சாதிக்கெதிரான சட்டம் பற்றிய வாதம் – மீனா தன்டா

நியு செஞ்சுரி புக் கவுஸ் மீனா தன்டா எழுதிய சிறு ஆய்வுக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்து யமுனா ராNஐந்திரனின் முன்னுரையுடன் வெளியிட்டிருக்கிறது. லண்டனில் நடந்த இந்தக் குறுநூலின் வெளியீட்டின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இது. தவிர இது ஆய்வு நோக்கோடு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையல்ல.

இக்கட்டுரையை (இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு (1)) என்ற கட்டுரையின் தொடர்ச்சியாகப் பார்க்கவும். இங்கிலாந்தில் சாதிய எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக நடந்த விடயங்கள் மற்றும் விவாதங்கள் பலதை மேற்படி கட்டுரையில் இருக்கும் பதிவுகளைப் பார்க்கவும். அந்த குறிப்பிட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த விவாதங்களின் போது விவாதித்தவர்கள் மத்தியில் கடுமையான வர்க்க மற்றும் சாதியப் பிளவு இருந்ததை அவதானிக்கலாம். பிராமணிய அமைப்புகளும் அவர்கள் சார் முதலாளிகளும் சாதியம் காப்பாற்றும் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர். இது சாதி எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தியது – அவர்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பை நோக்கி நகரவேண்டியிருந்தது. இருப்பினும் இதை உடைக்கும் முறையில் சில “புத்தி ஐPவித” அடையாள அரசியல் பேசியவர்கள் இயங்கியதையும் குறிப்பிடத்தான் வேண்டும். துவேஷ எதிர்ப்பு என்ற பெயரில் துவேஷ தொழில்துறையால் பணம் சம்பாதிப்பதுபோல் சாதிய சட்டம்சார் துறையில் பணம் புடுங்கும் நோக்கிலும் தங்களை முதன்மைப்படுத்த முயற்சிகளும் நடந்தது- தொடர்ந்து நடக்கிறது. அவர்களைப் பொறுத்த வரையில் சாதிய எதிர்ப்பு என்பது அவர்கள் தங்களைத் தாங்களே விளம்பரம் செய்யும் சுய செயற்பாடு. தங்களை நிலைநாட்டிக் கொள்வதற்காக சாதியத்துக்கு எதிராக அமைப்பு ரீதியாக திரண்டவர்களின் காலை வாருவது இவர்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது. இது பற்றி நடந்த விவாதங்கள் பற்றிய விபரங்கள் பல இணையத்தில் பார்க்கலாம். தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு ஆங்கிலத்தில் சிறு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறது. தேவையானவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

மேற்சொன்ன சாதி எதிர்ப்பாளர்களுக்கிடையிலான முரண்களும் உடன்பாடுகளும் ஒரு தனிப்பட்ட விடயம். இதற்கு அப்பால் படு மோசமான சாதி காக்கும் செயற்பாட்டாளர்கள் பிரச்சாரிகள் பற்றியே மீனா தன்டாவின் ஆய்வறிக்கை பேசுகிறது. அதுபற்றிய சுருக்கமான புள்ளிகளையே இக்கட்டுரையும் வைக்கிறது.

மீனா தண்டா இக்கட்டுரையில் குறிப்பாக எடுத்துக்கொண்டு மறுப்புத் தெரிவித்திருப்பவரின் பெயர் பிரகாஸ் ஸசா. இவர் அத்தருணம் சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட மோசமான கருத்துகளை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மீனா. இந்தக் கட்டுரைக்குப் பிறகு மீனாவுக்கு மறுப்பு எழுதியது மட்டுமின்றி (2) தனது “பிரித்தானியச் சட்டத்தில் சாதி இணைவதற்கு எதிர்ப்பு’ என்ற புத்தகத்திலும் இக்கருத்துகளை அவர் இணைத்துக்கொண்டிருக்கிறார். இலண்டனில் இருக்கும் குயின் மேரி பல்கலைக் கழகத்தின் கலாசாரத்துக்கும் சட்டத்துக்குமான சென்டரின் அமைப்பாளராக இருக்கும் இவர் தனது பிராமணியச் சார்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகச் செய்து வருபவர். தருமக் கொள்கை பற்றிய பவுன்டேசனை உருவாக்கி நடத்தி வருபவர் இவர். இங்கிலாந்தில் சாதி சட்டத்துக்குள் வருவதற்கு எதிர்ப்புச் செய்ய என உருவாக்கப்பட்டது இவ்வமைப்பு. 2010 சமத்துவ சட்டத்தின் அங்கமாக சாதி கொண்டு வந்ததற்கு எதிராகக் கடுமையான வேலைகள் பிரச்சாரங்களைச் செய்துவருகிறது இவ்வமைப்பு. 2010ம் ஆண்டு சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தை கடுமையாகப் பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறது இவ்வமைப்பு. இந்துத்துவ மற்றும் சீக்கிய சாதிச் சங்கங்கள் -மற்றும் பிராமணியத்தைப் காப்பதற்குப் பாடுபடும் பிராமணிய முதலாளிகள் எனப் பலர் இந்த அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
பிரகாஸ் ஸசாவும் அவர் சார்ந்தவர்களும் நல்ல “தெளிவுடன்” தான் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்கள் முழுக்க முழுக்க இங்கிலாந்து கன்சவேட்டிவ் கட்சியுடன் இணைந்து வேலை செய்பவர்கள். மேற்சொன்ன அமைப்பு தொடங்கும் விழாவை பாராளுமன்றத்துக்குள் நடத்த இடம் எடுத்துக் கொடுத்தது மட்டுமின்ற அந்த நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் பல முக்கிய கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள். இந்த வைபவத்தை இந்தியத் தூதரகமும் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மைத் தலித்து ;கள் வாழும் இந்தியாவை இந்தியத் தூதரகம் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக முதலாளிகளையும் பிராமணியத்தையுமே முன்வைத்து இயங்குகிறது இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
சாதியை 2010ம் ஆண்டு சமத்துவச் சட்டத்தின் அங்கமாக்கும் முன்னெடுப்புகளை பாராளுமன்றத்தில் செய்தவர் லேபர் கட்சியைச் சேர்ந்த nஐரமி கோர்பின். மேலும் Nஐhன் மக்டெனால்ட் முதலான தொழிலாளர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவால்தான் இந்தச் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதனாலும்தான் இங்கிலாந்து பிராமணியம் இங்குள்ள பழமைவாத கட்சியான – மரபு முதலாளித்துவக் கட்சியான -கன்சவேட்டிவ் கட்சியுடன் நெருக்கமாக இணைந்து வேலை செய்து வருகிறது. இங்கிலாந்தில் சாதி காக்கும் வேலைசெய்பவர்களில் பெரும்பாலானோர் பெரும் முதலாளிகள். இவர்கள் ஏற்கனவே கன்சவேட்டிவ் கட்சியோடு நெருங்கியிருந்ததும் தெரிந்த விசயமே.

தமது சாதி காத்தலைப் பலப்படுத்தவும் லேபர் கட்சியின் இடதுசாரிகளைப் பழிவாங்கவும் தமக்கு கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் உபயோகித்து வருகிறார்கள் இவர்கள். குறிப்பாக மோடி இங்கிலாந்து விஐயம் செய்தபோது இவர்கள் தொழிலாளர் கட்சியைக் கடுமையாகத் தாக்கினர். மோடிக்கு எதிர்ப்புச் செய்பவர்கள் இந்திய தேசத்துக்கு துரோகம் செய்தவர்கள் என இவர்கள் கேவலமாக வாதிட்டனர் (2). குறிப்பாக nஐரமி கோர்பின் கடுமையாக தாக்கப்பட்டார். மோடியின் வருகையின் போது இங்கிலாந்தில் ஏராளமானவர்கள் கூடி எதிர்ப் போராட்டம் நடத்தியதை பல பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன(3). இவர்கள் எல்லாரும் ‘தேசத்துரோகிகள்’ என முத்திரை குத்தி மிரட்டும் பிராமணியத் திமிர் இவர்களிடம் இருப்பதை கவனிக்கலாம்.
மீனா தனது கட்டுரையில் இவரைப் பெயர் குறிப்பிட்டு பேசவில்லை. அது சரியே. ஒடுக்குமுறையின் வடிவான இந்த அற்பனின் பெயரை ஏன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடவேண்டும் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நாம் அப்படிச் செய்ய முடியவில்லை. இவர்களது அட்டகாசங்கள் வெளிப்படையாக்கப்படவேண்டும் என்ற நோக்கிலேயே மேற்குறிப்பிட்ட சுருக்கமான தகவல்களைத் தரவேண்டியிருந்தது.
இந்த விவாதம் இரண்டு புள்ளிகளைச் சுற்றி நடக்கிறது. ஒன்று இங்கிலாந்தில் சாதியம் இருக்கிறதா இல்லையா? இங்கிலாந்தில் அதன் பண்புகள் என்ன? என்பது. இரண்டாவது சாதிய ஒடுக்குமுறை சட்டத்தின் அங்கமாக்கப்படுவது பற்றியது. முதற்புள்ளி ஒரு விவாதத்திற்கு வந்திருப்பதே மிகக்கேவலம். உலகெங்கும் வாழும் தெற்காசிய சமூகத்துக்குள் சாதியம் புரையோடியிருப்பது கேள்விக்கு அப்பாற்பட்ட உண்மை. இதை வாதிட வேண்டியிருப்பது மகா வெட்கமும் வேதனையும் -அதை விட அதிகமாகக் கோபமும் தரும் விடயம். இங்கிலாந்தில் சாதியம் இல்லை எனச் சட்டத்துக்கு எதிரான வாதம் வைத்து தட்டிக் கழித்துவிட கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களும் தொழிலாளர் கட்சி வலதுசாரிகளும் எடுத்த முயற்சியை முறியடிக்க ஒரு ஆய்வு செய்யும் படி கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறு அரச ஆதரவுடன் நிகழ்ந்த ஆய்வு பல்வேறு ஆதாரங்களை நிறுவியுள்ளது. இது மட்டுமின்றி பத்திரிகைகள் பல்வேறு சாதிய பாரபட்சங்கள் பற்றி செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இது தவிர மீனா நேரடியாக பல ஆய்வுகளில் ஈடுபட்டு ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அப்படியிருந்தும் இவர்கள் ஏன் இந்தப் பொது உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? இங்குதான் பிராமணியத்தின் பின் வளரும் பிற்போக்கு வலதுசாரிய முதலாளித்துவ அரசியலை நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. இது பற்றிப் பின்பு மேலும் விரிவாக பார்க்கலாம்.
இங்கிலாந்தில் மட்டுமில்லை இந்தியாவிலேயே சாதியம் இருப்பதற்கு ஆதாரமில்லை எனச் சாதி காக்கும் கல்வியாளர் வாதிடுகின்றனர். மேற்கத்தேயரின் பிடியில் விழுந்த இந்தியாவிற்தான் சாதிய கட்டுமானம் அறிமுகமானதாகச் சொல்கின்றனர். இதன்மூலம் இந்துத்துவத்தை காப்பாற்ற முயல்கின்றனர். இந்தியக் கலாசாரம் என்பது இந்துத்துவ கலாச்சாரம் என்று நிறுவ முயலும் இவர்கள் அதை மேற்கத்தேய காலாச்சாரத்துக்கு எதிர் நிலையில் நிறுத்தி “புத்தி ஐPவிதம்” பூச முயலுகின்றனர். மேற்குக்கு எதிராகக் கிழக்கின் கலாச்சார எழுச்சி தேவை என்பது இவர்களின் அடிப்படை வாதமாக இருக்கிறது. அவ்வளவுக்கு மேற்கை எதிர்க்கும் நீங்கள் ஏன் மேற்கு திணித்த சாதியத்தை மட்டும் எதிர்க்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். மாட்டின் கழிவை உங்கள் மூஞ்சிகளில் பூசித்திரிவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் உங்கள் கழிவுகளைத் துடைத்துத்தான் சாதிவாரியாக ஒடுக்கப்பட்டவர் வாழவேண்டும் என்றும் இது இந்திய கலாசாரம் என்று தூக்கி நிமித்தாதீர்கள். இந்த வங்கிறோத்தை இன்றைக்கும் விளக்க வேண்டிய “விஞ்ஞான தேவைகள்” யாருக்கும் இல்லை. இது அரசியல் சார்ந்த எதிர்ப்பைக் கோரி நிற்கும் நடவடிக்கை.
இந்த குழந்தைப்பிள்ளைக் கருத்துகளுக்கு எதிராக இந்தியக் கலாசாரத்தையும் சாதியக் கொடுமைகளையும் நன்கறிந்த அம்பேத்கர் பொறுமையாகவும் – சரியான புத்திஜீவித முறையிலும் – கல்வியாளர் புரிந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையிலும் – விலாவாரியாக எழுதிச் சென்றிருக்கிறார். இதனாற்தான் மீனா அம்போத்கரைச் சுட்டிக் காட்டி இந்தச் சாதி காப்பாளர்களின் அடிப்படை வாதங்களை உடைத்திருக்கிறார். மீனாவுக்கு எதிரான பிரகாஸின் கட்டுரை வெறும் அலட்டல்கள் நிறைந்தது. இதைப் பிரசுரிக்கத் தகுதி இல்லாதது என ராடிகல் பிலோசபி இதழ் பிரசுரிக்க மறுத்துவிட்டது. இதற்கு எதிராக இன்னுமொரு அலட்டலை எழுதியிருக்கும் அவர் மீனா தன் மூளை முழுக்கப் பாவித்தும் உருப்படியாக எழுதவில்லை என்பதுபோல் ஒரு அடியும் அடித்திருப்பார். இதே வேலையைத்தான் அவர்கள் அம்பேத்கருக்கும் அந்தக் காலத்தில் செய்தார்கள். தங்களது விதண்டாவாத நொய்ந்த பிற்போக்குப் புலம்பல்களைப் பொறுமையாக மறுப்பவர்களுக்கு “மூளை காணாது” – “உங்களுக்கு விளங்காது” –“உங்களுக்குக் கல்வியாளர் முறை தெரியாது” – “உங்கள் வாதம் வெற்றுச் சொல்லாட்சி” என்ற பாவனைகளில் பேசி ஒதுக்குவது அன்றிலிருந்து இன்றுவரை பிராமணியத்தின் பண்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
நீங்கள் சாதியத்தைக் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள் அது எங்கும் நிரூபிக்கப்படவில்லை என “முட்டாள்” தனமாக வாதிட்டுக்கொண்டு மீனாவின் அறிவைக் கேள்வி கேட்கும் தெனாவெட்டைப் பாருங்கள். மீனாவை மட்டுமின்றி அம்பேத்கரையும் சேர்த்து ஒரியன்டலிஸ்ட் என குத்துவும் இவன் ஒரியன்டலிசத்துக்கு புதிய விளக்கம் கொடுக்கவும் தயங்கவில்லை. மேற்கின் அதிகாரத்தையும் சேர்த்துக் கடுமையாக எதிர்ப்புப் பதிந்தவர்கள் மீனாவும் அம்பேத்கரும். மேற்குலகக் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகார மையத்தோடு பiசாயாக ஒட்டி ஊறிக்கிடக்கும் இவர் புலம்புவது வேடிக்கையானது. ஒரியன்டலிசம் மேற்குலகின் கிழக்கு நோக்கிய அனுபவம் என்றும் அதைப் பின்பற்றும் மீனா மற்றும் அம்பேத்கர் போன்றவர்கள் வெறுமனே மேற்கத்தேய கருத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் சொல்லும் பாவனையிற் பேசி இவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அல்ல என ஒதுக்குகிறார். இது ஒரு வகை காலனித்துவ பிரக்ஞை என வரையறுத்துத் தூற்றுகிறான். பெரியார் கேட்டால் இவன் மூஞ்சையில் மாட்டுப் பீயை வைக்கவும் எனச் சொல்லியிருப்பார். அம்பேத்கரின் பிராமணியத்துக்கு எதிரான பிடிவாதம் காலனித்து பிரக்ஞையின் பண்பாம். அந்தக் காலத்தில் – இந்தியாவின் காலனித்துவ விடுதலைக்கு எதிரான போராட்டத்தின் போதும் – அம்பேத்காருக்கு ஏற்பட்ட சிக்கல்களை கொஞ்சமாவது எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நீ ஒரு வெளிநாட்டுப்போலி என்றும் பல்வேறு கேவலமான வார்த்தைகளிலும் திட்டும் இவனுக்கு மீனா என்ன மறுமொழியை எழுத முடியும்.
மேற்குலகு அரைகுறையாக முன்வைக்கும் “கீழைத்தேசம்” பற்றிய பார்வையை நாமும் உள்வாங்கி நடப்பதாகச் சொல்வதை மீனா மறுத்திருப்பார். ஓருவகை நேட்டிவிஸ்ட் – அதாவது பழங்குடியினப் பார்வையில் இருந்து வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் நடவடிக்கையாக இருக்கிறது இது என்கிறார் அவர். சாதி என்பது வரலாற்று ரீதியாக எவ்வாறு வளர்ந்தது என்பதை பார்க்காமல் இது மேற்கத்தேயர் வருகைக்கு பிறகு உருவாகியதாக காட்டி மேற்கில் பழியைப் போட்டு தப்பி விடுவதற்கு எதிராக அவர் வாதிடுகிறார். ஆனால் இது ஒரு கல்விசார் கேள்வியில்லை. மாறாக இன்று அரசியல் சார்ந்த கேள்வி.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டம் என்பது யாருக்குப் பிரச்சினை? சாதிச் சங்கங்கள் – பெரும் பணம் சம்பாதிக்கும் கோயில் நிறுவனங்கள் – மற்றும் சாதிய அடிப்படையில் குறைந்த ஊதியத்துக்கு வேலைவாங்கும் வியாபாரங்கள் ஆகியன முக்கியமாக தாக்கத்துக்குள்ளாகின்றன. ஆனால் இது மட்டுமல்ல காரணம். இந்துத்துவ – பிராமணித்துவம் -இந்தியாவில் முதலாளித்துவ அரசுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. இதை வேறு அரசுகளுடன் நாம் ஒற்றுமைப்படுத்திச் சுருக்கிப் பார்க்க முடியாது. பிராமணித்துவத்தை உடைப்பது என்பது முதலாளித்துவத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. லாபம் என்பது சாதியத்தைக் காத்துக்கொண்டுதான் உருவாக வேண்டியிருக்கிறது. சாதி எதிர்ப்பு என்பது அடக்கும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மோடி ஆதரவும் சாதி எதிர்ப்பும் எந்தப் புள்ளியில் இணைய முடியும்?
மேற்கண்ட புள்ளி இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. துவேஷத்துக்கு எதிரான போராட்டங்கள் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டு பல்வேறு சமரசங்களால் அவற்றை அடக்கிப் பலங்கொண்டிருக்கும் இங்கிலாந்து அதிகார சக்திக்கு இணையற்றது இந்திய அதிகார சக்தியின் புரிதல் என்பது மிகையான கருத்தில்லை. துவேஷ எதிர்ப்பு அறுபதுகளில் ஏற்படுத்திய ஒன்றிணைவில் இருந்து கற்றுக் கொண்டவர்கள் இவர்கள். திட்டமிட்ட முறையில் ஆபிரிக்க அமெரிக்க – ஆபிரிக்க ஆங்கிலேய – தலைமைத்துவத்தைத் தங்களோடு இணைக்கும் செயற்பாடும் இதிலொன்று. உரிமை கோரும் குழுக்களை வர்க்க ரீதியாகப் பிளப்பதன் மூலமும் – அதன்பின் அக்குழு ஆளுமையை ஆளும் வர்க்கம் சார்ந்து நகர்த்துவதன் மூலமும் தமது கட்டுப்பாட்டை இழக்காதிருப்பது சாத்தியம் என்பதை அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டவர்களிவர்கள்.
இதன் தொடர்ச்சிதான் பல்கலாச்சார (மல்டி கல்சரிலசம்) கொள்கைகள். பல்கலாச்சாரத்துக்கு யாரும் எதிரிகள் அல்லர். ஆனால் அரசின் பல்காலாச்சார கொள்கை என்பது மக்களை தனித்தனி குழுக்களாக பிரித்துப் பாதுகாக்கிறது. இந்த அடிப்படையில் அந்தக் கலாசார குழுக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் நசுக்கப்படுகிறது. இதனால் முக்கியமாக பயனடைந்தவர்கள் கன்சவேட்டிவ் கட்சியினரே. இங்கிலாந்தில் வெளிநாட்டு வேலையாட்கள் மத்தியில் கன்சவேட்டிவ் கட்சிக்கு ஆதரவு இருந்ததில்லை. ஆனால் வெளிநாட்டு வேலையாட்களின் சனத்தொகை அதிகரித்ததானது அவர்களின் வாக்குகளை வெல்லவேண்டிய சிக்கலையும் இக்கட்சிகளுக்கு உருவாக்கியது. அதனால் அவர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு இனக்குழுக்களினதும் மதத் தலைவர்கள் மற்றும் அக்குழுக்களுக்குள் இருந்த பெரு வியாபாரிகளையும் அணுகினர். அத்தகையவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் வலிந்து கட்சிக்குள் உயர்த்தப்பட்டு இனக்குழுக்களின் அடையாளங்களாக நிறுத்தப்பட்டனர். இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குள் இருக்கும் – மற்றும் இக்கட்சிகளில் முதன்மைப் பட்டிருக்கும் ஆசிய-ஆபிரிக்க சமூக உறுப்பினர்களின் பின்னணியைப் பார்த்தால் இது புரிந்துவிடும். சாதாரண வேலையாட்கள் மத்தியில் இருந்து தலைமைகள் இன்றுவரை ஊக்குவிக்கப்பட்டது கிடையாது. இருப்பினும் மேற்சொன்ன ஊக்குவித்தல் கூட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிகழ்ந்தது. ஆசிய ஆபிரிக்க மதத் தலைவர்கள் மற்றும் முதலாளிகள் மத்தியில் அங்கீகாரத்துக்கான போட்டி உச்சக் கட்டத்தில் இருப்பதை இங்கு கள வேலை செய்பவர்கள் நன்கறிவர். இதனால்தான் ஆசிய பின்புலமுடயவர்கள் மில்லியன் கணக்கில் நன்கொடை வழங்குவதும் -அங்கீகாரம் எடுக்க முயல்வதும் நாம் பார்க்கிறோம். இதன் ஊழல்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள் (4). பல்கலாசாரக் கொள்கையின் மிகப்பெரும் தோல்வியின் பின்புலம் இதுதான்.

 

பல்காலாச்சாரக் கொள்கையை எதிர்த்தல் என்பது ஏதோ மக்களின் வித்தியாசங்களையும் தனித்துவங்களையும் எதிர்த்தல் என்பதுபோல் பேசும் புத்திஜீவிகளும் இருக்கிறார்கள். இந்த கல்விமான்களுக்கு வித்தியாசத்தை அதிகாரம் பாவிக்கும் அரசியல் விளங்காதென்பதில்லை. மாறாக பெரும்பாலும் இவர்களும் இந்த அதிகாரத்தின் காவலர்களாகவே இருக்கிறார்கள். இதனாற்தான் பல்காலாச்சார கொள்கைகளுக்கு எதிராக திட்டவட்டமான எதிர்ப்பு முதலில் இடதுசாரிகளிடத்திலிருந்து ஆரம்பித்தது. ஈராக் யுத்த எதிர்ப்பு காலகட்டத்தில் இதை முக்கியமாக வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. அத்தருணத்தில் “முஸ்லிம்கள் முற்றுகையிடப்பட்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் சோசலிஸக் கட்சி ஒரு சிறு நூலை வெளியிட்டது. ஆசியத் தலைமைகள் எவ்வாறு அதிகார சக்திகளின் வேலைகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக எதிர்த்தது இந்த நூல். அதேபோல் ஜோர்ஐ;. கலோவே பிராட்பெர்ட் தேர்தலை 2012ல் வென்றபோது அங்கு எத்தகைய யுத்தம் நிகழ்ந்தது என்பதையும் வெளிக்காட்ட வேண்டிய தேவை இருந்தது. சாதிய மற்றும் பழங்குடித் தலைமைகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்க எத்தகைய யுத்தம் நடத்த வேண்டியிருந்துது என்பதை வெளிக்கொண்டு வந்தது இந்தத் தேர்தல் (5). இந்த ஆசியத் தலைமைகள் கன்சர்வேட்டிவ் மற்றும் வலதுசாரியத் தொழிலாளர் கட்சி சார்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு எதிராக ரெஸ்பெக்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் Nஐhர்ஐ; கலோவே என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வேலையாட்களின் ஊதியத்தைக் கட்டுப்படுத்தவும் அவர்களை மற்றைய மக்களுக்கு எதிராகப் பாவிக்கவும் பல்காலாசாரக் கொள்கை உதவுகிறது என்பதைச் சோசலிசக் கட்சியின் துணைச் செயலாளர் கானா செல் 2014ல் காரசாரமாக விமர்சித்திருந்தார் (6). இதன்பின் 2013-2014 களில் சாதியச் சட்டம் சார் விவாதத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பியது சோசலிச பத்திரிகை மட்டுமே (7). இது சம்பந்தமாக லண்டனில் பெரும் பொதுக்கூட்டமொன்றையும் -விவாதத் தளமாகச் சோசலிசக் கட்சி தமிழ் சொலிடாறிற்றியுடன் இணைந்து நடத்தியிருந்தனர். அதிர்ஷ்;டவசமாக இக்கூட்டத்தில் மீனா தன்டா கலந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. தமிழ் சொலிடாறிற்றி அமைப்பும் இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் சிறு நூல் ஒன்றை வெளியிட்டு இங்கிலாந்து தொழிற் சங்கங்கள் மத்தியில் சாதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் பல்கலாசாரத்தை எதிர்த்தல் – அல்லது சாதிய முதலாளித்து அதிகார சக்திகளை எதிர்த்தல் கூட துவேசமாக பார்க்கப்பட்டு விடும் என்ற தத்துவார்த்த பலவீனம் இங்கு மலிந்து கிடக்கிறது. அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பைத் துவேசமாகச் சுருக்கி அடக்கி முடக்கப்படுவது ஒன்றும் புதிய விசயமில்லைத்தானே.
பல்காலாச்சார அடைப்பு எவ்வாறு சிறுபான்மை குழுக்களின் நலன்களை முடக்குகிறது என்றும் அது எவ்வாறு அடக்குமுறையின்தொடர்ச்சியை அனுமதிக்கிறது என்றும் மீனா தனது ஆய்வில் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் முழுமையாக அதன் அரசியற் பின்புலத்தை அவர் தொடவில்லை. முழுப் பூசணிக்காயைப் பிடி சோற்றுக்குள் மறைக்க முயல்வதுபோல் பல் கலாச்சாரப் பூசணிக்குள் சாதிய ஒடுக்குதலை மறைத்துவிட முடியாது. இது ஒரு முக்கிய புள்ளி. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்வைப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இங்குண்டு. சாதி சார் ஒடுக்குமுறையோ அல்லது அத்தகய கூரிய எந்த ஒடுக்குமுறையோ பதுக்கி வைக்கப்பட முடியாதவை. வர்க்கம் முதன்மையானது அதற்கெதிரான போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் சாதியம் உடையும் என இந்தியக் கம்யுனிச கட்சிகள் சாதியை பதுக்க முயன்றது மகா தவறு. அதே போல் ஈழத்திலும் இந்தியாவிலும் சில தேசிய வாதிகள் – குறிப்பாக பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகள் முதன்மைப் பிரச்சினையாக தேசிய விடுதலை போராட்டம் பேச வேண்டும் என புலம்புகிறார்கள். இவர்கள் வரலாற்றில் இருந்து ஒரு கொஞ்சமும் படித்து அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை போலும். இந்திய விடுதலை போராட்டத்துக்குள் பதுக்கப்பட்ட தலித்துக்களின் கோரிக்கைகள் பின்பு தீர்க்கப்பட்டதா? இதனாலும்தான் பின்பு தலித்தியக் குரல் பலமாக எழுந்த பொழுது அது இந்திய அடக்குமுறைத் தேசியத்துக்கு எதிராகவும் இருக்கிறது. மறைத்து வைப்பதால் – அல்லது கவனிக்காமல் விடுவதால் எந்த ஒடுக்குமறைகளும் நீர்த்துப் போவதில்லை. எவ்வாறு அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட்டத்தை முன்வைப்பது? – எவ்வாறு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்பது? ஏன்ற கேள்விகள் போராளிகள் எதிர்கொள்ளும் முக்கிய மற்றும் மிகக் கடினமான கேள்விகள். இதற்கு ஒற்றைப் பதிலோ – அல்லது கறுப்பு-வெள்ளை விளக்கங்களோ சாத்தியமில்லை. குறுக்குவழிகள் அற்ற திட்டமிடல்களை நோக்கி நகர்தல் கடினமான பாதை. எந்த ஒரு ஓடுக்குமுறையைப் பின்விட்டுச் செல்ல முடியும் – மறைத்துப் பேச முடியும்? போராளிகள் அத்தேர்வைச் செய்ய முடியாது. ஏதோ ஒரு ஒடுக்குமுறைக்கான வக்காலத்து என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் பின் தள்ளக் கூடியது. சிறு நெருப்பை விட்டு விட்டுப் பெரு நெருப்பை அணைப்பதால் காடு எரிதலை நிறுத்திவிட முடியாது. பெரு நெருப்பை விட்டுச் சிறு நெருப்பைத் துரத்துவதாலும் அது சாத்தியமில்லை. ஒவ்வொரு ஒடுக்குமுறைகளுக்குமிடையில் தொடர்புகள் உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து இணைத்து அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்ட உத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அடுத்து சாதிக்கெதிரான சட்டம் பற்றிய சாதக்p காப்பாளர்களின் வாதம் முழுக்க முழுக்கப் பெரும் வியாபாரங்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைச் சுற்றியே நிகழ்கிறது. இதை அவர்கள் நேரடியாகவே பேசுகிறார்கள். மீனாவும் அதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். சாதிக்கெதிரான சட்டத்துக்கான ஆதரவு என்பது சட்டத்தின் மேலிருக்கும் அளவற்ற நம்பிக்கையில் இருந்து பிறப்பதில்லை. அதிகாரச் சக்திகள் தமது இருத்தலைக் காத்துக்கொள்ள இயற்றிக் கொள்ளும் ஒழுங்குகளும் – விதிகளுமே சட்டங்கள். மக்களின் எதிர்ப்பை மந்நதப்படுத்த பல உரிமைகளை அதிகாரம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்கள் மூலம் தமது உரிமைகள் பலதை இச்சட்டத்துக்குள் புகுத்தி வந்திருக்கிறார்கள். இது தவிர சட்டம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கே என வாதிடுவது தவறு. சாதிக் கெதிரான எந்தச் சட்டமும் சாதிய ஒடுக்குமுறைக்குத் தீர்வல்ல. இது எமக்குத் தெரியும். ‘பாரபட்சத்துக்கு எதிரான சட்டம் பாரபட்சமானது’ என இவர்கள் எமக்கு சட்டம் படிப்பிக்க தேவையில்லை. சட்டத்தின் போதாமையை இவர்களை விட நன்கறிந்தவர்கள் ஒடுக்கப்படும் மக்கள். ஆனால் இந்தச் சட்டம்கூட இல்லாவிட்டால் எம் முடிவென்ன? துவேசத்துக்கு எதிரான சட்டம் போதாமை என்பதற்காக அது சட்டத்தில் இருக்கத் தேவையில்லை என இந்த சட்ட நிபுனர் வாதிடுவாரோ? சுhதிய ஒடுக்குமுறைக்கு எதிரான திட்டவட்டமான – தெளிவான தனிப்பட்ட சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் சாதி ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு பண ஒதுக்கீட்டை அரசு செய்ய வேண்டும் என்பது எமது கோரிக்கை. வலதுசாரிய அதிகாரம் இதை அனுமிதிக்காத நிலையில் குறைந்தபட்சம் சமத்துவச் சட்டத்திலாவது சாதியை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ளுங்கள் என்று சுருங்கி நிற்கிறது எமது கோரிக்கை. இதுதான் எமது முதன்மையும் முடிவுமான கோரிக்கை அல்ல. இந்த குறைந்த பட்ச உரிமையை வெல்லக்கூட விடாத நீங்கள் சாதி காப்பாற்றுவதற்காக என்னெல்லாம் செய்யத் தயாராக இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரிந்ததுதான். குறைந்தபட்ச உரிமைகளைப் பெற்றாவது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு பலம் சேர்க்க முயல்வதே எமது நடவடிக்கை. எமது போராட்டம் என்பது அற்ப உரிமைகளுக்காக மட்டுமானதல்ல. மாறாக முற்றான விடுதலை நோக்கி நகர்வது. ஆனால் நீங்கள் விட்டெறியும் உரிமைகள் அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எமது போராட்டங்களைப் பலவீனப்படுத்த நீங்கள் அந்த எலும்புத்துண்டுகளை எறியலாம். அறிவோம். ஆனால் அதையும் பெற்று மேலும் எமது போராட்டத்தைப் பலப்படுத்துவதே எமது நோக்கம்.
மேற்குலக நாடுகளில் இத்தகைய கடுமையான போராட்டங்களின் மூலமே பல உரிமைகள் பெறப்பட்டிருக்கின்றனவே தவிர இவை “வழங்கப்பட்டவை” அல்ல. மேற்குலக முதலாளித்துவம் இரக்க சுபாவமும் கருணையுமுள்ளது போல் அதற்கு ஒரு முற்போக்கு முகம் பூச சிலர் முயல்வர். அது விசர்க் கதை. அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்களின் கடும் போராட்டத்தின் பின்புதான் சிவில் உரிமைகள் பல பெறப்பட்டன. இத்தகைய போராட்டங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் இந்தச் சனநாயக உரிமைகள். மேற்கில் அதிக சனநாயகம் இருக்கிறது என்றால் அது சரியே – ஆனால் அவை வழங்கப்பட்டவை அல்ல மாறாக போராடிப் பெறப்பட்டவை. இதைத் திருப்பிச் சொல்லி அழுத்துவதற்கு ஒரு காரணமுண்டு.
மேற்குலகை எதிர்க்கிறோம் என்று – வெள்ளைக்காரர் எதிர்க்கப்படவேண்டியவர் என்று – கிழக்கு அதிகார சக்திகள் பாவனை செய்வதன் போலியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் எதிர்க்கும் மேற்கு – அதிகார மேற்கு அல்ல. மாறாக மக்கள் சனநாயகம் – மக்கள் அனுபவிக்கும் சுதந்திரம் – இவற்றைத்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதே நபர்கள் மேற்கின் கொடும் வலதுசாரிய அதிகார சக்திகளுடன் கூடிக் குலாவிக்கொண்டு இதைச் செய்வதை நாம் அவதானிக்க வேண்டும். நாம் அவர்களின் மேற்கை எதிர்ப்போம். ஆனால் மேற்கில் வென்றெடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் கிழக்குக்கும் – எல்லாத் திசைக்கும் பரவவேண்டும்.
எமது பாரம் பரிய கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிட முடியுமா என சிலர் கேட்கலாம். ஸசா முதலான சாதி அபிமானிகளும் அப்படியே பேசுகின்றனர். உங்கள் கலாச்சாரத்தை காத்துக்கொள்வதற்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால் தயவு செய்து காடுகளை நோக்கி நகருங்கள். அங்கு போய் பன்னாடையை போத்திக்கொண்டு ஆடுகளை (மாடுகளை அல்ல) வேட்டையாடுங்கள். அங்கிருந்துகொண்டு அறிவித்துக்கொள்ளுங்கள் “நாம் கலாசாரக் காவலர்கள்” என்று. அதன்பிறகு நம்புவோம். கலாசாரம் என்பது வரலாற்றில் உறைந்து நிற்பதில்லை. மாறாக மாறிக்கொண்டிருப்பது. சுவிட்சைப் போட்டால் லைட் எரிய வேண்டும் என்பது அனைவரதும் கலாசாரம். அதற்;குக் கூட வசதியற்று வாழும் வறிய மக்கள் அப்படியே வாழட்டும் என அவர்களுக்குக் “கலாசார காவல் பணி” கொடுத்து விட்டு நீங்கள் ஆடம்பர மாளிகைகளில் சமீபத்திய தொழில் நுட்ப கருவிகளுடன் உல்லாசம் காணாதீர்கள்.
குடிக்க நீர் அற்றுச் சாகும் ஆபிரிக்கருக்கும் – சாதி வெறியில் எரிக்கப்பட்டு சாகும் ஏழைக் குடில்களுக்கும் மேற்கின் சனநாயகம் வேண்டும் – சுதந்திரமும் தொழில் நுட்பமும் வேண்டும். நீங்கள் கொஞ்சிக் குலாவும் மேற்கின் அதிகாரத்தை உடைத்துத்தான் எமக்கு தேவையான மேற்கை நாம் இறக்குமதி செய்ய முடியும். லாபத்துக்காகப் பண்டங்களை மட்டும் எங்கள் தலைகளில் குவிக்கும் மேற்குக்கு மட்டும்தான் எமக்குரியது என நீங்கள் பினாத்தாதீர்கள். மேற்கு முதலீட்டுக்காகக் கோடிக்கணக்கான இந்தியர்களின் வயிற்றில் அடிக்கத் தயாராக இருக்கும் மோடிக்கு சாமரம் வீசும் பிரகாஸ் வெண்டரிக்காய் எதிர்க்கும் மேற்கு என்ன? இந்த அடிப்படைக் கேள்வியில்தான் இவர்களின் சாதி காத்தலும் வர்க்க உணர்வும் இணைகிறது. இந்த உணர்வுதான் இவர்களின் சட்ட நுணுக்க விவாதத்திலும் கசிகிறது.
எல்லா பாரபட்சங்களுக்கும் எதிராக சட்டம் இயற்ற முடியாது என்கிறார்கள் இவர்கள். சாதிக்கெதிரான சட்டம் தெற்காசிய முதலாளிகளுக்கு எதிரான வழக்குகளை அதிகரித்து பொருளாதாரத்தை பாதிக்குமாம். அப்படியாயின் ஏன் வர்க்க முரணுக்கெதிராகவும் சட்டம் கொண்டுவரக்கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் நம்மை நோக்கி இதைப் பேசவில்லை. மாறாகத் தமது மேற்கத்து சகாக்களை நோக்கி பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க. இப்போது இவர்கள் சாதியத்துக்கு எதிராகச் சட்டம் கேட்கிறார்கள் – இதுக்குப் பிறகு வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சட்டம் கேட்பர் – என எச்சரிக்கை செய்கிறார்கள். ஆம் அதில் ஒரு உண்மையுண்டு. நாம் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும்தான் இயங்குவோம். பெரும்பான்மை தலித்துகள் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். நீங்கள் சாதியை “கலா சாரமயப்படுத்தி” காத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் – அதன்மூலம் உங்கள் வர்க்க அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்கிறீர்கள். இதைத்தான் மீனாவும் பாலமுரளி நடராஜனும் “எதிர்ப்புரட்சிகர நடவடிக்கை” என வரையறுக்கிறார்கள். இந்த எதிர்ப் புரட்சிகர நடவடிக்கை மூலம் சாதி ஒழிப்பை தடுத்து – பல்காலாச்சார வித்தியாசங்களின் கொண்டாட்டத்துக்குள் புதைக்க முயற்சிக்கிறீர்கள் என அவர்கள் சரியாக குற்றம் சாட்டுகிறார்கள்.
சட்டத்தின் மூலமாயினும் சாதியத்தின் எதிர்ப்பைப் பதிவது என்று அம்பேத்கார் எடுத்த முடிவு முற்றிலும் சரியே. இது அதிகாத்துவ நடவடிக்கை என்கிறார் பிரகாஸ். இது ஒரு வகை “அரச வன்முறை” என்கிறது அந்தக் கத்தரிக்காய். என்னே தொனாவட்டுக் கதை இது? அம்பேத்கர் அரச வன்முறையைப் பாவித்தவர் எனச் சொல்லும் இந்த முந்திரிக்காய் இந்தியா முழுக்க நிகழ்ந்து கொண்டிருக்கும் படுகொலையை செய்வது யார் என விளக்க வேண்டும்.“மோடி ஆட்சியில் குஜராத்தில் கொலை நிகழவில்லை – அது ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குள் அடித்துத் தாமாகச் செத்தது – ஆக அது அவர்களின் இந்திய கலாச்சாரம் – அவர்களுக்கு சாவதற்கு உரிமை இருக்கிறது” என்று வாதிடுவார் போல இந்த வக்கீல்.
இவர்களுக்கெல்லாம் பொறுமையாக கல்விசார் விளக்கங்கள் கொடுத்து விளக்கம் ஏற்படுத்த முடியாது. சாதியத்துக்கு வரைவிலக்கனம் கொடுக்க முடியாது என்றெல்லாம் இவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. சாதியத்திற்கு எதிரான எதிர்ப்பைக் காட்டலே நாம் செய்ய முடியும்.
மீனாவின் ஆய்வுக் கட்டுரையில் நாம் முரண்படும் ஒரு புள்ளியையும் இங்கு சுட்டிக் காட்டவேண்டும். அம்பேத்கர் எவ்வாறு நீட்சேயை மனுவுடன் இணைக்கிறார் என எடுத்துக்காட்டி எவ்வாறு அம்பேத்கர் பல மேற்கத்தேய தத்துவங்களையும் எதிர்த்தார் எனச் சுட்டிச் செல்கிறார் மீனா. நீட்சே பற்றிய கல்விசார் புரிதலின் அடிப்படையில் அது பற்றி அம்பேத்கர் வைக்கும் கருத்து சரியே. அதுபோல் அம்பேத்கரை முற்றான மேற்கத்தேய பிரதிப் போலி என சொல்வது தவறு என மீனா சுட்டுவதும் சரியே. ஆனால் நமக்கிருக்கும் முரண்பாடு நீட்சே பற்றிய புரிதல் பற்றியது. நீட்சேயின் “உயர் மனிதன்” பற்றி பல உரையாடல்கள் பதிவுகள் இருக்கின்றன. நீட்சே தேடிய அதி மனிதன் பற்றிய நோக்கு கீழிலிருந்து மேலான விடுதலைக்கு எதிராக நிற்பதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் நுPட்சே சொல்லம் நேரிடை ஒழுங்கமைப்பும் மனிதரை மேல் நோக்கி எழுப்புவதும் குறிப்பிட்ட குழு சார்ந்து வைக்கப்பட்ட கோட்பாடு அல்ல. மாறாக அவர் ஒட்டுமொத்த மனித சமூக ஒழுங்கமைவு பற்றி பேசுகிறார். நீட்சே சொல்வது போல் இல்லாவிட்டாலும் அத்தகைய மனித குலத்தை மேல் எழுப்பும் திட்டமிடல் நோக்கி நகர்வது எதிர்காலத்தில் நிகழக் கூடியதே. இது ஒரு தனிப்பட்ட கருத்து – குறிப்பாக நீட்சேயைப் புரிதல் பற்றியது. இதை வேறு வகையில் குழப்பிக்கொள்ளக் கூடாது.
இறுதியாக மொழிபெயர்ப்பு பற்றிச் சில குறிப்புகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும். சா.தேவதாஸ் பல்வேறு கல்விசார் சொற்பதங்களை குழப்பத்துடனும் – வசனங்களைக் குழப்பியும் எழுதியிருப்பதால் பல்வேறு இடங்களில் மீனா என்ன சொல்ல வருகிறார் என்பதை இந்த மொழி பெயர்ப்பில் புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக சட்டத்தை விதி எனவும் பல் கலாசாரத்தைப் பல்பண்பாடு எனவும் அவர் மொழி பெயர்த்திருப்பது அவர் இந்த விவாதங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்ற உணர்வை எமக்கு ஏற்படுத்துகிறது. திருத்திய மொழி பெயர்ப்பு வெளிவரவேண்டும்.

  1. http://ethir.org/senan/?p=439
  2. http://indiafacts.org/caste-critique-and-colonial-consciousness-a-response-to-meena-dhanda/
  3. http://www.hinduhumanrights.info/the-labour-party-anti-modi-anti-india/ http://indiafacts.org/uks-labour-party-stands-against-modi/
  4. http://www.tamilsolidarity.org/?p=4546 / https://www.theguardian.com/politics/2015/nov/12/indian-pm-confronted-by-angry-protesters-in-downing-street
  5. http://www.dailymail.co.uk/news/article-2944202/Tory-donor-dubbed-King-Prawn-gives-party-12-000-claims-expenses.html /http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1136037.stm / https://www.theguardian.com/politics/2012/jun/04/lycamobile-tories-biggest-corporate-donor
  6. http://www.socialistparty.org.uk/keyword/Lefts/George_Galloway/14248/02-04-2012/george-galloways-stunning-bradford-west-victory
  7. http://www.socialismtoday.org/178/immigration.html
  8. http://www.socialismtoday.org/184/caste.html

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *