விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று

விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை.
ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது.

தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என முடிவுக்கு வருவதற்கு இந்த அனுபவங்கள்தான் காரணம்.

உருப்படியாக உரையாடல் அல்லது வாதத்தை நடத்துவதானால் சில “கட்டுப்பாடுகளை” நாம் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். அவற்றில் சில வருமாறு

1. அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதை அவதானித்துப் பதில் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லியிருக்கிறார் என்ற கற்பனையிலோ – அல்லது அப்படிச் சொல்லியிருப்பார் என்ற கற்பனையிலோ பேச முடியாது. சொன்ன விசயத்தைத் திரித்துப் பேசுவதில் பலனில்லை.

சொன்ன விசயத்தை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை என எதிர்த்து வாதிடுபவர் விளக்கம் தந்தால் – அதில் நியாயம் இருந்தால் ஏற்றுக்கொள்வது வாதத்தை செழுமைப்படுத்த உதவும்.

2. ஒரு புள்ளியை விவாதிக்கும் பொழுது அதை விட்டு விட்டு வேறு ஒரு புள்ளிக்குத் தாவி வாதத்தைத் திருப்புவது தவறு.

நீ சொல்லிறதச் சொல்லு நான் சொல்லிறதத் தான் நான் சொல்லுவன் என வாதிடுவது தவறு – இவ்வகை விவாதம் அங்கு தாவி…. இங்கு தாவி… பறந்து திரியுமே தவிர ஒரு முடிவுக்கும் வந்து சேராது.

3. விவாதத்தின்போது வைக்கப்படும் ஒரு புள்ளியை வேறு சம்பந்தமே இல்லாத புள்ளியால் தாக்கி வென்றுவிடலாம் என முயற்சிப்பது அதிகாரத்தைச் செலுத்தும் நடவடிக்கை.

உதாரணமாக மொழி சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட புள்ளியை எதிர்க்க தேசியம் சம்பந்தமான வேறு புள்ளியைக் கொண்டுவர முடியாது. பல புள்ளிகள் இணைப்புக் கொண்டவை. விவாதத்திற்குத் தேவையான புள்ளிகள் இணைக்கப்படத்தான் வேண்டும். ஆனால் அது விதண்டாவாதத்துக்காக கொண்டு வந்த புள்ளியாக இருக்கக் கூடாது.

4. விவாதத்தின்போது ஒரு புள்ளி பிழை எனச் சுட்டிக் காட்டப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வது அவசியம். பிழையை ஏற்றுக் கொள்வதால் ஒருவரும் சிறுத்துப் போய்விடுவதில்லை. என்னதான் விதண்டா வாதத்தால் அடிச்சு நிமித்த முயன்றாலும் தவறு தவறுதான். உலகம் தட்டை என்று வாதிடுபவர்களுடன் வாதிடுவதில் எந்தப் பயனுமில்லை.

தவறை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் காலம் கழித்தாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். கண்டும் காணாமல் விட்டுவிடுவதால் பொய் உண்மையாகிவிடாது. தவறு சரியாகிவிடாது. பூனை கண்மூடிப் பால் குடிப்பதுபோல் தங்கள் தங்கள் உலகத்துக்குள் முடங்கிக் கொள்வது எவ்விதத்திலும் வாதத்தை முன் கொண்டு செல்ல உதவாது. ஒரு விசயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்வதாலும் அது சரியாகி விட முடியாது.

5. விவாதம் சரிவரவில்லை எனத் தெரிந்ததும் தனிநபர் தாக்குதலில் இறங்குவது தவறு.

நகைச்சுவையாக – நளினங்களுடன் – பகிடிகளுடன் வாதிப்பது அழகு. குறிப்பாக ஈழத்து எழுத்தாளர் மத்தியில் இதை அதிகமாகக் காணலாம். இது வாதங்களைச் செழுமைப்படுத்தும் – சில சமயம் அறிதலையும் அதிகப்படுத்தும். ஆனால் அனாவசியத் தாக்குதல்களைச் செய்து தங்கள் பிழைகளை மறைக்க முயல்வது தவறு.

வாதத்தின்போது ஒருவரைக் கடுமையான சொற்களால் தாக்கினால் – அவரிடம் இருந்தும் அத்தகைய சொற்கள் திரும்பி வரும் என்பதை எதிர்பார்க்க வேண்டும். அடுத்தவர்கள் மேல் கடுஞ்சொற்கள் பாவனை செய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற போக்கில் நடந்துகொள்வது தவறு. அது வாதத்தைச் சண்டையில் கொண்டுபோய் முடிக்கும்.

6. உணர்ச்சி வசப்படுதல் இயற்கைதான் – இருப்பினும் விவாதம் தொடர்வதானால் பல்லைக் கடித்துப் பொறுமையாகப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். இல்லையானால் இது கைகலப்பு நிலைக்குத்தான் நம்மை இட்டுச் செல்லும்.

7. ஒரு விவாதம் நடை பெறும்பொழுது – குறிப்பாக பலர் இவ்விவாதத்தில் ஈடுபடும்பொழுது – அதிலும் குறிப்பாக இது நேருக்கு நேர் நிகழும் பொழுது அனைவருக்கும் பேச அனுமதி வழங்கப்படவேண்டும். யார் சொல்வதைப் பற்றியும் கவலையில்லை என ஒருவர் மட்டும் கத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. அதே போல் எல்லோரும் ஒரே நேரத்தில் சேர்ந்து கத்துவதிலும் பயனில்லை. இதனால்தான் விவாதத்தை வழிநடத்துனர் ஒருவர் இருத்தலும் – அவரது சொல்லை மற்றவர் கேட்பதும் உதவியான செயற்பாடு. வழிநடத்துபவர் அனைவருக்கும் சமமான நேரம் வழங்க வேண்டும். சில சமயங்களில் ஒருவர் கூடப் பேசலாம் – சில சமயம் ஒருவருக்குப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம். வழிநடத்துபவர் அல்லது மற்றவர் தலையிட்டு இதைச் சுட்டிக் காட்டி நெறிப்படுத்தலாம்.

ஆனால் இத்தகைய நெறிப்படுத்தலில் சில குறைபாடுகள் உண்டு. எதிர் நிலை வாதாடுபவர்கள் சிறுபான்மையாக இருப்பின் பேசுவோர் நேரத்தைச் சமமாக பிரிப்பது சிறுபான்மைக் கருத்துக்கான நேரத்தைக் குறைத்து விடும். இதுவும் கவனத்திற்கொள்ள வேண்டும். அதே போல் சிலர் குறிப்பிட்ட முக்கிய புள்ளிகளை முன்வைத்துப் பேசுவர்- சிலர் வேண்டுமென்றே பல அலட்டல்கள் செய்வர். இது வீணாக நேரத்தை விரயம் செய்யும் வேலை. இதுவும் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

8. வாதத்தை வெல்வதற்காக அடுத்தவர்களைத் தூண்டி விட்டுச் சுறண்டிக் குளிர்காயக் கூடாது. கட கடவெனத் தொலைபேசியில் அழைத்துப் பதில் ஆட்கள் மூலமாக வாதாட்டத்தை நடத்துவதும் – அடுத்தவர்களைச் சேகரித்து அலுப்புக் கொடுப்பதும் சரியல்ல.

9. சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே நிற்க முடியாது. இது மீண்டும் சக்கரத்தைக் கண்டு பிடிக்கும் வேலை என ஆங்கிலத்தில் சொல்வர். குதிரையைத் தண்ணி குடிக்கக் கூட்டிச் செல்லலாமே தவிர அதற்கு தண்ணீர் குடிக்கவும் கற்றுக் கொடுக்க முடியாது என்றும் பழமொழி சொல்வர். என்னதான் சொன்னாலும் சிலர் நகரப் போவதில்லை. அங்கு விவாதம் முற்றுப்புள்ளிக்கு வந்துதான் ஆகவேண்டும். ஹிட்லர் காலத்தில் படுகொலை நடக்கவில்லை – அல்லது ஸ்டாலின் மாவோ காலத்தில் கொலைகள் நடக்கவில்லை என்று வாதிடுபவர்களுடன் எப்படி விவாதத்தைத் தொடர்வது? இதுபோல் மனிதகுலம் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் அறிதல் பல உண்டு. இந்த அடிப்படைகளையே இல்லை என்று வாதிடுபவர்களுடன் பேசுவது கடினம். முடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

10. நீ பெரிது! நான் பெரிது! எனக் கருத்தோடு ஒதுங்குதலும் ஒதுக்குதலும் தவறு. இது பற்றி ஈ.வெ.ரா பெரியார் அவதானித்து எழுதியிருக்கிறார். பல பெரியவர்கள் கண்டு கொண்ட குறைபாடுகளை நாம் நிவர்த்தி செய்ய வேண்டாமா?

2. இரண்டு

சமீபத்தில் நான் ஆக்காட்டிக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

பலருக்குச் சினமூட்டக்கூடிய கருத்தாக இருப்பினும் சில விசயங்களை தெட்டத் தெளிவாக – வெளிப்படையாகப் பேசியாக வேண்டியிருக்கிறது. தமிழில் மட்டும் படிக்கும் ஒருவர மார்க்சியத்தை அறிந்துகொள்வதோ – அல்லது சோசலிசம் என்றால் என்ன என்பது பற்றிய விஞ்ஞானபூர்வ விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதோ சாத்தியமில்லை. ஏராளமான பிழையோடு இருக்கும் மொழி பெயர்ப்புகள் – தங்கள் தங்கள் புரிதிதலுக்கு ஏற்ப விளங்கிக்கொண்ட அரை குறை விளக்கங்கள் என்பவைதான் மலிந்து கிடக்கின்றன. கடுமையான உரையாடல்களுக்கு உட்படாத மொழி பெயர்ப்புகள் நிகழும்பொழுது இப்பிரச்சினை எழுகிறது. ஆங்கிலத்தில் இருக்கும் மார்க்சிய மொழி பெயர்ப்புகள் பல உரையாடல்கள் – ஆய்வுகளுக்கு உட்பட்டுத்திருத்தப்பட்டவையாக இருக்கின்றன. அப்படியிருந்தும் பல பிரச்சினைகள் இருக்கிறது. தமிழில் இது பற்றி எந்த உரையாடல்களும் நிகழ்வதில்லை. இந்தப் போதாமை இடது சாரியமொழியையே சீரழித்துள்ளது. nhமாழிபெயர்பு மொழியில் எழுதுவது இடதுசாரிய மொழியாக இருக்கன்pறன. சில கறாரான ஸ்டாலினிஸ்டுகள் எவ்வாறு ஆணாதிக்க மொழியில் எழுதுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.”

புலம்பெயர் இலக்கியச் சூழலில் நன்கறியப்பட்ட  ஜீவமுரளி இதற்கு எதிராகப் பின்வருமாறு விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

“தமிழில் மட்டும் படிக்கும் ஒருவர் மாக்சியத்தை அறிந்துகொள்வதோ அல்லது சோசலிசம் என்றால் என்ன என்பது பற்றிய விஞ்ஞான பூர்வவிளக்கத்தை பெற்றுக்கொள்வதோ சாத்தியமில்லை.

தமிழில் மொழிபெயர்ப்புகள் எல்லாம் தவறாகவே உள்ளன.

ஆக்காட்டியில் லண்டன் காரர் . சேனன் .

ஆக அந்தந்த மொழியில் வந்த இலக்கியங்களையும் தத்துவங்களையும் ஆழமாக அறியவேண்டுமானால், இங்கிலீசில் மட்டும் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்.

மூல மொழியில் வாசித்தால் கூட சிலவேளைகளின் தவறாக புரிந்து கொள்வீர்கள்.

மாக்ஸ் தோன்றுவதற்கு முன்பே மாக்சியம் இருந்தது. விஞ்ஞானம் என்ற சொல் தோன்றுவதற்கு முன்பே விஞ்ஞானம் இருந்தது. மொழிபெயர்ப்புகள் தோன்றுவதற்கும் முன் மாக்சியவிஞ்ஞானமும் இருந்தது

கடாபி ஒரு சர்வாதிகாரி என்று மொழிபெயர்த்து சொல்லுகிற தமிங்கில மாக்சியர்களும், தமிழ் தேசியவாதத்தில் முற்போக்கு இருப்பதாக மொழிபெயர்க்கின்ற மாக்சியர்களும், பட்டிகாட்டானுக்கு இங்க்லீசு முட்டாசுக்கடை காட்டுகின்ற அளவில் மட்டுமே இருக்கினார்கள்.

இந்த தமிங்லீசு மாச்சியர்களின் சிந்தனை முறை தமிழால் செயப்படுகின்ற அறிவியலை மறுக்கின்றது. அதன் எதிர் முரண்நகையாக, தமிழ்தேசியவாதத்தை , பச்சை இனவாத கருத்தியலில் இருந்து தமிழுக்கு முற்போக்கனதாக மொழிபெயர்க்கின்றது.

தனக்கெடா மாக்சியம் பிடரிக்கு சேதம் விளைவிக்கும்”

இதைத் தொடர்ந்து பின்வரும் கருத்துகளும் வைக்கப்பட்டுள்ளன.

கணன் சுவாமி “ஒரு மொழி ஒரு கருத்தியலை சரியாக கொண்டு சேர்க்கமுடியவில்லை என்பது மகா மட்டமான தெளிவு.! எந்த மொழியா இருந்தாலும் அதுவும் மாக்ஸியம் போல் மிக தெளிவான சித்தாந்தத்தை பொட்டிலடித்தாற்போல் சொல்லிட முடியும்.”

Paramsothy Kandaiah   “உம்முடைய கருத்து மோசமானதும் விஞ்ஞான பூர்வமற்றதுமாகும் ஒருவனுடையதாய்மோழிதான் புரிதலுக்கு இலகுவானது என்பதாக சமூகவிஞ்ஞானம் சொல்கிறது”

Rubasangary Veerasingam Gnanasangary  “அது பெரும்பாலும் உண்மை. common sense don’t have languages”

Sinnakuddy Mithu  “எனக்கு தெரிஞ்ச வரையில் ..ஊரிலை அந்த காலம் தமிழ் எழுத படிக்க தெரியாதவங்கள் பல பேர் கூட உந்த மாட்க்சியத்துக்கு சரியாக பொழிப்புரை சொல்லுவாங்கள்

நீங்க வேற

ஆங்கிலத்தில் தான் மாட்கிசியம் படிச்சிருக்கோணும் கட்டாயம் என்று சொன்னால் ரொம்ப சிரிப்பாங்கள் உங்களை பார்த்து..”

Thirumeni Gt  “தமிழீழ தேசிய விடுதலைப் போரில் களமாடியவர்களுக்கு இந்த சிந்தனை எழாது!

வேடிக்கை பார்த்த,அந்நிய சக்திகளின் பிதற்றல்கள் இவை.”

Kalai Marx  “ஜேர்மன் மொழியில் மூலப்பிரதிகள் உள்ளன”

Thirumeni Gt  “அந்த மூல நூல்களை எல்லாம் ஆங்கில மொழியின் மூலமாக படிக்க வேண்டுமாம்!”

“சமூக அறிவியல் மார்க்சியம். மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகள் (1) தத்துவம் அதாவது இயங்கியல் பொருள்முதல் வாதம்+வரலாற்றுப் பொருள்முதல்வாதம், (2) மார்க்சிய அரசியல் பொருளாதாரம், (3) விஞ்ஞான சோசலிசம்.

இவற்றை அவரவர் தாய்மொழியில் தான்,தாய்மொழியில் மட்டும் தான் படிக்க வேண்டும் என மார்க்சிய-லெனினியமே கூறுகிறது.

தாய்மொழிக்கல்வியே சிறந்தது,ஒரு மொழிக்கொள்கையே மார்க்சியக் கொள்கை.

சீனத்தின் மாவோ தாய்மொழி வாயிலாகவே மார்க்சியத்தை பயின்றார்.

.சீனத்தை செஞ்சீனமாக மாற்றினார்.மாவோவின் சிந்தனை குருசேவின் திரிபுவாதத்தை,கலைப்பு வாதத்தை முறியடித்தது.சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் ,யுத்ததந்திர,செயல்தந்திர பொதுவழியை வகுத்தளித்தார்.

பிற்போக்கு நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய தேசிய முதலாளித்துவம் முற்போக்கானதே! சாதி,தீண்டாமை,மதம் போன்ற நிலவுடைமை கலாச்சாரத்தை முதலாளித்துவ ஜனநாயக வழியிலேயே கடந்தாக வேண்டும்.

மூலதனக்குவிதல்(யஉஉரஅரடயவழைn ழக உயிவையட)வரலாற்றுக் கட்டத்திலிருந்து மூலதனமையப்படுத்தல் ( உநவெசயடணையவழைn ழக உயிவையட) கட்டத்திற்கு மூலதனம் மாறிவிட்டது. இப்போது ஏகபோக நிதிமூலதனமாக,மூலதனம் மாறிவிட்டது. ஆனால் இப்போதும் தேசிய முதலாளித்துவம் முற்போக்கானதே!

உலகத்தின் சாளரம் ஆங்கிலம் என்ற கதையெல்லாம் மார்க்சியத்தால் பழங்கதையாச்சே!

இது தவிர………..”

Villa Anandaram   கோசிமின்னிடமிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் – சம்பந்தமே இல்லை. இன்னுமொருவர் வாதத்தை பின்வருமாறு வெற்றிகரமாக நகர்த்தியிருக்கிறார்.

Chinniah Rajeshkumar  “அப்ப லண்டன் காரரை இங்கிலீசிலை எழுதியிருந்தால் நாவலா வந்திருக்குமோ .”

3 மூன்று

மேலே குறிப்பிட்டிருக்கும் பலர் முரளியின் குறிப்பை மட்டுமே தலைமேல் வாக்காக கொண்டு கருத்துச் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். தயவு செய்து ஆக்காட்டி வாங்கிப் படித்து பின்பு எழுதுங்கள்.

முரளி செய்திருக்கும் திரிப்பு மிக மோசமான திரிப்பு.

1. மொழி பெயர்ப்பில் அறிதல் சாத்தியமில்லை – என எங்காவது சொல்லியிருக்கிறேனா?

தமிழ் மொழி பெயர்ப்புகளைத்தான் தாக்கி பேசியிருக்கிறேன். தவிர ஆங்கில மொழி பெயர்ப்புகள் பல உரையாடல்களுக்குள்ளால் திருத்தப்பட்டு வரும்போதுகூட தவறுகள் நிகழ்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். மாக்ஸ் ஈஸ்ட்மனின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்துப் பாருங்கள். அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். அதில்கூட பல தவறுகள் இருக்கின்றன என பின்பு விவாதங்கள் மூலம் திருத்தப் பட்டிருக்கின்றன. தமிழில் இத்தகைய உரையாடல் எதுவுமில்லை. குறிப்பாக இடதுசாரியப் புத்தகங்கள் மிக மோசமாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை ஆணாதிக்க – பிராமணிய மொழியில் இருப்பதையும் அவதானிக்கலாம். ஏங்கல்சின் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நூலின் மொழி பெயர்ப்பு மொழியைக் கவனித்துப் பாருங்கள். இது பற்றி முன்பு அம்மாவில் எழுதியிருக்கிறேன். மூலதனம் ஒழுங்காக மொழி பெயர்க்கப் பட்டிருந்தால் தியாகு வேலை மினக்கிட்டு மீண்டும் மொழி பெயர்ப்பைச் செய்யும் நிலை வந்திருக்காது. தியாகுவின் கடுமையான உழைப்பில் இலகுபடுத்தப்பட்ட இந்த மொழி பெயர்ப்பிலும் பல பிழைகள் உள்ளன. குறிப்பாக அரூப உழைப்பு பற்றி மார்க்ஸ் எழுதிய பகுதியை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். Nஐர்மன் மொழியில் இருக்கும் ஓப்கேபன் என்ற சொல்லுக்கு சரியான மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் இல்லை என்று தற்போது பலர் அந்த மூலச் சொல்லை பாவித்து எழுதுவதை பார்க்கலாம். பிரெஞ்சு சொல்லான டிபரன்ஸ் அத்தகைய இன்னுமொரு சொல். உழைப்புச் சக்தி என்ற சொல்லை ஏங்கல்ஸ் மார்க்ஸ் பாவனையில் திருத்தியிருக்கிறார். எல்லா ஆக்கங்களிலும் அது திருத்தப்படவில்லை. தனது Nஐர்மனிய மூலத்தில் பிழைகள் இருப்பதால் திருத்திய பதிப்பான பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் படிக்கச் சொல்லி மார்க்சே ஒரு முறை எழுதியிருக்கிறார்.

விசயம் அப்படியிருக்க நமது தமிழ் இடதுகள் சில மட்டும் புனிதம் பேசுவது எதற்கு?

2. “அந்தந்த மொழியில் வந்த இலக்கியங்களையும் தத்துவங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் இங்கிலீசில் இருந்து மட்டும் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்” என எங்கு எழுதியிருக்கிறேன்? முரளி நான் தமிழில்தானே எழுதியிருக்கிறேன்? உங்களுக்கேன் புரியவில்லை? தாய் மொழிக் கல்விக்கு ஆதரவாக பேசி வருவதாற்தான் மொழிபெயர்ப்பு பற்றி அதிக கவனத்துடன் பேசுகிறேன். எல்லா விஞ்ஞானக் கல்வியும் ஒரு கட்டத்தின் பின்பு ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ தான் தொடர வேண்டியிருக்கிறது. யப்பான், Nஐர்மன் ஆகிய மொழிகளில் இருக்கும் நுட்பம் நுணுக்கம் இன்னும் தமிழில் வளரவில்லை. நான் பங்குபற்றும் இடதுசாரியச் சர்வதேச அமைப்பு ஏறத்தாழ 50 நாடுகளில் வேலை செய்து வருகிறது. சில சர்வதேச கூட்டங்களில் நாம் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பைச் சமாந்திரமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. பல ஆண்டுகளாக மொழி பெயர்ப்பைச் செய்யும் தோழர்கள் பலர் திணறுவதும் தெரிந்துதான் பேசுகிறோம்.

3. மார்க்ஸ் தோன்றுவதற்கு முன்பே மார்க்சியம் இருந்தது என எழுதியிருக்கிறீர்கள். இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஐன்ஸ்டைனுக்கு முன்பு சார்பியல் இருந்தது என்று எழுதலாமா? நீல் போருக்கு முன்பு இயற்கை இருந்தது. ஆனால் அவரது சூத்திரங்கள் காட்டிய அறிதல் இருந்ததா? இயற்கை இருக்கிறது அதனால் எல்லா அறிவும் இருக்கிறது என்று சொல்வீர்கள் போல. மதிப்பு பற்றிய உழைப்பின் வி;ளக்கம் மார்க்சுக்கு முன்பு இருக்கவில்லை. இதனாற்தான் மார்க்ஸ் சோசலிசத்தை விஞ்ஞான பூர்வமாக விளக்கினார் என்கிறோம். இதனாற்தான் மார்க்சியர் என்று சொல்லும் பொழுது விஞ்ஞானபூர்வ சோசலிசம் பற்றியதாக இருக்கிறது. ரோபர்ட் ஓவன் போன்றவர்கள் முன்வைத்த உட்டோப்பியன் சோசலிசம் அல்ல நாம் பேசுவது.

4. தமிழத் தேசியம் பற்றி – முற்போக்கு பற்றி தனிப்பட பேசியிருக்கிறேன். அதை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. கடாபி என்ன சோசலிச இடதுசாரியா? கடாபி இங்கு ஏன் வந்தார் என்றும் விளங்கவில்லை.

5. தமிழ் அறிவியலை தமிழ் மார்க்சியர் மறுக்கின்றனர் என எழுதியிருக்கிறீர்கள். தங்களை மார்க்சியர் என்று சொல்லிக்கொள்பவர்களும் இதற்கு தம்மையறியாமல் லைக்கு போட்டிருக்கிறார்கள். ஒரு மண்ணாங்கட்டியும் விளங்கவில்லை. எந்த அறிவியலையும் மார்க்சியர் மறுப்பது கிடையாது. மார்க்சியர் எனச் சொல்லிக் கொள்பவர்கள் அத்தகைய வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அறிவியல் பொதுவானது. மொழி பெயர்த்தோ – பெயர்க்காமலோ அது வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

6. சிலருக்குச் சினம் வரும் என்ற தெளிவோடுதான் பதில் சொல்லியிருக்கிறேன். குறைந்தபட்சம் சொன்னதைத் திரிக்காது பேசியிருக்கலாம். உங்கள் கதையைக் கேட்டு மற்றும் சிலர் என்ன குதிப்பெல்லாம் குதித்திருக்கிறார்கள் பாருங்கள் -அதில் சந்தோசமென்றால் அது அற்ப சந்தோசம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.