Category: நேர்காணல்கள்

விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துக்களும் அரசியல் சார்ந்ததே

– ஆக்காட்டி இதழ் 12 – யூலை –செப் 2016 தொண்ணுாறுகளில் பாரிஸில்   ‘அம்மா’, ‘எக்ஸில்’ இதழ்களில் கலகக்குரலாக ஒலித்தவர் சேனன். அவ்விதழ்களில் விளிம்புநிலை உரையாடல்கள் தனித்துவமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதியவர். ‘அம்மா’வில்  கதைகளையும்  மொழிபெயர்த்துள்ளார்.   இவரின் சிறுகதைகள் மையம் சிதைக்கப்பட்டவையாகவும், கட்டமைக்கப்பட்ட திருவுருக்களைக் கவிழ்ப்பதாகவும் இருப்பவை. அதிக விவரணைகளற்ற நேரடியான மொழியில் கதைசொல்லும்  அக்கதைகள் சொல் முறையினாற் தனித்துவமானவை. வழமையான தொடக்கம் – நடு – முடிவு என்ற தமிழ்க் கதைகளின் சட்டகங்களிற்குள் அடங்கிவிட முடியாதவை. இந்தக் கதை சொல்லல் முறையிலிருந்து விலகித் துண்டுபிரசுரத்திற்கு அணுக்கமான மொழியில் அண்மையில் இவர் எழுதிய ‘லண்டன்கார்’ நாவல் இலங்கைச் சூழலில் அதிகம் கவனிப்பிற்குள்ளாகியது. லண்டன் கலவரமும் அதன் விளிம்புநிலை பங்காளர்களான உதிரிப்பாட்டாளிகள், புலம்பெயர்ந்த கருப்பர்கள், தற்பாலின விருப்பாளர்கள் என்பவர்கள் பற்றிப் பொதுமனநிலை கவனத்திற் கொள்ளாத கதையாடல்களை ‘லண்டன்காரர்’ நாவலிற் கவனப்படுத்தியிருக்கிறார்.  தற்போது பிரித்தானியாவில் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும்  உரையாடல்கள் எனத் தீவிரமாக தொழிலாளர்களது உரிமைக்காக செயற்பட்டு வருகிறார். ஆயினும், இலக்கியமே தனக்கு உவப்பான அடையாளமெனத் தொடர்ந்தும் சிறுபத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் அரசியற் கட்டுரைகளை எழுதும் சேனன்  HISTORY OF RESISTANCE என்ற இலங்கை அரசியல் வரலாறு தொடர்பான நுாலையும் எழுதியுள்ளார்.‘கொலை மறைக்கும் அரசியல்’ , ‘இனத்துவேசத்தின் எழுச்சி’  ஆகிய கட்டுரைத்தொகுப்புகளையும் ‘லண்டன்காரர் ’  என்ற நாவலையும் தமிழில் தந்திருக்கிறார்.  இவரைப் பாரீஸ் நகரில் கடந்த மார்ச் மாத மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம். அவருடனான உரையாடல்கள் எதையும்  தயக்கமின்றிக் கேள்விகேட்கவும் எது பற்றியும் பேசவும் நமக்கான இடத்தைத் தந்தது. அதன் தொடர்ச்சியாக ஆக்காட்டி குழுவினர்  மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி ஊடாகவும்  இந்நீள் உரையாடலைத் தொகுத்தோம்.   1.நாங்கள் இதிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றோம். நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக்கூடாது? இந்தக் கேள்வியைத்தான் நானும் கனகாலமாகக் கேட்டுக்கொண்டு திரிகிறேன். நாவல் என்றால் என்ன? என்பது பற்றிக் குழம்பிக்கொண்டிருக்கும்...

ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்

Thesamnet- Interview by Jayapalan விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை...

தேர்தல் களம் : கேள்வி பதில்

Interview by thesamnet திருகோணமலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோருகின்றனர். சில கீபோட் புரட்சியாளர்களும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். மக்களுக்கு நியாயமான தெரிவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்ற அரசியலால் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்ற பலமான வாதமும் உள்ளது. ஏன் 2015 பாராளுமன்றத்...

சத்தியசீலனின் அனுபவம்

1படுகொலைகளுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் காரணமான இலங்கை அரசுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த முப்பது வருடகாலத்துக்கும் மேலாக நிகழ்ந்த ஆயுதப்போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தது இவ்வரசு. இந்நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கப்படக்கூடாது என்பதை காரணம்காட்டி பலர் மகிந்த அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் –...

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” -வல்லினம் நேர்காணல்

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) http://www.vallinam.com.my/issue24/interview3.html சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘அம்மா’, ‘எக்ஸில்’ ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர்....