விசர்கதையில் கிறங்கி
2000
கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுன்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்து குறையும்.
தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேனிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையில் கிறங்கி சமுதாயம் தீக்குளிக்கும்.
தானறியா தற்கொலைகள் தேசியக்;கதை ஊட்டி தீ மருகும்.
ஒரு நேரடிச்சொல் தவிர்க்கும் ‘விசர்’ வந்து ‘க்கும். க்கும். க்கும்’ என்று முனகி
தூரக்கிடந்து இன்னுமோர் தானறியா அயளள தற்கொலைக்குள் இருக்கும் நான் பொய் பேச துடிக்கின்றேன்.
நடித்தோ கிடித்தோ நலம்பெற உய்யும் உயர்குடிகளில் மிதிபட்டு எதற்கும் தயாராகும் ‘என்’ விலையின்றி கிடைக்கும்.
கவட்டுக்குள் விட்டுப் படுத்திருக்கும் கைகளை தூக்கி வளைத்து காற்றை உந்த அடிமைக் கொதிப்பு மூளை துளைக்காதா?
உள்ளங்கையால் ஓங்கி நிலத்தில் உதைக்க அதிர்வு தற்கொலைச் சனத்தை ஒண்று திரட்டாதா?
நன்பனும் திட்டி – கட்டை கடுப்பை கண்மூடித்தனத்தை கடவுளை கொல்ல முடியாது என்று விஞ்ஞானம் பேசி தலைகுனிந்த தற்கொலைக்குள்தான் அவனும் தன் வாழ்நாளை விட்டான். கொலையில் ஈடுபடுவது நாம்தான்.
‘வழி என்ற கதை சிரிப்பானது. ‘சரி’ என்ற சகிப்பே மகத்தானது.’ (நன்றி நன்பர்)
இதோ என்னை முன்னிலைப்படுத்தி உலகை சுற்ற விட்டு சுண்டி சுண்டிப் பார்த்து பம்பரமாடும் சுருக்கத்தில்- விடைகள் இல்லை. இந்தப்பாதை சோலையிட்டுச் செல்லும் என்று சொல்ல வழியில்லை.
பொறுக்கி நாய்கள் கதைக்கினம். எச்சில் உதறி குரைக்கினம்.
முன்காலுயர்த்தி ஆயுதம் பிடிப்பதால் முள்ளந்தண்டு நிமிர்ந்த இன்னுமொரு விலங்கையிட்டு ஊளைகள் விடுவினம். இனம் இனம் என்று இன்னும் இழுப்பினம். க்கும் க்கும் என்று முனகிக்கொண்டே இருப்பேன்.
சிங்கள பௌத்த இனவாத முதலாளித்துவ அடக்கலில் முனகல் கூவும்.
பின்தங்கும் பேய்கூட்டத்தில் புகழ்பெற்ற புரட்சிக்கு இடமில்லை. கலையாடுவோம் வாருங்கள். சிறுக சிறுக அவர்கள் சுடும் வறுமை முறுக்குகளை அரைப்பசி வயிற்றோடு நொறுக்குவோம். தற்கொலை வேண்டாம். கொக்கட்டமாடும் குரல்வளை அறுமட்டும் முதுகெலும்பை முடிந்தால் முறித்துப் பார்க்கட்டும்.