திரள் விமர்சனக் கூட்ட சர்ச்சைப் பின்னணி

திரள் குழுமம் நடத்திய லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன என்ற கேள்வியே பிழை. அது அப்படியே பதிவாகி உள்ளது. ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி நடந்த உரையாடலை முழுமையாக நீங்கள் திரள் முகப் புத்தகத்தில் பார்க்க முடியும். எனக்கும் ஷோபசக்திக்கும் நடந்த உரையாடலின் முழுமையை இங்கே பார்க்க முடியும் – ((1) Shoba Shakthi & Senan – சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் – Thiral – YouTube).

ஷோபாசக்தியை நோக்கி என்ன குற்றச் சாட்டை வைத்தேன்? இது பற்றி சடைந்தேனா ? முன்னுக்கு பின் முரணாக பேசினேனா ? எதற்காக ஷோபாசக்தி மீண்டும் புரட்டில் இறங்கி இருக்கிறார்? என்ற பல கேள்விகள் என்னை நோக்கி கேட்கப் படத்தால், இச்சம்பவம் தொடர்பான கால அட்டவனையை தருவது அவசியமாக இருக்கிறது.

நான் என்ன சொல்லி வருகிறேன் என ஷோபாவுக்குத் தெரியவில்லை என்பது திரள் கூட்டத்தில் தெரிய வந்தது. நான் திருட்டுக் குற்றம் சொல்வதாகக் குழம்பினார் – நான் வைக்கும் குற்றச் சாட்டு என்ன என்பதை விளக்கியதை விளங்க அவருக்கு நேரம் எடுத்தது. இதன் பிறகு அவர் தான் புத்தகம் படிக்கவில்லை என்று சொனார். அதை சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் நான் அதை நம்பவில்லை என்றேன். ஷோபாசக்தி பொய் சொல்வதே இல்லை – அவர் கூறி விட்டார் அதனால் அது உண்மையாகி விட்டது என்ற ஷோபாசக்திசார் – moral நிலைப்பட்டை நான் எடுக்கப் போவதில்லை என்பதை குறிப்பிட்டேன். இதையும் விளங்க முடியாமல் திணறியதால் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். நீங்கள் உத்திகளை எடுத்து எழுதி இருப்பது உண்மையாக இருக்கலாம் தானே – அது பற்றி என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு பதில் வரவில்லை. நான் படிக்கவில்லை என ஷோபா அடித்து பேசி விட்டால் மட்டும் அது உண்மையாகி விடும் என சிலர் கருதினால் அது அவர்கள் பிரச்சினை. என்னால் ஆதாரங்கள் வைக்கக் முடியாது. இரண்டு நாவல்களையும் படியுங்கள். உத்திகள் – வடிவம் சார் தொடர்புகள் இரண்டு நாவலுக்கும் இருக்கா இல்லையா என நீங்களே முடிவு செய்யுங்கள். நான் இருக்கு என்கிறேன் – அதனால்தான் அவர் படித்திருக்கலாம் என்ற ஊகத்தை முன்வைக்கிறேன். நான் திருட்டு குற்றம் வைக்கவில்லை என்பதை சரி என ஏற்றுக் கொண்டார் – நன்றி சொன்னார். நான் தெளிவாக பேசி இருபதாக சொனார். (காணொளி பார்க்கவும்). இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே என்றார். முதலில் இருந்தே இதைத்தான் சொல்லி வருகிறேன் என நான் குறிப்பிட்டேன். இதன்பிறகு வேறுவகை புரட்டுகளில் தற்போது இறங்கி உள்ளார் ஷோபாசக்தி.

 

இதற்கு மிஞ்சி சொல்வதற்கு எதுவுமில்லை. அவரவர் தமது கற்பனைகளில் உலாவி வந்து பேசும் பசப்புகளுக்கு எல்லாம் பதில் எழுதிக் கொண்டு இருக்க முடியாது. ஷோபாசக்தியின் நண்பர்கள் மிக மிக கேவலமான அவதூறுகள் – பொய்கள் – பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அவற்றைப் பொறுமையாக பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கும் ஷோபாசக்தி அவதூறு பற்றி அந்தரப்படுவது வேடிக்கையானது.

 

 

17- August-2020 சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் புத்தகம் தமிழ் நாட்டில் வந்து விட்டது என்பதை அறிவித்தேன்.
26 August 2020 இந்த நாவலுக்கும் சோபசக்தியின் இச்சா நாவலுக்கும் இருக்கும் சார்பு பற்றி வே . ராமசாமி எழுதி இருந்தார்.
26- August-2020 வே. ராமசாமியை எனக்கு தெரியாது என சொல்லி- இந்த உரையாடல் நடக்க வேண்டும் என சிறு குறிப்பு எழுதி இருந்தேன்.
27- August-2020 தேசம்நெட் ஊடகம் இது பற்றி ஷோபாசக்தியை தொடர்பு கொண்டு விசாரித்த விபரத்தை ஊடகவியலாளர் ஜெயபாலன் வெளியிட்டு இருந்தார். தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என ஷோபா தேசம்நெற்றுக்கு சொல்லி விட்டார். என்னை ஜெயபாலன் தொடர்பு கொண்டு கேட்ட போது பின்வருமாறு கூறி இருந்தேன் ‘“இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்”
27-aug 2020 ஷோபாசக்தியும் அவரது நண்பர் வட்டமும் கண்ட பாட்டுக்கு எழுத ஆரம்பித்தனர். வியாபர தந்திரம் எனவும் வேறு பல அவதூறுகளும் பொய்களும் பேச ஆரபித்து விட்டனர். இதனால் எனது கருத்தை கேட்டு பலர் தொடர்பு கொண்டனர். அதனால் இந்த விபரம் பற்றி அகழ் இதழுக்கு வழங்கும் செவ்வியில் விரிவாக பேச இருக்கிறேன் என ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தேன். அந்தே குறிப்பில் பின்வருமாறு எழுதி இருந்தேன் ‘இது(முகநூல்) சரியான சனநாயக உரையாடல் வெளி அல்ல. புதிதாக வெளிவர இருக்கும் மின்னிதழ் இணையப் பத்திரிகைக்கு இது பற்றி விரிவான செவ்வி தருவதாக சொல்லி உள்ளேன். அது வந்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.’
28-aug 2020 இதன் பிறகும் பலர் என்னை விடுவதாயில்லை. தொடர்ந்து பலர் தொடர்பு கொண்டனர். முக நூலில் பலர் சகட்டு மேனிக்கு நான் என்ன சொல்கிறேன் என தாங்கள் தாங்கள் நினைத்ததை எழுத ஆரம்பித்தனர். இதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை – எனது குறச் சாட்டை முழுமையா நான் எழுதி பதிவு செய்தேன். அது வருமாறு.

இதோ என் குற்றச்சாட்டு.

செவ்வி வரும்வரையும் விட மாட்டீர்கள். அதனால் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

1

ஷோபாசக்தி இலக்கிய மோசடி – இலக்கிய வியாபாரம் செய்பவர்தான். சக எழுத்தாளர்கள் மேல் கடும் பொறாமை கொள்பவர்தான். எனது எழுத்துக்கள் – கருத்துக்கள் தாக்கம் இச்சாவில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. தனக்கு தெரிந்த சக எழுத்தாளன் மேல் அவர் செய்துள்ள மோசமான மோசடி இது.

2

இரண்டு நாவல்கள் உங்கள் முன் இருக்கின்றன. படியுங்கள். படித்தபின் இரண்டுக்கும் இடையில் அளவுக்கு அதிகமான (அதாவது தற்செயல் –பாதிப்பு என்ற காரணங்களைத் தாண்டி) ஒற்றுமை இருக்கிறது என்று நீங்கள் கருதினால் இது எப்படி நடந்தது என கேள்வி கேளுங்கள்.

3

எந்த ஒரு படைப்பாளியையும் (ஷோபாசக்தி உட்பட) வெறும் அவதூறுகளால் முடித்து விட முடியாது. சக படைப்பாளியை ஒட்டுமொத்தமாக முடக்கும் நோக்கமோ – அல்லது அவர்மேல் ஒட்டுமொத்தமாக வைக்கப்படும் ‘தீர்ப்போ’ அல்ல இது. இது ஒரு நாவல் பற்றிய குற்றச் சாட்டு. மிகுதி வாசகர்கள் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். நான் சொல்வது நட்பு வட்ட – இலக்கிய குறுங்குழு வாசகர் வட்டமல்ல.

