மூன்று விடாய் வோட்கா
மூன்று விடாய் வோட்காவும் ஒரு சிகரட்டும் மிஞ்சியிருக்க கஞ்சாவை கொழுத்தியபடி சிந்தித்தேன்.
கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –-
தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம்.
நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு
‘பலசோலி’ பற்றி
நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி
என் தணல் உயிரற்றுப்போனது.
மனதை குடிக்கும் மென்மை கண்டு நரம்புகூசி உயிர் நார்நாராய் கழன்று தசையறுக்கும் வலிபறத்தும். நோ நனைந்த நரம்புகள் உச்சியிருந்து ஊறி மாயஜால வதை செய்யும்.
இறந்த உலகை ஏன் அவாவுhன்? உறுதியோடு இறப்பை செருகு என்று மனம் அடிக்கடி கதைக்கும். அழி அழி அழி என்று வந்துபோகும் வதந்தி உணர்வுகள் முழுப்பலம் செருகி விடுவி, பல்கடித்து குத்தி நிம்மதிக்காய் நிமிர் என்றும் பேசும்.
தானாய் உதிரும் உணரும் தேவையின் தயவில் மிதக்கும் மனிதருக்கும் வாழ்தல் கசியும்.
இதற்குள் அதற்கொரு அகில கரிசனை!!!!- என்னே கேவலம்.
சுதந்திரமாம். சோசலிசமாம்.
விடுதலை விடுதலை விடுதலை
வெட்டுருத்தும் கயவருக்கும் விடுதலை
கட்டறுந்த தறுதலைக்கும் விடுதலை
இலங்கைத் தமிழருக்கும் விடுதலை –அடப்பாவி அப்பாவியே!
புடி தடவி பல்லுடைத்து –வெறியில் படுக்கை தடவும்
பிசாசுக்கேன் பாசம்
அது வெறும் சொறிக்கதையும் சோறும் தின்னும்
2011