வெறித்த ரத்தம்

2000
வெறித்த ரத்தம் புகட்டி
விடாத கொடி உள்ள முறைப்பு.
– அடக்கு –

நெடி நறும்பும் மூக்கு
சுடச்சுடப் பிழியும் மூளை

விசர் விசர் விசர் – ஜயோ
நாசமாய்ப்போன
வெறு வெறு என்று வெறுத்துப்பிறக்கும் நீ
எந்தச் சுகத்தையும் சுகி
என்னைமட்டும் காதலி.

உனக்கென்றொரு ரகசியம்
எனக்குத்தெரியாமல் இருக்கக்கடவது.

ஊலகத்து மரங்கள் கசிந்து
பிசைந்து கலைந்து வாரி உருவி
டொங் டொங் கென்று
மண்டையில் நச்சும்.

விட்டம் விழுந்து விறகுகள் கூடும்.

விட்டுத்தொலை என்னை
விட்டுத்தொலை.
எல்லாம் உனக்கு விளங்கும் என்று
நான் புழுக
புழுகை விழுங்கி நீ புழகத்துடனிருக்க
என்கதை முடிந்திற்று

பொழுது மீட்டு நழுவிக்கொள்வாய்
உணக்குச் சரியான
~அடுத்தவனை மறத்தல் ~ இருக்கு
உனக்குச் சரியான
வரவு செலவுகள் இருக்கு
நிம்மதி லாபம் கிடக்கு

இறைச்சிக்கு அடிபட்டுத் தோற்ற
நாயில் நானுமொரு நாய்.
தத்துவத்தில் இருந்து தொடங்கியது
தடவுதலில் இருந்து தொடங்கியது.
விசர்க் கதை இழந்தது.

உண்ணை மீட்டுக்கொள்ள நான்
உதவாவிட்டால் பார்
பிடரிக்கு முண்டு கொடுத்து
பாழான கண்களால்
பார்த்துக் கிறுக்குவேன்.

என் தனிமை குடித்து
வெறுமையாகிப் போனாய்
ளுவநடடய யுசவழளை குடித்து
என்னை நிரப்பி உயிர்ப்பேன்
நிமிசத்துக்கு நிமிசம் உண்மையுடன் உரசிய என்னை
அழுது பயமுறுத்த முடியாது.

நானைச் சுரண்டி குலைத்து குரல் புதைந்தது.
கைகுலுங்கியது.
சேவிங்றேசர் நாடியை அறுத்தது இனித்தது.
பிளேட்டை கழட்டி காதாவடியில் இருந்து கழுத்து வரை வரிவரி போட்டு பின்பு அதை வெட்டி வெட்டி சதுரம் போட்டு விழையாடினேன்.
இந்த விளையாட்டில் பின் சிரைப்பது இன்னும் இனிக்கும்.

பிசாசும் இப்படித்தான்.
கடற்கரையில் மணல் பரப்பி தட்டி
விரலால் கோடு கிழித்து விளையாடும்
மீண்டும் கை ஓரத்தால் மட்டம் தட்டி சிரைக்கும்.
பிசாசு அப்படித்தான். (பார்க்க பிசாசுக் கதைகள் பக்கம் 12)

முகத்தில் இரத்தம் இரைந்தது.
கழுவக் கழுவ
இரத்தம் கீறல் கீறலாய் முளைத்து வழிந்தது.

அதேன் ஊத்தைச் சொல்லை என்
புனிதங்களற்ற புரிதலுக்கு பாவிப்பது

காதல் கத்தரிக்காய்
அன்பு வெள்ளரிக்காய்
பாசம் பாவற்காய்
என்ற ஒரு சைவக் கறிவகைகளும் தெரியாது.
சிரித்தபடி
ஆழங்கள் தொலைதூரம் விலத்திக்கிடக்க
நான் நனைந்ததெல்லாம்
கரையோரம் மட்டும்தான்.

சிரிப்பில் மரங்கள் ஆடிப்பிளந்தது.
நீ ஒரு காலம் அழுவாய்
அழுவாய் அழுவாய் அழுவாய்
அழுவாயாயின் அர்த்தத்தை தெரிந்து கொள்வாய்.

நாய்கள் இறைச்சிக்கு அடிபடுவதாய் அவன் கதைக்க
அது பெரும் பகிடி என அவள் பறைய
வார்த்தை கிழிந்து
நெஞ்சில் விசர் வழிந்தது.

நீ கடிச்ச விரலில் இன்னும் வலி மாற முதல் துரத்தி விட்டாய்
உதடு வலிக்குதென்று சொல்லவில்லை.
உறவு உறைக்குதென்று சொல்லவில்லை.
இதெல்லாம் மிஞ்சி
என் சொறிச்சேட்டைகளில்
என்ன காதற்குறைபாடு?

புழகாதயடி பெட்டை என்று
கழுத்தில் கொஞ்சினேன்.
பாவாடையை பெரு விரலால் உயர்த்தி
துடையை உரசினேன்.
விசரா இது ஒரு கத்தரிக்காய் என்று
அவளிடம் உடனே சொல்
ஒரு பெயர் வை.

அதைச்சொல்லி இதைச்சொல்லி உரையாடி
எல்லாம் குடுத்துத் தொலைத்துவிட்ட
வெறுமை உணக்குத்தெரியாது.
அந்த வெறுமையில்
என் மூலை முடுக்கொண்றும் உணக்குத் தெரியாதென்ற
சோகம் கரைந்தது.

என் பாட்டுக்கு கிடந்த என்னை நாசமறுத்தது எது?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *