Category: மொழிபெயர்ப்புகள்

அடங்கா கவிஞன் -ஆரன் அட்டபேக்

“அதிகாரத்தின் அறைக்கதவை தட்டித் திறப்பதற்காக வோல்காவில் பிறந்து அல்மாட்டியில் வளர்ந்தேன்” எனக் கவி பாடும் ஆரன் அட்டபேக் (யுசழn யுவயடிநம) அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கவிஞன். எதிர்பிலக்கியம் செய்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கும் அதிகூடிய பரிசான கடுங்காவல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபன் இந்த கசகிஸ்தான் கவிஞன்....

பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள் – ட்ரொட்ஸ்கி

இயங்கியல் என்பது ஒரு புனைவோ அல்லது மர்மமான விசயமோ அல்ல. எமது தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குள் குறுங்கிவிடாமல் மிகவும் சிக்கலான இயக்கங்களை சரியானபடி புரிந்துகொள்ளும் முயற்சிக்கான சிந்தனை முறை பற்றிய விஞ்ஞானமே அது. இயங்கியலுக்கும் தர்க்கத்துக்குமான 3 வேறுபாடு அடிப்படை கணிதத்துக்கும் உயர் கணிதத்துக்கும் இருக்கும் வித்தியாசம்...

ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல். றோகினி கென்ஸ்மன் (Rohini Hensman) மொழிபெயர்ப்பு: சேனன் ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள். ஜனநாயகம் பற்றிய பிரபலமான விளக்கங்கள் அதைப் பாராளுமன்ற ஆட்சியுடனும் தேர்தல்களுடனும் சம்மந்தப்படுத்துகின்றது. தேர்தல் என்ற ஒன்றே இல்லாதிருப்பதைவிட தேர்தல் நடப்பது சந்தோசப்படவேண்டியதே. ஆயினும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது, அதன்...