தமிழ் இலக்கியம் உருப்பட்ட மாதிரித்தான்

சமீப காலமாக ரொம்ப ஓவராக அலட்டி வருகிறார்கள் பலர். ஒப்பாரியும் பொய் புரட்டும் செய்து அதில் குளிர்க்காய்வாரின் தொகைதான் கூடி வருகிறது. கொரோனா பிரச்சினை ஒரு பக்கம் என்றால் இந்தக் கூட்டத்தின் பிரச்சினை மறுப்பக்கம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது.

கிடைத்த சின்ன இடைவெளியில் நாவலாசிரியர் லக்ஸ்மி சரவணகுமார் அவர்களும் சைக்கிள் வெட்டி ஓட்டுகிறாராம். சிறுகதை எழுத்தாளர் ஷோபாசக்தி சேர்ந்து அழக் கிடைத்த பொருத்தமான ஆள்தான் அவர். நட்சத்திரன் செவ்விந்தியன் சமீபத்தில் அகழ் இதழில் இச்சா பற்றி எழுதியதைத் தொடர்ந்தே இந்த அழுகைகளும் அடிபாடுகளும்..

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற எனது நாவல் சார்ந்து தொடங்கிய உரையாடல்களின் தொடர்ச்சியே அது. அந்த தொடர்ச்சியோடு பார்க்காவிட்டால் சில தகவல்களை நீங்கள் நழுவ விட்டு விடக் கூடும்.

லக்ஸ்மி சரவணகுமார் தனது முகப் புத்தகத்தில் லண்டன் விம்பம் குழுவினரை மிக கேவலமாக தாக்கி இருக்கிறார். அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். ஆனால் போகிற போக்கில் தானும் ஏதோ அவதூறு சந்தித்ததாக – அதுவும்  நாவல்கள் கானகனுக்கும் கொமோராவுக்கும் நடந்த விமர்சனம் அதுதான் என சொல்லிச் செல்கிறார்.

கொமோராவை லண்டனில் விமர்சித்தவர் ஹரி ராஜலக்சுமி. ஒருவரைத் திட்டும் பொழுது பெயரைச் சொல்லித் திட்டலாம்தானே. நீங்கள் பெயர் சொன்னதும் அவர் பெரிய ஆள் ஆகி விடுவார் போன்ற பொய்க் கனவுகளில் வாழாதீர்கள்.

இதோ இதுதான் கொமோராவுக்கு நடந்தது –( http://www.annogenonline.com/2018/01/26/give-it-to-angkar/?fbclid=IwAR2t-ZsDU5VfyU-UBPonbfuB61oqP5mTtMFXgxUgEVIr4MeYANG1m2GSy2k) –

தயவு செய்து இதைப் படியுங்கள். லக்ஸ்மி சரவணகுமார் எவ்வாறு ஆங்கிலப் படங்களைத் தழுவி எழுதுகிறார் என இக்கட்டுரை பல்வேறு தகவல்களைத் தருகிறது. லக்ஸ்மி சரவணகுமார் அய்டியா மோசடி செய்கிறார் எனக் குற்றம் சாட்டிய இந்தக் கட்டுரை இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட ஓன்று.

இதை எழுதியவர்கள் யார் ? அனோஜன் பாலகிருஷ்ணன் மற்றும் தர்மு பிரசாத்.

கானகனுக்கு நடந்தது இது – கானகன் : அட்டன்பராவும் அப்பாவி ஆடுகளும் (https://ethir.org/senan/?p=683) இதையும் கட்டாயம் படிக்கவும்.

இது நடந்தது செப்டம்பர் 2014ல். அநோசனும் தர்முவும்  கொமோராவுக்கு கொள்ளி வைத்தது சனவரி 2018ல்.

கானகன் பற்றி லண்டனில் பேசியதும் எழுதியதும் நான். லக்ஸ்மி சரவணகுமார் வலிந்து தழுவல் செய்கிறார் என்பதைச் சுட்டவே மேற்படி தலையங்கத்தை வைத்தேன். பின்பு கொமோராவுக்கு வந்த விமர்சனம் எனது சந்தேகங்களை உறுதிப் படுத்தி விட்டது. மேற்கண்ட கட்டுரையில் இலக்கிய முதுகு சொறிகிற அரசியலை தாக்கி எழுதி இருக்கிறேன் – அதுவும் இன்னுமொரு நாவலாசிரியரைக் குறிப்பிட்டு. இதே நிலைப்பாடுதான் இப்போதும். அத்தகைய நடைமுறைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதைத் தவிர என்ன அவதூறு என எனக்கு விளங்கவில்லை. தனக்கு மேல் வந்த விமர்சனத்தை தாங்க முடியாத எழுத்தாளர் அன்றும் அழுது புலம்பினார். தற்போது அதையும் தாண்டிச் சென்று மற்றவர்கள் மேல் அவதூறு செய்ய துணிந்துள்ளார்.

இந்தத் துணிவையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியது யார்? ஷோபாசக்தி.

ஷோபாசக்தியின் கடைசி நாவலின் ‘தழுவல்’ பற்றி நடக்கும் விவாதத்தின் தொடர்ச்சியாகயாக அகழ் இதழில் இந்தக் கட்டுரை வந்துள்ளது.  கட்டுரை ஒரு குற்றச் சாட்டைத் தவறாக வைக்கிறது என்கிறார் ஷோபாசக்தி. ஷோபாசக்தி தான் போதைவஸ்து சாப்பிடுவேன் என குடுத்த பேட்டியை வைத்து அவர் போதையில் எழுதுபவர் என எனக்கு சந்தேகம் வருகிறது என்றுதான் நட்சத்திரன் எழுதி உள்ளார். அதுவும் ஷோபாசக்தியின் பாலியல் விபரிப்புகளைப் படித்தபோது தனக்கு இந்தச் சந்தேகம் வருவதாக எழுதி உள்ளார். பாலியல் வல்லுறவை ஷோபாசக்தி எழுதியதை தர்மு பிரசாத் அழகியல் என எழுதி சமீபத்தில் பலரிடம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது வேறு கதை.

இது தவிர அவர் இலகியத் திருட்டு செய்கிறார் என அக்கட்டுரை சொல்கிறது. இந்தச் சொல் பொருத்தமில்லை என முன்பே நான் கூறி இருக்கிறேன். (பார்க்க – இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை– https://akazhonline.com/?p=2786). இவை தவிர அக்கட்டுரையில் என்ன அவதூறு இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. சமரசம் செய்யப் பட்ட எழுத்து என தாக்குவது /சொல்வது எல்லாம் எப்ப அவதூறு ஆகியது? ஷோபாசக்தி தான் ஒரு சமரசவாதி என்பதை அவரே எழுதி இருக்கிறார். அவர் ஒரு மிதவாதி என்பதை தற்கால எழுத்துக்களில் தொடர்ந்து காட்டிக் கொண்டு வருகிறார். முடித்தால் மிதவாதம் – சமரசம் பற்றி வெளிப்படையாக உரையாடலாம் வாருங்கள். உருப்படியான விவாதம் செய்த வரலாறு இல்லை ஷோபசக்திக்கு.

எனது எழுத்தையும் தாக்கித்தான் நட்சத்திரன் எழுதி உள்ளார். அதனோடு உடன்பாடா விட்டாலும் என் மேல் அவதூறு செய்ததாக கூற முடியாது. எழுத்தாளர் இளங்கோ டிசே என்னையும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களையும் கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார். அவற்றைக் கூட அவதூறு எனச் சொல்ல முடியாது. ஆனால் என் மேல் கடுமையான அவதூறுகளை வைத்து தர்மு பிரசாத் கட்டுரை என்ற பாவனையில் ஒன்றை எழுதி உள்ளார். அது ‘ஷோபாசக்தி குழுமத்துக்கு’ மிக உவப்பாக இருந்தமையும் – எவ்வாறு அதைப் பாராட்டினர் என்பதையும் பலரும் அறிவர். ஷோபாசக்தி குழுமம் என நான் சொல்வதற்கு காரணம் உண்டு. இவர்கள் எழுத்துக்கு பின் இருந்து தொலைபேசி கதைத்து இயங்குவோர். இந்த லொபி அரசியல் பற்றி பின்பு பார்க்கலாம்.

பாம்பின் காலைப் பாம்பு காப்பாற்ற வந்த மாதிரி ஓடி வந்து தற்போது தனது சுய நலத்துக்காக ஷோபாசக்தியை பாதுகாக்கிறார் லக்ஸ்மி சரவணகுமார். கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட அவர் விரும்பவில்லைப் போலும். அனோஜனுடன் இருக்கும் பழய கறலைக் கழுவ இது நல்ல சந்தர்ப்பம் அல்லவா.

ஏனெனில் சர்ச்சைக்குரிய கட்டுரை வெழிவந்த அகழின் ஆசிரியர் அனோஜன்.

எய்தவனை விட்டு அம்பை நோவது நடக்கிறது. பொதுவாக விமர்சனம் எழுதியவரையும் விமர்சனத்தில் இருக்கும் கருத்துக்களையும் தான் எதிர்ப்பார்கள். இப்ப அது பிரச்சினை இல்லையாம். வெளியிட்ட அனோஜன்தான் பிரச்சினையாம். அனோஜன் எழுத்தாளர் ஜெயமோகனின் சீடன் என்ற தொனிப்பட்ட தாக்குதல்களும் நடக்கிறது. ஜெயமோகனுடன் நேரடியாக மோத வக்கில்லை. பிறகேன் அனோஜனை வைத்து ஜெயமோகனுக்கு அடிக்கிறீர்கள். எத்தனையோ கேவலமான அவதூறு செய்த பத்திரிகைகளில் எழுதுவீர்கள் – அவார்ட் வாங்குவீர்கள். கூடி குலாவுவீர்கள். பின்பு நான் சொன்னதை போடுகிறார்கள் – அதில் சமரசம் இல்லை என புலம்புவீர்கள். திடீரென இப்ப புதிய பத்திரிகை தர்மம் தெரிகிறது. கேக்கிறவன் கேனயன் என்றால் மாடு ஏரோபிளேன் ஓட்டும் கதைதான் இது.

அவதூறு செய்து ஷோபாசக்தியை காப்பாற்றத் துடித்த அவரது நண்பரான தர்மு பிரசாத் பற்றி விபரம் புரியாமல் பின்வருமாறு எழுதுகிறார் லக்ஸ்மி சரவணகுமார்.

//கொமோரா எழுதின காலத்திலிருந்து சோபாவின் நண்பரான தருமு பிரசாத் நான் ஐரோப்பாவிலிருக்கும் புலி ஆதரவாளர்களிடம் பணம் வாங்கி இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் தனிமனித அவதூறில் வராதா?//

அது அவதூறோ இல்லையோ, தர்மு பிரசாத் அவதூறுக் காரர் என்பதில் முரணில்லை.

தர்மு பிரசாத்தின் இக்கடுரையைப் படியுங்கள் – இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்… (https://dharmupirasath.wordpress.com/2020/09/08/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/) –பழிவாங்கத் துடிக்கும் மனம் வசனமெங்கும் பொங்கி வழிவதை நீங்கள் பார்க்கலாம்.

நீலகண்டன் என்னை பற்றி மிகக் கேவலமாக எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்து பேரம் பேசிய நீங்கள் பேசவேண்டாம் என நான் எழுதி இருந்தேன். பேரம் என்றால் என்ன என்று ஒரு புண்ணாக்கு பொருளாதார விளக்கம் தரும் தருமு பிரசாத் என்னை நேர்மை அற்றவன் என நிறுவிக் காட்டுகிறாராம். அவர் படிப்பிக்க வரும் பொருளாதாரம் அப்பா டக்கர் அலட்டல். முப்பது புத்தகங்களுக்கு காசு தந்தால்தான் புலத்து எழுத்தாளரின் புத்தகத்தை போடுவேன் என கருப்பு பதிப்பக நீலகண்டன் பேசுவது பேரம் இல்லையாம் பொருளாதார நியதியாம், நியாயமாம். (இந்தப் பேரம்தான் அவர் என்னிடம் பேசினார் என நான் சொல்லவில்லை – இதை எழுதி இருப்பவர் தர்மு). புத்தகம் வெளியிட இவ்வாறு எழுதியவனிடமே காசு கேட்பது தவறு என மனுஷ்ய புத்திரனுடன் முன்பு பலர் அடிபட்ட கதை ஓன்று உண்டு ( அதை மறுத்து  மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார்). இந்த நடைமுறையை பேரம் எனச் சுட்டிய நான் ‘கொஞ்சமேனும் நேர்மை அற்றவன்’. இந்த கேவலக் குற்றச் சாட்டுக்கு தர்மு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை.

இதைவிடக் லேவலமாக என்னோடு அரசியல் ரீதியாக இயங்குவோரையும் – நான் இணைந்து இயங்கி வரும் அமைப்பையும் கூட விமர்சனம் என்ற பெயரில் மிக கேவலமாக தாக்கி உள்ளார் (நம்பாதவர்கள் கடுரையைப் படியுங்கள்). சாலைக் கும்பல் எனவும் ஏளனமாக தாக்குகிறார். சாலை கும்பல் என்பது அவர் தனது தலைவர் ஷோபாசக்தியிடம் பொறுக்கியது. அது பற்றி முன்பு ஒரு அடிபாடு நடந்து இருக்கிறது. எதிர் இணையத்தில் நீங்கள் அதைப் படிக்கலாம்.

இலக்கியம் தெரியாதவர்கள் என இவர் சொல்லுவது கஜன் – நடேசன் முதலானவர்களை. முகப் புத்தகத்தில் அவர்கள் நக்கலாக இவருடன் அடிபட்ட நோ தாங்க முடியாமல் இந்த வசவு செய்கிறார் எனக்கு. அவர்களின் முகப் புத்தக அடிபாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் இல்லை. தவிர தர்மு கற்பனையே பண்ண முடியா மாதிரியில் அழகான பகடி எழுதக் கூடியவர்கள் அவர்கள். அத்தகைய நக்கல் நளின முறை எழுத்தை தர்மு பிரசாத்தால் கற்பனையே செய்து பார்க்க முடியாது. அவரது வறண்ட எழுத்துக்கள் எதிலும் அது பார்க்க முடியாது, சும்மா பொறாமை – கோபம் என உணர்வுகளுக்கு இழுபட்டு வசை பாடுவது தவறு. அவர்கள் மாதிரி நக்கல் எழுதுங்கள் – ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் ரசித்துக் கொண்டு போகலாம். நட்சத்திரன் எழுதுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவரது நக்கல் ரசிக்க கூடியது. அந்தத் திறமை ஷோபாசக்திக்கு ‘வால்’ பிடிப்பதால் மட்டும் கைகூடாது. வால் பிடிக்காமல் அவர்மாதிரி கொஞ்சம் நக்கல் எழுதவும் பழகுங்கள்.

எனக்குத் தெரிந்து தர்மு பிரசாத்துக்கு பெரிய வாசிப்பில்லை. அவர் எழுத்துக்களில் அதைப் பார்க்க முடியாது. இன்னொரு அடிபாட்டின் பொழுது அடிப்படை அறிவே இன்றி இலங்கை யுத்தம் பற்றி –அது முடிந்த கதை பற்றி அவர் கிறுக்கி இருந்தார். அந்த விசர் விவாதத்தில் கலந்து கொள்ள மனம் இல்லாமையால் – தவறு என மட்டும் சொல்லி விலகி விட்டேன். இலங்கை யுத்தம் அழிவுக்கும் முடிவுக்கும் புலிகளே காரணம் என்பது இந்த அறிவாளியின் முடிவு. வேறு சக்திகள் எதுவும் அங்கு எந்த பின்னனியிலும் இல்லையாம். யுத்த முடிவு பற்றி மகிந்த குடுப்பம் முதலாம் வகுப்புக்கு பாடம் எழுதினால் அவர்கள் கூட இப்படி மடத்தனமாக எழுத மாட்டார்கள். இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு படிப்பு இல்லை – மூடர்கள் என ஏளனம் செய்ய என்ன தெனாவெட்டு வேண்டும் என ஜோசித்துப் பார்க்கிறேன். கஜன் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். ஒன்றையாவது வாசித்து… ஆபிரிக்காவில் நடந்த மாற்றமங்கள் பற்றியும் அவர் எழுதி உள்ளார் – இலக்கிய – சினிமா விமர்சனங்கள் செய்து உள்ளார். வாசிப்பவர்கள் எந்த தலை பெரிது என தீர்மானித்துக் கொள்ளட்டும். நீங்கள் அதை தீர்மானிக்க முடியாது தர்மு. நடேசனின் பங்களிப்பை லண்டனில் இருக்கும் முக்கால்வாசி தமிழ் சனம் அறியும். சுத்த சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டு எத்தகைய அர்ப்பணிப்புடன் இயங்குவார் மேல் வாரித் தூற்றுகிறீர்கள் என உங்களுக்கு தெரியவில்லை. அவர்களோடு நிதானமான எந்த ஒரு அரசியல் – தத்துவ வாதத்தையும் செய்ய வக்கின்றி வசை பாடுகிறீர்கள்.

இது தவிர தனது கட்டுரையில் கண்ட பாட்டுக்கு எனது நாவல் பற்றி பொரிந்து தள்ளி உள்ளார். எனது மொழி பிழை என நிறுவ ஒரு ஷோபாசக்தி பாலியல் வல்லுறவு எழுதிய உதாரணத்தை எடுத்துக் காட்டி – அதனால் செம்மை அடி வாங்கி – என அவர் நாறிய கதையும் உண்டு.

ஆனால் அதுகளை எழுத அவருக்கு உரிமை உண்டு. அவை கேவலமான பழிவாங்கும் மனநிலையில் எழுதப் பட்டிரிந்த போதும் நான் அவற்றில் பலதை அவதூறாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது மொழி மோசம் எனவும் – நான் திருப்பி மொழி கற்க வேண்டும் என்ற பாணியிலும் எழுதி இருக்கிறார். அதுவும் இருபதுவருசமாக எழுதிவருவதாம். இதே தர்மு தான் ஆசிரியராக இருக்கும் ஆக்காட்டியில் என்னைஒரு செவ்வி கண்டுள்ளார். அதில் என்ன சொல்லி இருக்கிறார் எனப் படித்துப் பார்க்கவும். (விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துக்களும் அரசியல் சார்ந்ததே– https://ethir.org/senan/?cat=13) .தனது கோப தாப மன நிலைக்கு ஏற்றபடி திணறி எழுதும் தர்முவிடம் நாம் மொழி படிக்க வேண்டிய தேவை இல்லை. அம்மா காலத்தில் இருந்து வித்தியாசமான மொழிகளைத் தேடி திர்வதே எனது பழக்கமாக இருந்து வந்திருக்கிறது – அது தொடரும். இதற்குள் நான் புராணம் மாதிரி எழுதி இருக்கிறேன் என்கிறீர்கள். புராணம் தான் தம்பி எழுதி இருக்கிறேன். உங்களுக்கு விளங்காததற்கு நானா பொறுப்பு. இது தவிர பின்வருமாறும் எழுதி உள்ளார்

// சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் நாவலில் பன்மைக்குரல் தன்மை இல்லவே இல்லை, அதில் ஒரே ஒரு குரல்தான் இருக்கிறது. அதுவும் எல்லாப் பிரச்சினைகளையும் தமிழ்- சிங்கள  இருமைகளாகவே நோக்க முடிகின்ற நோய்மைக்கூறுகளுடன் கூடிய சேனனின் உரத்த பிரச்சாரக் குரல்!//

எனக்கு கனக்க நோய்கள் உண்டு. என்ன நோய் பற்றி திட்டுகிறீர்கள் என சொல்லிவிட்டு திட்டுங்கள்.

இந்த வசைகள் எல்லாம் தேனாக தெரிந்த பலருக்கும் (ஷோபாசக்தி உட்பட) நட்சத்திரன் எழுதியது மாபெரும் அவதூறாக தெரிகிறது. என்னே மிதவாதக் கேவலம் இது. (ஐயோ என்னே என எழுதி விட்டேன் – இலக்கணப் பிழை)

ஆனால் மிதவாதம் இலக்கியத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என ஷோபாசக்தி துடிப்பது சமீப காலத்தில்தான்.

முன்பு அவர் கன வேலைகள் செய்துள்ளார். யமுனா ராஜேந்திரனை கடுமையாக தாக்கிய பொழுது – தனிநபர் விமர்சனம் செய்துள்ளார். தகவல் பிழைகளுடன் தாக்கி உள்ளார். அவற்றை சுட்டிக் காட்டிய பிறகும் பூசி மெழுகி சென்று விட்டரே தவிர இன்றுவரை தவறை ஏற்றுக் கொண்டதோ – யமுனாவிடம் மன்னிப்புக் கேட்டதோ நடக்கவில்லை.

முன்பு நான் சேரனை எடுத்த செவ்வியால் சேரனுக்கு மாரடைப்பு வரப்போகிறது எனச் சொல்லி (ஆசியர் அப்படிச் சொல்லவில்லை) வெளியிட மறுத்த பொழுது அதை நாட்டாமை என கையெழுத்துப் பிரதியில் வெளியிட்டு தமிழ்நாடு முழுக்க கொண்டு திரிந்து விற்றவர் ஷோபாசக்தி. சுகனின் ‘மதிப்பு மறுப்பறிக்கை’ கேவலமான கதை என வெளியிட மறுக்கப்பட்ட பொழுது அது வெளிவர வேண்டும் என அடிபட்டவர் அவர். கண்ணன்…தொடங்கி… இதுப்போல் நீண்ட பட்டியல் உண்டு. தயவு செய்து அத்தருணங்களில் ஷோபாசக்தி எழுதிய வசனங்களைப் படியுங்கள். நட்சத்திரன் பிச்சை வாங்க வேண்டி வரும்.

முன்பு ராஜேஸ்வரி பாலசுபிரமணியத்தை நேர்மை அற்றவர் என வசைபாடி இந்த சைத்தான் எப்படி மகளிர் அணி தலைவராக இருக்க முடியும் என எழுதி இருபார் ஷோபாசக்தி. இந்த விமர்சனத்தை (அம்மா இதழ்) படிப்பவர்கள் ஷோபாசக்தி குத்தும் விதத்தை அறிந்து கொள்ள முடியும்.

அது அப்ப- இது இப்ப என்று சொல்லலாம். கிளிண்டனில் இருந்து குமுதம் மாலன் வரை கம்யுனிசம் முடித்து போய் விட்டது என பேசுகிறார்கள் என கிண்டல் அடித்து எழுதிய ஷோபாசக்தி இப்ப ‘வளர்ச்சி’ அடைந்து விட்டார் எனச் சொல்லலாம்.

நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். நீங்கள் மிதவாதி ஆகி விட்டீர்கள். அன்று எவ்வளவு கேவலமாக் சில கருத்துக்களை இவர் தாக்கினாரோ அதே கருத்துக்களை தலையில் காவும் மிதவாதி ஆகி நிற்கிறார். அன்று தாக்கப் படவர்களிடம் மன்னிப்பு கேட்கும் நோக்கமும் இல்லை.

ஒரு ‘பிரபல’ எழுத்தளராக – கணவானாக நடமாட துடிக்கும் ஷோபாசக்தி தற்போது ஒரு சொட்டு விமர்சனம் என்றாலும் துள்ளி எழும்புகிறார். தான் புலம்புவது போதாது என தனது நட்பு வட்டம் – வால் வட்டம் – மற்ற எழுத்தாளர்கள் என எல்லாரையும் தன்னை காப்பாற்ற வலிந்து இழுக்கிறார் போல் தெரிகிறது. இந்தச் சந்தேகம் பழய அனுபவத்தில் இருந்து எழுகிறது. தற்போது ஷோபாவுக்காக எழுதும் சில எழுத்தாளர்கள் நேர்மையாக சொல்லுங்கள். நீங்கள் அநீதி கண்டு கிளர்ந்து எழுந்துகின்றீர்களா அல்லது ஷோபாசக்தி கேட்டதாலா? அத்தகைய நடைமுறைகளை விட்டு விடுவோம். அடிப்படை கருத்துக்களின் மோதலை செய்யப் பழகுவோம். தீவிர –சாதிக்க முடியாத கலைகளை சாதிக்க முயல்வோம். தோழமையுடன் – அதே சமயம் கருத்துக்களை விட்டுக் கொடுக்காது – தனிநபர் தாக்குதல் இன்றி உரையாடப் பழகுவோம். என்னை ஒருத்தரும் புடுங்க முடியாது என்ற வீராப்புக் கதைகளை விட்டு விட்டு வீராப்பை உருவாக்கத்தில் காட்டுங்கள்.

அவ்வாறு மாற முடியாத பட்சம் என்னை மல்லுக்கு இழுக்காதீர்கள், மனிசருக்கு வேலைப் பளு அதிகம். நான் தமிழில் எழுதுகிறேன் – எழுதுவேன் –ஆனால் உங்கள் ஊத்தை இழுபறிக்குள் வர முடியாது.

இந்தத் தமிழ் இலக்கிய உலகம் உருப்படப் போவதில்லை என தெரிந்தே விலத்தி இருக்கிறேன். முடிந்தால் ஏதாவது எழுதி – அதை நாலு பேர் படிக்கட்டும். மிகுதியை வரலாறு தீர்மானிக்கட்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *