சிறிலங்காவில்

சிறிலங்காவில்
சிக்கன் ‘Shit’ கிளறுவதால்.
சத்தியம் செய்து
சைவமானவர்களுக்கும்
முருகனுக்கு தவமிருந்து
Sun Shine ல் பிறந்தோருக்கும்
மற்றும் அந்தாக்கள் போல்
அந்தரப்பட்டு
peace க்கும் privilege க்கும் pass தேடும் foxy மனிதர்களுக்கும்
என் heart ன் கதவைத் திறந்து கொண்டு
காசாசை இல்லாமல்
கதைக்க விருப்பம்.

சிறப்பாக குறித்த திகதியில்
குடல் இடறும் body விட்டு
கோனலும் மானலுமில்லா heaven க்கு
கூட்டிப்போறானாம் ஒருத்தன்.

பேருக்கு நீ போருக்கு நான்
காசுக்கு நீ கஸ்டத்துக்கு நான் என்று
பழய சினிமா வசனம் போல்
எத்தனை நாட்கள் பிரிஞ்சு கிடப்பம்?

ஆலைகளும் அவை தள்ளும் புகையிழுக்க
சோலைகளும் செய்து
இணை பிரியா புரட்சிக்கு வாடும் நீயும்
அதனால் மருட்சி கொண்டு
என்ர ஜயோ வென்றழும் நானும்
heart ஜ திறந்து
காசாசை இல்லாமல் கதைச்சால்
உடம்பு வியர்க்கும் அல்லது
ஒரு நாளைக்கு 15 தரம் ஆத்திரம் வரும்
வீனா அதையேன் விரையம் செய்வான்?
வாரானாம் ஒருத்தன்
அவனோடு போவோம்
சேர்ந்தே போய் check out ஆவோம்
அப்பதான் தெரியும் ஆர் ஆரென்டு
என்ன உறவெண்டு.

இன்னுமொரு மில்லியன் ஆண்டு கழிச்சு
சூரியன் உருகிக் கொண்டிருக்கேக்க
ஊண்னோடு கதைக்க எனக்கு நேரமிருக்காது.

நல்ல மனிதர்போல்
மானுக்கும் கொம்புண்டாம்.
கெட்ட கேட்டுக்கு
கோழிக்கும் ருசியுண்டாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *