அடங்கா கவிஞன் -ஆரன் அட்டபேக்

“அதிகாரத்தின் அறைக்கதவை தட்டித் திறப்பதற்காக வோல்காவில் பிறந்து அல்மாட்டியில் வளர்ந்தேன்” எனக் கவி பாடும் ஆரன் அட்டபேக் (யுசழn யுவயடிநம) அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கவிஞன். எதிர்பிலக்கியம் செய்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கும் அதிகூடிய பரிசான கடுங்காவல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபன் இந்த கசகிஸ்தான் கவிஞன்.

சான்ராக் என்ற பகுதிச் சேரி மக்களை புல்டோசர் வைத்து மிதித்து வெளியேற்றும் நடவடிக்கைககளை காசகிஸ்தான் அரசு முடுக்கிவிட்ட தருனத்தில் தனது கவிதைகளால் அதிகாரத்தைக் கடுமையாக குத்தினான் அவன். 2007ல் அவனைக் கைது செய்த அரசு சில சில குற்றங்களை ஏற்றுக்கொண்டாள் மன்னிப்பு வழங்கப்படும் என்றது. தான் உரிமைகளைப் பேசுபவன் – எந்தக் குற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கவிஞனுக்கே உரிய மூர்க்கத்துடன் மறுத்துவிட்டார் அட்டபேக். உலகின் பல கொடூர அரசுகளில் ஒன்று கசகிஸ்தான் அரசு. அவருக்கு 18 வருச கால தண்டனையை வழங்கி சிறைக்குள் முடக்க முயன்றது நசர்பயாவ் அரசு.

சிறைக் காவலாளிகள் சொல்வழி கேட்கவில்லை என 2010ல் இருந்து அவரை கடுங்காவல் தண்டணைக்கு மாற்றினர். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு உயரினத்தையும் பார்க்க முடியாமல் இருட்டுக்குள் முடக்கப்ட்டன கவிஞனின் புலன்கள். ஆரன் அட்டபேக் தன் விறைப்பை விட்டுக்கொடுக்கவில்லை. சிறைக்குள்ளிருந்து ‘யுரேசியாவின் இதயம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அரசு உடனடியாக பழிவாங்கியது. அவருக்கு கடிதங்கள் வருவது அவர் மற்றவர்களுக்கு கடிதங்கள் அனுப்புவது அனைத்தையும் தடை செய்தது.

அவர் எழுத புத்தகமும் பேனையும் வழங்க வேண்டும் என கடும் சர்வதேச போராட்டத்தை முன்னெடுத்தனர் கம்பயின் கசகிஸ்தான் உறுப்பினர்கள். அந்த போராட்ட அமைப்பின் உறுப்பினராகத்தான் அட்டபேக்கின் குடும்பத்தைச் சந்தித்தேன். தன்னைச் சமூகப் போராளியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் மகனும் ஒரு சொட்டும் அடிபணியத் தயாரில்லை. அவர் சிறையில் இருந்து எழுதியவைகளை வைத்து .30க்கும் மேற்பட்ட புதிய குற்றச்சாட்டுகளை கசகிஸ்தான் அரசு முன்வைத்துள்ளது. 60 வயதுகளைத் தாண்டிவிட்ட இந்த அடங்கா கவிஞனை இனி உயிருடன் பார்க்க முடியும் என யாருக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் அதற்கான போராட்டம் ஒரு சொட்டும் தளரவில்லை.

உங்கள் கவிதைகளை அவருக்கு அனுப்புங்கள். உங்கள் கடிதங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். அவர் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு முடிந்தளவு அலுப்புக்கொடுங்கள். அவருக்கான செய்தியை அனுப்ப கம்பயின் கசக்கிஸ்தானுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அவருக்கு கடிதங்கள் எழுத : ருஉh. ருமு-161ஃ12இ pழளலழடழம ளுநஎநசலெiஇ யுசஙயடலஙஇ ணip:110300இ முழளவயயெலளமயலய ழடிடயளவஇ முயணயமாளவயn

கம்பயின் கசகிஸ்தானை தொடர்புகொள்ள : உயஅpயபைமெயணயமாளவயn@பஅயடை.உழஅ

இது அவரது கவிதைகளிள் ஒன்று

எனது குரல்வளை

தாயகத்துச் சத்தங்களுக்காக
எனது குரல்வளை பேச்சின்றிச் சாகும்.

நீர் நிலத்தில் மறைவதுபோல்
மூத்தோர் முனகல்களும் வடிந்து இறக்கும்.

இரஸ்யனில் எழுதும் நான்
துருக்கியச் சத்தத் துகள்களாயும் இருக்கிறேன்.
செமட்டிக் எட்ருஸ்கான் நாக்குகளிலும் சாகாக்கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

முறிக்கப்பட்ட எத்தனையோ உயிர்கள் எனக்குள் விழுந்து கிடந்து
முக்குகின்றன முனகுகின்றன.
நான் வெறும் சந்தங்களில்
நிர்வானமாக ஆடிக்கொண்டிருக்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *