அரைகுறை –அவசரக்குடுக்கைகள்
நமது ‘இலக்கிய’ மக்களுக்கு அரசியல் அரைகுறை. அதிலும் அரசியல் விவாதம் என்றால் அவர்களுக்கு வெகுதூரம். பாவம் அவர்கள். இந்த பாவப்பட்டவர்கள் நிதானமாக விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கும் பழக்கம் நமக்கில்லை. அதானால்தான் கருத்துகளை ஒருங்கே தொகுத்து பதிந்து வரத்தொடங்கியுள்ளேன். அறிவார்ந்த வாசகர்கள் ஒட்டுமொத்தமாக படித்துத் தெரிந்து கொள்ளட்டும்.
ஷோபா சக்தி மற்றும் பலர் மேலோட்டமான அறிதலுடன் முன்வைத்துவரும் அரசியற் கருத்துக்களை எதிர்கொள்ள ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதவேண்டியதாயிற்று. தெட்டத்தெளிவாக அங்கு கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனங்கள் ஏற்கனவே வைக்கப்பட்டவை என்று தட்டிக்கழித்து தப்பித்தோட முயல்வர் என்பது எமக்கு தெரிந்ததுதான். ஆனால் இப்புத்தகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் அரசிற் கேள்விகளுக்கு –கருத்துகளுக்கு இவர்கள் தரப்பில் இருந்து ஏதாவது பதில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். பதிலை எழுதுவதை விட்டு – அரசில் ரீதியான உங்கள் விவாதத்தை வைப்பதை விட்டு ஏன் ஓழிச்சிருந்து கல் எறியிறீர்கள். ஓழிச்சிருந்து என்று சொல்வதற்கு காரனமுண்டு. முகப்புத்தகத்தில் நம்மை கழட்டிவிட்டுவிட்டல்லவா தோழர் ஷோபா சக்தி நம்மைப்பற்றி ‘சம்பல்’ அடிக்கத்தொடங்கியுள்ளார். என்னே கேவலம் – ஏனிந்தப்பயம் ?
இப்புத்தகத்தை உயிர்மை வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் குறிப்பும், முன் அட்டையில் இருக்கும் இரன்டாவது தலையங்கமான ‘ஷோபா சக்தியை முன்வைத்து’ என்ற குறிப்பும் உள்ளே இருக்கும் சேனன் பற்றிய குறிப்பும் உயிர்மை பதிப்பகம் எழுதியது. பதிப்பிற்கு முன் புத்தகம் பற்றி மனுஷ்ய புத்திரனுடன் உரையாடிய பொழுது பின்னட்டைக்கு குறிப்பெழுதச் சொன்னது நானே. அதேபோல் புத்தகம் ஏற்கனவே நடக்கும் விவாதங்கள் சார்ந்தது என்பதை சுருக்கி முன்னட்டையில் குறிப்பதற்கு ஒரு வசனம் போடச்சொன்னதும் நானே. சுpல வசனங்களை இருவரும் பரிமாறிக்கொண்டோம் அவை எதுவும் இருவருக்கும் உடன்பாடாக இருக்கவில்லை. சரி நானே போடுகிறேன் என்றார் அவர். அவர் குறித்திருப்பதில் எனக்கு முழு உடன்பாடே. இதைப்போய் அவர் காசு சம்பாதிக்க செய்த வேலை என்று கீழ்த்தரமாக எழுதியுள்ளார் ஷோபா. நான் புத்தகம் கொடுத்த 4 மணி நேரத்துக்குள் எனக்கு வேலை மினக்கெட்டு போன்போட்டு விசாரித்த பொழுதும் இதை தெளிவாக தெரிவித்திருந்தேன். அப்ப நீங்கள் சொன்ன பதில் என்ன? ! இது எப்படி வியாபாரத்துடன் சம்மந்தப்பட்டது என்று விளக்குவீர்களா?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிறத விட்டுப்போட்டு. ஊர் உலகமெல்லாம் சுத்தி வந்து இல்லாதது பொல்லாதது எல்லாம் எழுதி விவாதத்தை கேவலமான தளத்துக்கு தள்ளுவது ‘எழுத்தாளர்’ ஷோபா வின் பழக்கம் என்று பலர் கருத்து வைத்துள்ளார்கள். அதற்கேற்ற வகையில் அவர் இப்புத்தகம் பற்றிய விவாதத்தை முன்னெடுப்பது நகைப்பாக இருக்கிறது. புத்தகத்தில் எங்காவது இவர் சீமானோடோ அல்லது என்னோடோ சேரவேண்டும் என்று கேட்டிருந்தால் என்னை செருப்பால் அடித்திருக்கலாம். உங்கள் புலி எதிர்ப்பு வால்களின் கிழிஞ்ச செருப்புகளையும் வாங்கி அடிச்சிருக்கலாம். பல்லைக் கடிச்சுக்கொண்டு தாங்கு தாங்கு என்று தாங்கியிருப்பேன் ராசா! ஏன் புனைவுகளை பொய்களை சொல்லி ஆதரவு திரட்ட தவிக்கிறீர்கள்? அசியல் ரீதியாக எதிர்கொள்ளும் ‘வக்கிருந்தால்’ ஏனிந்த வீண் விளையாட்டுக்குப் போகப்போகிறீர்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தை படிக்காமலே ரியாஸ் என்ற வாலும் மற்றும் சில புலம்பெயர் வாலுகளும் துடிப்பது பார்த்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது. விலாசத்தை அனுப்பிவையுங்கள். நானே உங்களுக்கு புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். உங்கள் அறிவுக்கெட்டின அளவுக்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதைவிட்டு பீக்கு முந்தின குசு மாதிரி நாற்றமிடத்தொடங்காதீர்கள்.
புத்தகத்தில் வைத்துள்ள புள்ளிகளை பொயின் பை பொயின்டாக சுருக்கித்தர பின்பு முயற்சி செய்கிறேன். அப்பவாவது விளங்குதா பாப்பம் இந்த சட்டாம் பிள்ளைகளுக்கு.
ஷோபா சக்தி யும் நீயும் ஏதோ திட்டமிட்டு –சேர்ந்து செய்வது போலிருக்கு என்று ஒரு முன்னனி எழுத்தாளர் போன் செய்து கேட்டார். அப்படி ஒரு ஒப்பந்ததத்திலும் கை வைக்கவில்லை – அப்படியான அரசியல் செய்யவேண்டிய தேவை இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.