பகிரங்க வேண்டுகோள்
அம்மா இதழ் 13 தை 2001
எல்லோருடய நன்மைக்காகவும்-ஒரு நனவிடைதோய்தலை துலைத்தேனும் எஸ்.பொ. வை ஏறக்கட்ட வேண்டியிருப்பது எல்லா குஞ்சு குருமான்களினதும் இன்றய கடமையாயிருக்கிறது.
சும்மா எஸ்.பொ. வை தூசுதட்டிவிட்டு போகமுடியாது என்று எங்களுக்கு நல்லா தெரியும். ஆண்மையை படிச்சு அழு அழு என்று அழுதகண் இன்னும் ஆறவில்லை. (புத்திர சோகத்திற்கும் மேலான சோகமில்லை என்பது அசோகன் இல்லை எஸ்.பொ.)
என் செய்வோம்! சிவரமணிக்கு, செல்விக்கு மற்றும் மரனித்த தோழர் தோழிகளுக்கு ‘பெண்மை’ எழுதி ‘ஆண்மை’ எழுதி எம்மை அழவகை;க வைராக்கியமும், திமிரும், அறிவதிகாரமும், எழுத்து ஊழியமும் உள்ள அப்பன், ஆத்தை இல்லாதது ஒரு பெரிய வெக்கக்கேடு.
அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த ‘புண்ணாக்கு நற்போக்கு’ நல்ல திமிரோடு மார்தட்டி நிற்கிறது.
இருட்டடிப்பு இருட்டடிப்பு என்று ஒப்பாரியிட்டு தன்னை தலையில் காவவில்லை என்று ‘முற்போக்கு’ தலைகளை உருட்டிய எஸ்.பொ. தான் இல்லை என்றால் டானியலும் இல்லை, ஜுவாவும் இல்லை என்று பச்சைபொய் சொல்லி இறுமாப்புறும் எஸ்.பொ. ஞானம் ஆத்மீக வெளிச்சம் என்று ‘பெரிய விசயங்களின்’ பெயரில் படங்காட்டும் பாரம்பரியத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
அவர் வைரமுத்துக்களோடும், சுihத்தாக்களோடும் கண்ணாம்பூச்சி விளையாடுவது பற்றி எமக்கு ஒரு அக்கறையுமில்லை. விரல்சூப்பிய காலத்தில் நாம் வைரமுத்துவை காதலித்திருக்கலாம். ஆனால் இன்று அவை பொருட்டல்ல. ஆனால் அதுகளை இதுதான் தமிழ்நாடு என்று காவிக்கொண்டுவந்து எமக்கு தமிழ்நாடு காட்டவேண்டாம். நாமொணன்றும் செவ்வாய்கிகத்தில் இல்லை. உடனடியாக யமுனா இராஜேந்திரன் மறுப்பு தெரிவித்ததற்கும் எந்தவித பலனுமில்லை.
சும்மா புலம்பெயர் இலக்கியம் என்று புலம்பிக்காட்டவும் வேண்டாம். எஸ்.பொ. வுக்கு புலம்பெயர் இலக்கியம் என்றால் என்னவென்று ஏதாவது தெரியுமா என்று நியாயமாக கேட்கிறேன். பெறாமகன் கலாமோகனை தவிர வேறு எந்த படைப்புக்கள் பற்றியாவது- படைப்பாளிகள் பற்றியாவது எங்காவது எழுதியிருக்கிறாரா எஸ்.பொ.? புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லாடலே ஒரு பிதற்றல் என்று உருவாகிக்கொண்டிருக்கும் காலத்தில் வைரமுத்துவை காவிக்கொண்டுவந்து ‘நாங்கள் யூதர்கள் மாதிரி’ என்று வெக்கமில்லாமல் நெஞ்சுநிமித்தி கூறுகிறார்.
இங்கிலாந்து வாழ் யூதர்களே தங்களை யூதர்கள் என்று கூற கூச்சப்படும் காலம் இது. பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு மயிரும் தெரியாது. அவர்களுக்கு முஸ்லிம்களை ஒடுக்க ஒரு யூத காரனம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் முஸ்லிம்களை ஒடுக்க காரனங்கள் தேவைப்படுகிறது. கூட்டத்தில் ஒரு முஸ்லிம் நன்பர் நியாயமாக கேட்க முனைந்த கேழ்வி முடக்கப்பட்டது. ஆத்திர அலைகள் எழுந்து பொசுக்கியது. இந்தமாதிரியான ஒரு பொறுக்கி தேசியவாதத்தை பொறுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் யாருக்கேனும் இருப்பின் அதன் அடிப்படை இரகசியம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும்…
கண்டபாட்டுக்கு கருத்துவிட்டு, புத்தகம் விக்க இங்குவந்து எங்கள் வேதனைகளை கிளறவேண்டாம். பாசிசத்தில் குளிர்காய்ந்தவர்கள் வரிசையில் எஸ்.பொ. வை வைத்து எதிர்காலம் பூசித்தள்ளும்.
உங்களால் முடிந்தளவு ஒன்றோ, பத்தோ எழுதி எல்லோரும் எஸ்.பொ.வுக்கு தர்ம அடி வழங்கும்படி மிகவும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.