பிரதியில் விலகல் – மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’
கட்டுரை ஒரு புனைவல்ல என்பவர்கள் கடந்த காலங்களில் வாழ்கிறார்கள். கலையின் புதிய எல்லைகலைத் தொடுவதாயின் அத்தகைய பழமைப் பார்வையை நாம் துறந்தாக வேண்டும்.
மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம் ’ படைப்பின் வெளி புதிய முறை வாசிப்பைக் கோரி நிற்கிறது. முகப் புத்தக பதிவுகளின் தொகுப்பாக விரியும் எழுத்து புதிய முறையில் கதை சொல்லுதலை அணுகுகிறது. இந்த சேர்க்கைகள் பிரதியின் அனுபவத்தை – உள்ளுணர்வை – அதன் சிதறல்களை முதன்மைப்படுத்த முயற்சிக்கிறது.
இலங்கையில் நடந்த பல்வேறு படுகொலைகள் – கோர யுத்தம் பல முகங்களைக் கொண்டது. எந்த ஒரு ஈழ எழுத்தாளரும் இதைத் தாண்டி செல்ல முடியாது. பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மிஹாத் முன்வைக்கும் பதிவு இல்லாமல் அது முளுமைப்பட சாத்தியம் இல்லை. விளக்கத்தை விட்டு வாசிப்பை செய்யுங்கள். பிரதியில் இருந்து வெளியில்-புறத்தில் இருத்தலை நாடும் உந்துத்தளோடு நகர்கிறது எழுத்து. இவ்வாறு சொல்வது மிகையில்லை. படிப்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்து பின் திரும்ப வாசித்துப் பாருங்கள்.
இதுதான் கலை – இதுதான் கதை – என்பதை உடைக்க பல படைப்பாளிகள் தொடர்ந்து முயற்சித்து வந்திருகிறார்கள். உண்மை சொல்வது – யதார்த்தம் செய்வது போன்ற முயற்சிகள்தான் படைப்பாற்றல் இல்லாதவை -கட்டுரைகள். அதன் தாக்கத்தை பதிவது- அதை உடைக்க முயலும் கலை.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும். இந்த புத்தகம் எமது கதைகளின் ஒரு கதை – எமது வரலாறின் பகுதி – இந்த பார்வைகள் இல்லாது ‘ஈழக் கலையின்’ பரப்பை பற்றி முழுமையா பேச முடியாது.
கஸல் பதிப்பகம்
219 A K M Road Eravur, Sri Lanka
mail@ghazal.press
+94 770807787