறீர்கள்… நல்லது தமிழில் கடந்த பத்து வருடங்களில் வந்த நாவல்களில் எதையெல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்? கடந்த பத்து வருடங்களில் தமிழ் நாட்டிலிருந்து மிகச் சிறந்த இருபது நாவல்களை என்னால் குறிப்பிட முடியும்… பதிலுக்கு எதிரில் நிறுத்திப் பார்த்தால் ஈழத்திலிருந்து ஒரு ஐந்து நாவல்கள் மட்டுந்தான் தெரிகிறது….
உங்களுக்கும் இலக்கிய விமர்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வேண்டுமானால் நீங்கள் குமுதத்திலோ அல்லது குங்குமத்திலோ சினிமா விமர்சனம் எழுதலாம். அதற்குக் கூட கொஞ்சம் நுட்பம் வேண்டும். அதிலும் அரசியல் நாவல் குறித்தான கருத்தரங்கிற்கு நீங்கள் கட்டுரை வாசிக்க வேண்டிய துர் சம்பவத்தை தமிழ் இலக்கியத்தின் அவமானகரமான ஒரு நிகழ்வாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. நீங்கள் எழுதியிருப்பது நகைச்சுவை குறிப்பு. விமர்சனம் அல்ல… தமிழில் நல்ல விமர்சகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எதற்கும் ஒருமுறை அவர்களைப் படியுங்கள்.

Pஓமரிஅப்பன் ஸ்கன்முகவெல்
அந்த லிங்க் பிளிஸ்.. நாங்களும் படிச்சு தெரிஞ்சுக்கிறோம்.. புக் தான் ஒன்னு கூட கொடுக்கல… அதையாவது படிக்கலாம்…

நரேந்திர குமார்
தோழர் வெளி ரங்கராஜன் அவர்கள் இந்த மாத “தீராநதி” இதழில் “கானகனுக்கு” மதிப்புரை எழுதியுள்ளார்.

அன்புச் செல்வன்
ளக்ஷ்மி ஸரவனகுமர் கோபத்தின் காரணி புரியவில்லை. மீண்டும் விடலைத்தனம்தான் தெரிகிறது. யாரோ ஒருவர் நமது நாவலை நல்லாயில்லை என்று சொன்னால்தான் என்ன..? என்ன காரணஞ்சொல்லி விமர்சிக்கப்பட்டுள்ளது…? அதை முதலில் தெரிந்து கொள்வோம்.. யாரோ சேனனாம் அல்ல. அவரும் அங்கு குறிப்பிடத்தக்க படைப்பாளிதான். அரசியல் இருக்கலாம். நாமும் அந்த வலையில் வீழ்ந்து விடக் கூடாது.

ளக்ஷ்மி ஸரவனகுமர்
தோழர் அந்த விமர்சனத்தைக் கீழே இணைத்துள்ளேன், வாசித்துப் பாருங்கள் நான் சொன்னதற்கான காரணம் புரியும்.

Pஓமரிஅப்பன் ஸ்கன்முகவெல்
வரவே இல்ல..

அன்புச் செல்வன்நொ
லிங்ச்…

ளக்ஷ்மி ஸரவனகுமர்
ப்லெஅசெ ரெஅட் இன் யமுன ரஜென்ட்ரன்’ச் பகெ

Yஅமுன றஜென்ட்ரன்
அன்புள்ள சரவணக்குமார், சேனனின் விமர்சனத்தைச் சார்ந்து நின்று எழுதுவதல்ல என் நோக்கம். அதனை அவரே செய்வார். ஓரு தகவலுக்காகச் சொல்கிறேன். கருத்தரங்க விமர்சகர்கள் சுதந்திரமாகக் கருத்துச் சொல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம். உங்களது கருத்தைச் சேனனது விமர்சனத் திரியில் நீங்கள் போட்டிருந்தால் அவர் தனது கருத்தைச் சொல்ல ஏதுவாக இருந்திருக்கும். இப்போது இப்பிரச்சினை வேறொரு பரிமாணம் எடுத்துவிட்டது துரதிருஷ்டவசமானது. 10 ஆண்டுகால தமிழகம் என்பதும் ஈழம் என்பதும் ஒப்பிடவே முடியாத ஒரு களம். தமிழக நாவல்கள் கருக்கொண்டு வெளியாகிவரும் சூழலும், ஈழ நாவல்கள் கருவாகி உருவாகி வெளிவரும் சூழலும் நிச்சயம் ஒன்றில்லை. வருத்தமாக இருக்கிறது. வேறேதும் சொல்லத் தோன்றவில்லை. இனி கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என இதில் ஒன்றுமில்லை என்பது மட்டும் தெரிகிறது. விலகிக் கொள்கிறேன்.

ளக்ஷ்மி ஸரவனகுமர்
ஆனால் இந்தப் பிரச்சனையைத் துவங்கி வைத்திருப்பவர் சேனனாகவே இருக்கிறார்.

ளக்ஷ்மி ஸரவனகுமர்
மேலும் முன்று வருடங்களுக்கு முன்பாகவே பத்தாண்டு கால தமிழ் நாவல்கள், பத்தாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் என இரண்டு நாள் அரங்கு நடத்தி இருக்கிறேன். அதை ஒட்டி நிகழ்ந்த வாசிப்பும் விவாதங்களும் முக்கியமானவை. இரண்டு சூழல்களையும் ஒப்பிடக் கூடாது என்பது எத்தனை நியாயமானதோ அதே அளவிற்கு நியாயமானது சம காலத் தமிழகத்து நாவல்களை ஒருவர் முற்றாக புறக்கணிக்கும் போது பதில் சொல்வதும்.

ளக்ஷ்மி ஸரவனகுமர்
நிச்சயமாக இதில் உங்களுக்குப் பொறுப்பில்லை.

ஸ்பர்டசுச்ட்கசன் Dஅசன்
“ஈழத்து நாவல்கள் தான் பெரிதாக சாதித்துக் கொண்டிருக்கிறது “… இப்படி ஒரு “தடால் அறிக்கையை ” சேனன் வெளியிட்டிருப்பாராயின் அது பிழையானது என்பது எனது கருத்து . இது கிட்டத்தட்ட ஜெயமோகன் பாணியிலான “பரபரப்பு விருப்பு” அறிக்கையாகவே கொள்ள வேண்டும்.

 

 

*///

கானகன் நாவலுக்கு நாம் எழுதிய விமர்சனத்தால் அதன் ஆசிரியர் ல‌ஷ்மி சரவணகுமார் கொதித்துப்போய் ஒரு குறிப்பெழுதியிருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். ‘யாரிந்த சேனன்? ‘ எண்டெல்லாம் கேட்டுக்கொண்டு ஈழத்து இலக்கியம் பற்றிக் கதைக்க வரக் கூடாது தம்பி என சாருவாவது அவருக்கு அட்வைஸ் குடுத்திருக்கோணும். நாவல் தரம் என்பது நம்பர்களில் இல்லை அப்பு. தமிழ் நாட்டில் இருபது நல்ல நாவல்கள் வந்திருக்கின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் என்ன புடுங்கினவை எண்டெல்லாம் கேட்டுக் கணிதத்தால எங்கள மடக்க நினைக்க கூடாது.

நான் சொன்ன விசயம் இது

“தமிழகத்தோடு ஒப்பிடும் பொழுது ஈழத்து நாவல் சூழல் பாராட்டப்பட வேண்டியதே. வருங்காலத்து ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு நாவல் எப்படி எழுதக்கூடாது என்பதை அறிய இது போன்ற நாவல்களைப் படிக்கவேண்டும். ஒருகாலமும் தமிழகத்து தொய்வு தொத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்து நாவல் பண்பாடு “பக்கங்கள் நிரப்புதல்” அழுத்தத்தில் தொங்கி செத்துக்கொண்டிருக்கிறது.”

இதுதான் சொன்னேன். கவனிக்கப்படாத பல இந்திய நல்ல நாவல்கள் பற்றி எம்மால் பேச முடியும் ( தமிழ் நாவல்கள் உட்பட). அதுவல்ல பிரச்சினை. “ஈழத்து நாவல்கள் தான் பெரிதாகச் சாதித்துக் கொண்டிருக்கின்றன” என நான் சொல்லவில்லை. ஆனால் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பக்கம் நிரப்பும் பழக்கம் இன்னும் தொற்றிக்கொள்ளவில்லை – இனிமேலும் வரக்கூடாது என்றேன்.

சரி அது கிடக்க

… நாவலை விடுங்க தலை. சோபாசக்தியின் ‘மைசூர்ராசா’ மாதிரி ஒரு சிறு கதை எழுதிப்போட்டு வாங்க மிச்சத்த பேசுவம். அந்த ஒரு கதை காணும் ஈழத்து இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்க.

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *