தர்மம் அறியா – அ’தர்மு

தர்மு பிரசாத் என்ற தலைக்கனம் பிடித்தவர் ஒருவரின் நடைமுறை நமது ‘தமிழ் சனங்கள்’ மத்தியில் இருக்கும் அறியப்பட்ட நடைமுறைதான். சுற்றி இருப்பவர்களில் குறை பிடிப்பது – அவருக்கு  அறிவில்லை – இவருக்கு மூளை போதாது என தேவை இன்றி மட்டம் தட்டுவது. ஒழுங்கான விவாதத்துக்கு கேட்டால் பதுங்குவது. அவர்களுக்கு அறிவு போதாது அதனால் வாதிக்க மாட்டேன் என இறுமாப்பு பிடிப்பது, தட்டிக் கழிப்பது… சொல்லிக் கொண்டே போகலாம். இந்த இயல்புகளின் பின் இருக்கும் பிற்போக்குத்தனம் – அதிகார  தான் தோன்றித் தனம் – தன்னைச் சுற்றி உலகு உருளவில்லை என்பதை அறிய மறுக்கும் குருட்டுத் தனம் -ஆகியனவற்றை அவர்கள் அறிவதில்லை.

தாங்கள் செய்யும் வசை – வம்புகள் – புரட்டுகள் – அவதூறுகள் எல்லாம் அவர்களின் ‘அறிவின்பால்’ ஊறியவையாம்.  தப்பித் தவறி ஆராவது சுடுகிற மாதிரி இவர்களை ஒரு கேள்வி கேட்டால் போதும். துடித்துக் குதித்து இரத்தம் தலைக்கேறி – பதறி கலையாடிக் கத்துவர். தமக்கு ஏதோ பெரிய அநீதி நடந்து விட்டதுபோல் புலம்பித் தள்ளுவர் – புரட்டுகளில் இறங்குவர்.

புதிதாக எழுத வருவோர் இத்தகைய கீழ்மையைத் தாண்டி இயங்க வேண்டும் என பல தடவை சொல்லி வந்திருக்கிறேன். தர்மு பிரசாத் சொல்வழி கேட்கிற ஆள் இல்லாதது மட்டுமின்றி அதற்கு மேல் ஒரு படி போய் ‘சுத்த சைவ பச்சைப் பொய்’ சொல்கிற நபராகவும் இருக்கிறார். இவ்வளவு கீழ்மைத்தனமான தன்னைத் தானே ‘விமர்சகர்’ என சொல்லிக் கொள்ளும் ஒருவரை இதுவரை தமிழ் உலகு கண்டதில்லை எனச் சொல்லலாம்.

அவர் பின்வருமாறு ஒரு பச்சைப் பொய் எழுதுகிறார்:

// படைப்பைக் கொண்டு படைப்பாளியை மதிப்பிடுவதோ, அவருடைய தனி வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டு படைப்பை விமர்சனம் செய்வதோ இலக்கியம் அறிந்த யாரும் செய்வதில்லை.//

இதன்மூலம் தனக்கு இலக்கியம் தெரியாது என அவர் சொல்ல வருகிறார் என நான் புரிந்து கொள்கிறேன். ஏனெனில் இதைத் தொடர்ந்து பின்வருமாறு ஒரு பச்சைப் பொய்யை அவர் எழுதி உள்ளார் :

// சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்களுக்கு நான் எழுதிய கட்டுரையானாலும் சரி, லஷ்மி சரவணகுமாரின் கொமோரா, ரூஹ் இரண்டிற்கும் எழுதிய கட்டுரைகளானாலும் சரி, விமர்சனக் கட்டுரைகளானாலும் சரி (இவை இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன) அவற்றில் படைப்பு, படைப்பாளியின் கருத்துநிலை, அரசியல் செயற்பாடு தவிர்த்த அவர்களின் தனி வாழ்வு குறித்த ஒரு சொல்லாவது எழுதப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் தீர்க்கமான பதில்.//

இதோ அவரது கட்டுரை : — இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…( https://dharmupirasath.wordpress.com/2020/09/08/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/)

இந்த வஞ்ச கட்டுரையில் அவர் பின்வருமாறு ஒரு குறிப்பும் எழுதி இருப்பார் :

// சேனன் தான் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டத்தைத் திருப்திப்படுத்த, வசைபொழிய பூடகங்களையும், திரிபுகளையும் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகப்படுகிறது.//

// புரிந்து கொள்ள முடியாத இலக்கியம் அறியாத ஒரு கூட்டம் அவரைச் சுற்றி இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தேவையான பூடகங்கள், வசைகள், சர்ச்சைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற முனைப்பும் அவாவுமே சேனனின் கருத்துகளிலும், செயல்களிலும் பூடகமாக இருக்கிறது. அவரும், அவர் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின் பங்காளார்களோ, அரசியல் இயக்கத்தின் தன்னலம் இல்லாத செயற்பாட்டாளார்களோ இல்லை என்பது மட்டும் வெளிப்படையானது//

இது எந்த வகை புத்தக விமர்சனம்? இது எப்படி தனிநபர் தாக்குதல் இல்லாமல் – அவாதூறு இல்லாமல் இருக்கிறது ?

இது தவிர என்மேல் தர்மு நடத்திய ஏனைய தாக்குதல்கள் பற்றியும் இந்த கட்டுரையில் சொல்லி உள்ளேன் (தமிழ் இலக்கியம் உருப்பட்ட மாதிரித்தான் – https://ethir.org/senan/?p=1053)

இந்த திகிறுதாளங்களைச் செய்து கொண்டு தான் ஒன்னும் தெரியாத பாப்பா என்பது போலும் –தான் புரிநிலை வைத்து விமர்சிக்கும் உன்னத விமர்சகர் போலும் – ஒரு பாவனை செய்து முக புத்தக கமென்ட் அடிக்கிறார் தர்மு. பார்த்ததும் அசந்து விட்டேன். என்ன மனநிலை இது என என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. உங்கள் தரவளிகளுக்கு இது எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை சத்தியமாக என்னால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. புரட்டுகள் செய்வது – பிறகு செய்ததில் எந்த பிழையும் இல்லை எனப் பாவனை செய்வது – சிரித்தபடி கடந்து செல்வது – எந்த குற்ற உணர்வும் இல்லாமை. என்ன மனநிலையோ.

தர்மு மற்றவர்களை மிக மோசமாக ‘அறிவில்லை’ என்ற முறையில் திட்டுவதை முதல் நிறுத்துங்கள். நீங்கள் வழமையாக இந்தப் பேச்சு முறைகாரராக இருக்கலாம். ஆனால் அவ்வாறு எழுத  முடியாது தம்பி. எழுதினால் உங்கள் அறிவினை அளக்கும் கேள்விகள் உங்களை நோக்கி வருவதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

உங்கள் குருவின் மோசமான வாதிக்கும் முறையை அப்படியே பின்பற்றி நீங்கள் வால் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறீர்கள்.

பிவரும் கட்டுரையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டு இருக்கின்றன. (ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்http://ethir.org/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE/ http://ethir.org/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE/)

மேலிருக்கும் எந்த ஒரு அரசியற் புள்ளிக்கும் பதில் சொல்ல – வாதிட தர்முவால் முடியாது – (அவர் ஆசானால் அது முடியவில்லை அதனால் இருக்கலாம்)

அவர் சொல்லும் ‘சவலை’ வசவு பற்றியும் – சாலை பற்றி தவறாக புரிந்தமை  பற்றியும் இங்கு எழுதி உள்ளேன் (ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்https://ethir.org/sobasakthi2/). உங்களைப் போல் ஏற்றுக் கொண்டு வாதிக்க முடியாத விதண்டாவாத மர மண்டைகள் அல்ல நாம். ஆனால் அதன் பிறகும் என்ன எழுதப்பட்டிருகிறது என விளங்காது வசவை தொடரும் உங்கள் போக்கிரி மனநிலையை என்ன சொல்வது? இது உங்களுக்கு கேவலமாக தெரியவில்லை என்றால் – நீங்கள் மிக மோசமான ஆள் என்று நான் எழுதுவதில் எந்த தப்பும் இல்லை. உங்கள் சுய நலத்துக்காக உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக எதையும் செய்யக் கூடிய ஆள்தான் இவர் என நான் முடிவு கட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

கஜன் முதலானவர்கள் என்ன எழுதி புடுங்கினார்கள் என கேட்க முதல் நீவிர் எழுதி புடுங்கியதை பற்றி சிந்திக்கவும். அரசியல் – தத்துவ ஆழம் உள்ள – அத்தகைய தரிசனத்தை தரும் ஒரு கட்டுரையாவது எழுதிக் காட்டியது  உண்டா? ஒருவர் அத்தகைய கட்டுரையை எழுதியபின்தான் கேள்வி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இவர்கள் பாணி வேறு. தர்மு தன்னை முன் தள்ளி – தான் அவர்களை விடப் பெரிது எனக் காட்டவே இத்தகைய தாக்குதலைச் செய்கிறார். இந்த தான் தோன்றித் தனமான போக்கால்தான் உங்களை நோக்கி கேட்க வேண்டி இருக்கிறது – உங்களின் அறிவின் நீளம் உள்ள ஒன்றை காட்டுங்கள் – பிறகு பேசுவோம். தெற்காசிய அரசியலின் ஒரு அடிப்படையும் தெரியாது அலட்டும் நீர் – அரசியற் பொருளாதாரத்தின் பாலர் பாடம் புரியாத நீர் – எவ்வாறு இத்தகைய பெரும் மண்டை கணத்துடன் மற்றவர்களை தாக்க துணிந்தீர்? அதன் மூலம் உம்மை முன் தள்ள துணிந்தீர்? கேவலமான நடைமுறை. கூச்சமாக இல்லை ?

கஜன் எழுதுவது வெறும் தகவல் என்று சொல்லும் நீங்கள் அரசியற் கட்டுரை படித்து பழக்கம் இல்லாதார் போலும். இந்த கட்டுரையை படிக்கவும் –( சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் – எதிர் (ethir.org)) இதில் பல்வேறு தனித்தன்மையான புள்ளிகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன – அந்த தனிப் புள்ளிகள் எவ்வாறு நீங்கள் சொல்லும் தகவல் தரும் ஊடகங்களில் இருந்தன எனச் சொல்லிக் காட்டவும்.

இது தவிர கள நிலவரம் சார் விபரங்களும் உண்டு. படியுங்கள்.

குறிப்பு

இவ்வாறு எழுதுவது பிரியோசனமற்றது –நேரம் விரயமனது -மனச் சோர்வு தருவது என நண்பரகள் சொல்ல வருவார்கள் என்று தெரியும்.

சமீப காலமாக மிக கேவலமான பொய்கள் –புரட்டுகள் – தாக்குதல்களை என்மேல் சிலர் செய்து வருகிறார்கள். நான் சம்மந்தப்படாத விசயங்களில் கூட என்னை இழுத்து தாக்குகிறார்கள். எனது இடதுசாரிய நிலைப்பாடு ஒரு காரணமாக இருக்கலாம். அதையும் தாண்டி தங்கள் தங்கள் பிழைகளை – ஊத்தைகளை மறைக்க இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள் என நினைக்கிறேன். இவர்களில் யாரும் உருப்படியான ஒரு விவாதத்தைச செய்த எந்த வரலாறும் இல்லை. இவர்களுக்கு இத்தகைய அடிபாட்டு மொழி மட்டுமே தெரியம். அவர்கள் மொழியில் பதில் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.