4

இலக்கிய திருட்டு உட்பட எந்த ஒரு திருட்டும் நேரடியாக நிகழ்வதில்லை. ஆனால் திருட்டு என்ற சொல் இங்கு பொருந்தாது. வறட்சி அடைந்து கொண்டிருக்கும் ஷோபாசக்தி இன்னும் அந்தளவுக்கு வறண்டு விடவில்லை என்றே நினைக்கிறேன். அவர் பெரிய எழுத்தாளர் அவர் ஏன் மோசடி செய்ய வேண்டும் என்று எல்லாம் கேட்டுக் கொண்டு வராதீர்கள். எல்லா எழுத்தாளர்களும் தங்களை சுற்றி இயங்குபவற்றை புடுங்கிதான் எழுதுகிறார்கள். கெட்டித்தனமாக புடுங்குபவன் நல்ல படைப்பாளன். ஆனால் அந்த புடுங்குதல் வேறு. சக எழுத்தாளர்களை சுரண்டுபவர்களை மோசடிகாரர் எனத்தான் சொல்ல வேண்டும்.

5

இது நாவலின் தரம் தரமின்மை பற்றிய பிரசச்சினை இல்லை.

 

 

October -2020 இதன் பின் நான் அகழ் இணையத்திற்கு வழங்கிய பெட்டியை நீங்கள் இங்கு முழுமையாக படிக்கலாம்- (இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன் – அகழ் (akazhonline.com)).அனோஜனுக்கு வழங்கிய செவ்வியில்  பின்வருமாறு கூறி இருக்கிறேன்.

 

கலாமோகன் படைப்புகள் சார்ந்த கூட்டத்திற்கு வரும்போது வாசன் தோழர் நேரடியாக இரண்டு நாவல்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகச் சொன்னார். நீங்களும் அங்கு இருந்தீர்கள். உங்களுக்கு நடந்தது தெரியும். பின்னர்தான் நாவலை உங்களிடம் இருந்து இரவல் வாங்கிப் படித்தேன். ஆரம்பப் பக்கங்கள் வாசிக்கும்போது என்ன தொடர்புகள் இருக்கும்? என்ன இவர்கள் சொல்கிறார்கள்? என்றே தோன்றியது. போகப்போகத்தான் தொடர்புகள் இருப்பது எனக்குத் தோன்றியது. வாசித்து முடித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதைப்பற்றி வெளிப்படையாக பேசியே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

 

இச்சாவை வாசித்துவிட்டு எனது நாவலை வெளியிடாமல் இதைப்பற்றி பேசியிருந்தால், முதலில் உன் நாவலை கொண்டுவா வாசித்துவிட்டு நாங்கள் முடிவு எடுக்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் இதனை வாசித்துவிட்டு பேசவேண்டியது இதனைப் படிப்பவர்கள்தான்.

நான் Copy என்று ஒருபோதும் சொல்லவில்லை. Plagiarism என்று எங்கும் சொல்லவில்லை. இலக்கியம் என்பது தான்றோன்றித்தனமாக வருவதில்லை. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை உள்வாங்கும் எழுத்தாளரிடமிருந்து வருகின்ற வெளிப்பாடுதான் இலக்கியச் செயல்பாடு. அது ஏதோவொரு விடயத்தில் ஒன்றைப் பின்பற்றுதல், இன்னொன்றைப் பார்த்து எழுதுதல், போலச் செய்தல், சேர்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்றுதான் இயங்குகின்றது. இப்படிதான் இலக்கியம் இயங்க முடியும்.

 

 

நேரடியாக ஒன்றைப் பார்த்து அப்படியே எழுதிய சம்பவங்களும் உண்டு. அது தவறு. வேறு சிலர் சிலதை மட்டும் பார்த்து எழுதியும் இருக்கிறார்கள் அது மன்னிக்கக்கூடிய தவறு. இந்த எந்தக் குற்றச்சாட்டையும் இச்சா விடயத்தில் நான் வைக்கவில்லை. தெளிவாகச் சொல்கிறேன் ஐடியாஸ், (ideas) வடிவம் சார்ந்த ஐடியாஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கின்றேன்.

 

 

இப்போது உள்ளவர்களுக்கு முன்னர் இருந்த ஷோபாவை தெரியாது. நான் ஏதோ முழுமையாக எனது நாவலை திருடி ஷோபா கொப்பி அடித்துவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளேன் என்று நினைக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு வாளைச் சுழற்றுகிறார்கள். இவர்களுக்கு வரலாறு தெரியாது. ஆழமாக விடயங்களை பார்க்கும் விரிவும் கிடையாது.

 

மோசடியில்லாமல் வேறு என்ன? ஒரு ஐடியாவை எடுத்துக்கொள்ளுதல் மோசடிதானே. நான் எழுதிய நாவல் எப்படி அவருக்கு கிடைத்திருக்கும் என்ற சந்தேகம் இருக்கலாம். நியாயமான கேள்வி. இரண்டாவது தற்செயலாக (கோ இன்சிடென்ட்) இருக்கலாம். ஆனால் இங்கு தற்செயல் என்பது மிக அதீதம். அது எப்படி சாத்தியம் என்று வாசிப்பவர்கள் யோசிக்க வேண்டும். இரண்டாவது இரண்டு நாவல்களின் மெயின் ஸரக்சர்களே ஒன்றாக இருக்கின்றன. அவர் மிக நன்றாக அறியப்பட்ட எழுத்தாளர். ஷோபாவின் எழுத்தால் தாக்கம் அடைந்து சேனன் இப்படியொரு நாவலை போலச் செய்தார் என்று நீங்கள் ஒரு விமர்சனத்தை வைக்கலாம். இதனை முற்றாக மறுத்து கதைக்கவே இங்கே வெளிப்படையாக உரையாடுகிறேன். அவரிடம் இருக்கும் ஐடியாக்கள், கருத்துகள் போன்றவற்றில் என்னுடைய தாக்கமே அவரிடம் உண்டு. வரலாறை பின்சென்று தேடிப்பாருங்கள். அவரிடம் இருந்து கொப்பியடிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அவருக்கு ஐடியாக்கள் சார்ந்த கற்பனை குறைவு. பலதை பொறுக்கி திரித்து எழுதியிருக்கிறார். இதுவே எனது குற்றச்சாட்டுகள்.

 

 

என்னுடைய நாவல் எப்படி ஷோபாவுக்கு முன்னமே சென்றது என்பது தொடர்பாக பேஸ்புக்கில் நடந்த உரையாடலில் ஷோபாசக்தியின் சகோதரி கவிஞர் தர்மினி என் மீது பல்வேறு வகையான குற்றச் சாட்டுகளை வைத்திருக்கிறார். தன்னிடம் தனியான கணினியும், ஷோபாவிடம் தனியான கணினியும் இருப்பதாகச் சொல்கிறார். இதனை நான் நம்பவில்லை. முன்னர் அப்படி இருந்ததில்லை. அது எனக்குத் தெரியும். பின்பு கணனி வாங்கிய கதை வேறு. இதை பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் விதம் எனக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. சகோதரத்துடனும் தோழமையுடனும் பழகிவிட்டு இப்போது தரக்குறைவாக எழுதுவது கடும் வேதனையைத் தருகிறது. இருக்கட்டும். அதற்காக நான் ஒருபோதும் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கப் போவதில்லை. நான் நினைக்கிறேன் -தர்மினிக்கு தெரியாமல் இது நிகழ்ந்து இருக்கும் என்று. அவர் தரவிறக்கி வைத்திருந்த பிரதியை அல்லது மின்னஞ்சலில் இருந்த பிரதியை ஷோபா நோட்டம் விட்டிருக்கலாம். தர்மினி என்னதான் மறுத்தாலும் நான் ஒருபோதும் ஷோபாசக்தி எனது நாவலை முன்னமே வாசிக்கவில்லை என்று சொல்வதை நம்பத் தயாரில்லை. ஷோபாசக்தி மீதுதான் முழு குற்றச்சாட்டையும் வைக்கின்றேனே தவிர தர்மினியின் மீதல்ல.

மோசடி நிகழாமல் எப்படி இரண்டு சமகால நாவல்கள் ஒத்ததாக வரும்? திரும்பவும் சொல்கிறேன், இரண்டு நாவல்களும் இப்போது இருகின்றன. இரண்டையும் வாசித்துவிட்டு வாசகர்கள் யோசிக்கட்டும். இரண்டு எழுத்தாளர்கள் தற்செயலாக ஒரே அலைவரிசையில் சிந்தித்து இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால், இதிலிருக்கும் அதீதத்தை யோசிக்க வேண்டும். அல்லாவிடில் யாராவது ஒருவர் முன்னமே படித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

 

27-february2020 நீண்ட நாட்களின் பின் நடந்த நாவல் விமர்சனத்தின் போது நடந்த உரையாதலி நீங்கள இங்கு பார்க்கலாம். (1) Shoba Shakthi & Senan – சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் – Thiral – YouTube

 

17-aug-2020 சேனன்

தற்போது தமிழ்நாடு எங்கும் கிடைக்கும். தயவு செய்து பதிப்பகத்ததுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். தபால்துறை இன்னும் சரியாக வேலை செய்ய தொடங்காமையால் வெளிநாடுகளில் கிடைப்பதற்கு நேரம் எடுக்கும். இருப்பினும் பதிப்பகத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் தேவையை பதிவு செய்து கொள்ளுங்கள். படித்தபின் உங்கள் கருத்தை அறியாத தாருங்கள். நன்றி

 

 

 

26 August 2020  ·வே.ராம சாமி

“சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்*

நாவல் ஒரே வாசிப்பில் முடிக்கக் கூடியதாக இருந்தது ..

ஈழ இறுதிப்போர் பற்றிய புத்தகம் எனில் எங்கிருந்தோ *ஒங்கலிடைப் பிறந்த தமிழ் தொன்ம மனிதன் உள்ளுக்குள் முதல் பக்கத்திலேயே வந்து உள்ளே குடியேறி விடுவான் ..

தொடக்கத்தில் நாவல் தற்காலம் வரலாறு தொன்மம் என்று ஒன்றுக்கொன்று இடைவெட்டுகள் சரியாகப் பொருந்தவில்லை .அல்லது ஈழ தொன்ம அறிதல் குறைவு நமக்கு என்று உணர்ந்தேன் .50  பக்கங்களுக்கு மேல் ஒரே கோட்டில் பயணிக்கிறது .

நான் வாசித்த வரையில் 2009குப் பிறகான நாவல்களில் இருந்து இது புனைவில்லாமல்  இறுதிப்போரைப் படம் பிடிக்கிறது .போர்க்குற்ற ஆவணமாக இருக்கிறது ..ஆனால் வரலாறு தற்காலம் தொன்மம் எல்லாம் படக் படக்குனு தாவி விடுகிறது ..ஒரு இடத்தில் கூட இது நிகழ்வுகள் இது புனைவாக இருக்கும் என்று தோன்றாத வண்ணம் அகல்போல் ஆனால் நெருப்பாய் சுடுகிறது ..ஆர்ப்பாட்டம் கழிவிரக்கம் இல்லை ..எல்லாம் “கட்டு திட்டமாய் ‘இருக்கிறது

சார்பு என்பதை விட இது பேச வேண்டியதைப் பேசுகிறது .ஒரு 100 பக்கங்கள் அதிகம் இருந்திருக்கலாம் ..

சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த *இச்சா *நாவலும்  இதுவும் வடிவம் /சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )

கேப்டன் அல்லி /(*சித்தார்த்தனின்*) ரெண்டு பேரும் ஒரே ஆளா ?

இச்சாவில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனா /அல்லி இருவருக்குமாக

இருக்கிறது ..

படித்துப் பாருங்கள் ..

தமிழ் எழுத்துலகம் இதுவரை காணாத சம்பவம் நடந்துள்ளது

-**

வெளியீடு .

தமிழ் ஸ்டுடியோ

04448655405

 

26-aug-2020 சேனன்

‘செவக்காட்டு சித்திரங்கள்’ எழுதிய வே. ராமசாமியை எனக்கு தெரியாது. அவர் என் முகநூல் நண்பருமல்ல. ஒரு வாசகனாக அவர் கேட்டு இருக்கும் கேள்வி முக்கியமானதே.

தமிழ் கலை இலக்கிய உலகை இன்று பல்வேறு போலித்தனங்கள் ஆட்சி செய்கின்றன. காரசாரமான உரையாடல் அத்தியாவசியம்.

 

 

27-aug-2020- தேசம்நெற்

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே.ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )

கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக

இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன். (Source: thesamnet.co.uk)

 

 

 

27-aug 2020 சேனன்

நான் எழுதி இருக்கும் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் இடையிலான தொடர்பு பற்றி நான் எனது கருத்தைச் சொல்வது அவசியம்தான். இது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. இது உண்மையில் ‘காப்பியடித்தல்’ விவகாரமா? இச்சா முதலில் வந்தபடியால் யார் யாரைச் சுட்டது ? என பல கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இதைவிட வழமை போல கேவலமான தாக்குதல்களும் நிகழத் தொடங்கி விட்டன. இது வியாபார தந்திரம் – போன்ற கீழ்நிலை அலட்டல்களுக்கும் – அவதூறுகளுக்கும் கூட பதில் சொல்லத்தான் வேண்டி உள்ளது.

தமது சிந்தனையை தொகுத்து எழுதும் பழக்கம் பலருக்கு கிடையாது. சமூக வலைத்தளத்தில் எழுத எது பற்றியும் எவ்வித முன்னறிவும் தேவை இல்லை. அவரவர் தமக்கு ஏற்றபடி புலம்புவதும் – சுய விளம்பரம் செய்வதும் –சுய விருப்பு வெறுப்புக்களை முதன்மைப்படுத்தி அலட்டுவதும் மலிந்து கிடக்கும் இடத்தில் உருப்படியன விவாதத்தை செய்வது கடினம். இது சரியான சனநாயக உரையாடல் வெளி அல்ல. புதிதாக வெளிவர இருக்கும் மின்னிதழ் இணையப் பத்திரிகைக்கு இது பற்றி விரிவான செவ்வி தருவதாக சொல்லி உள்ளேன். அது வந்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

28-aug 2020 சேனன்

இதோ என் குற்றச்சாட்டு.

செவ்வி வரும்வரையும் விட மாட்டீர்கள். அதனால் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

1

ஷோபாசக்தி இலக்கிய மோசடி – இலக்கிய வியாபாரம் செய்பவர்தான். சக எழுத்தாளர்கள் மேல் கடும் பொறாமை கொள்பவர்தான். எனது எழுத்துக்கள் – கருத்துக்கள் தாக்கம் இச்சாவில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. தனக்கு தெரிந்த சக எழுத்தாளன் மேல் அவர் செய்துள்ள மோசமான மோசடி இது.

2

இரண்டு நாவல்கள் உங்கள் முன் இருக்கின்றன. படியுங்கள். படித்தபின் இரண்டுக்கும் இடையில் அளவுக்கு அதிகமான (அதாவது தற்செயல் –பாதிப்பு என்ற காரணங்களைத் தாண்டி) ஒற்றுமை இருக்கிறது என்று நீங்கள் கருதினால் இது எப்படி நடந்தது என கேள்வி கேளுங்கள்.

3

எந்த ஒரு படைப்பாளியையும் (ஷோபாசக்தி உட்பட) வெறும் அவதூறுகளால் முடித்து விட முடியாது. சக படைப்பாளியை ஒட்டுமொத்தமாக முடக்கும் நோக்கமோ – அல்லது அவர்மேல் ஒட்டுமொத்தமாக வைக்கப்படும் ‘தீர்ப்போ’ அல்ல இது. இது ஒரு நாவல் பற்றிய குற்றச் சாட்டு. மிகுதி வாசகர்கள் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். நான் சொல்வது நட்பு வட்ட – இலக்கிய குறுங்குழு வாசகர் வட்டமல்ல.

4

இலக்கிய திருட்டு உட்பட எந்த ஒரு திருட்டும் நேரடியாக நிகழ்வதில்லை. ஆனால் திருட்டு என்ற சொல் இங்கு பொருந்தாது. வறட்சி அடைந்து கொண்டிருக்கும் ஷோபாசக்தி இன்னும் அந்தளவுக்கு வறண்டு விடவில்லை என்றே நினைக்கிறேன். அவர் பெரிய எழுத்தாளர் அவர் ஏன் மோசடி செய்ய வேண்டும் என்று எல்லாம் கேட்டுக் கொண்டு வராதீர்கள். எல்லா எழுத்தாளர்களும் தங்களை சுற்றி இயங்குபவற்றை புடுங்கிதான் எழுதுகிறார்கள். கெட்டித்தனமாக புடுங்குபவன் நல்ல படைப்பாளன். ஆனால் அந்த புடுங்குதல் வேறு. சக எழுத்தாளர்களை சுரண்டுபவர்களை மோசடிகாரர் எனத்தான் சொல்ல வேண்டும்.

5

இது நாவலின் தரம் தரமின்மை பற்றிய பிரசச்சினை இல்லை.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *