அரச ஆதரவு இலக்கியவாதிகளின் அடாவடித்தனம்.
புலி இருக்கேக்க விட்டுப்போட்டு இப்ப புலிய தூக்கிக்கொண்டு திரிகிறான் என எனது முன்னாள் இலக்கிய நன்பர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளதாக தெரியவந்தது. நாம் இவர்களின் அரச ஆதரவை கடுமையாக எதிர்ப்பதால் இவர்கள் எமக்கு புலிப்பட்டம் கட்டி –தீவிரவாத சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுவார்கள் போலுள்ளது.
அவருக்கு நான் சொல்லக்கூடியது இதுதான். உங்களுக்கு இலக்கியத்துக்கான அரசின் அகடமி விருது தயாராக இருக்கிறது நன்பரே – சந்தோசப்படுங்கள்- விருதுக்கு மறுப்பு விட்டு ரூபவாகினிக்கு ஒரு பேட்டியும் நீங்கள் குடுக்கலாம் – அவ்வாறு உங்கள் முற்போக்கு முத்திரையையும் நீங்கள் காப்பாற்றிக்கொள்ளலாம்.
நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை ராசா.
அரச ஆதரவாளர்கள் இலங்கையில் திருவிளா நடத்த முனைப்புடன் நிற்பதன் பின்னனிகள் பல மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யோ.கர்ணன். தனது அனுபவத்தை பதிந்துள்ளார். சில இலக்கியவாதிகளின் குரல் அடக்கப்பட்ட விதத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பது எமது நெஞ்சத்தில் பகீரென்ற உணர்வை ஏற்படுத்தியது.
“அரசுடன் தொடர்புடய இந்த அணியுடன் முரண்பட்டால் தமக்கு உயிராபத்துக் கூட ஏற்படலாம் என்பதால் தனிப்பட்ட காரணங்களைக் காட்எ ஒதுங்கிக் கொள்வதாக சொன்னார்கள்” என ஒதுங்கிய – அல்லது ஒதுக்கப்பட் சிலரைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படிக்க மனம் கூசுகிறது. எப்பேர்ப்பட்ட கேவலமான அரசியலுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் இந்த மடையர்கள் – இவர்களுடன் எல்லாம் முன்பு பழகியிருக்கிறோமே என மனம் பதறுகிறது.
அதிகாரத்தின் கையாட்களாக இருந்துகொண்டு எமக்கு எவ்வளவு காலத்தக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கப்போகிறீர்கள் எனப் பார்ப்போம்.
யோ.கர்ணனின் கட்டுரையை இங்கே படிக்கவும்.
http://yokarnan.com/?p=446