வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள்

நிலவரம்

  • சிறு வீடு வாங்க குறைந்த பட்சம் £210 000 பவுன்சுகள் தேவை.
  • கல்விச் செலவுக்கு ஒருவருக்கு £ 40 000 வரை தேவை
  • சராசரி மாத வருவாய் £1256 – செலவு £1200ல் இருந்து £2500

 

மாதச் செலவு  குறைந்த பட்சம்
மோர்கேஜ் அல்லது வாடகை £920
மாத பில்ஸ் £300 – £1600 (3 bed houe)
கல்வி கடன் கட்டுதல் ஆகியன £100 – £1000
  • உணவு – போக்குவரத்து ஆகியன சேர்க்கப்பட முதலே மாசம் குறைந்த பட்சம் £1200ல் இருந்து £2500 வரை தேவை என்பதை பார்க்கலாம்
  • குறைந்த பட்ச £7.25 சம்பளம் எடுக்கும் ஒருவரின் மாதச் சம்பளம் £1256
  • ஏறத்தாள 13  மில்லியன் (1 in 20 people in UK)  மக்கள் குறைந்த பட்ச ஊதியம் எடுப்பவர்கள். பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களும் குறைந்த பட்ச ஊதியம் எடுப்பவர்கள்.
  • பிரித்தானியாவில் வாழ்வோரின் சராசரி மாத வருமானம் £2300
  • மருத்துவம் மற்றும் பிற சேவைகள் தனியார் மயமாக்கப் பட்டால் அதற்கும் தனிப்பட்ட செலவு ஒதுக்க வேண்டி இருக்கும்.

 

பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துக்கள்

  • உலகப் பொருளாதாரம் நீண்ட காலத்துக்கு தேக்க நிலையில் இருக்கப் போகிறது.
  • பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி மிக குறைந்தளவிலேயே இருக்கப் போகிறது

வலது சாரிகள் கையில் அதிகாரம் இருக்குமாயின்

  • குறையும் லாபத்தை ஈடு கட்ட- தொடர்ந்தும் மக்கள் சேவைகள் வெட்டப் பட்டே வரப் போகிறது.
  • இங்கிலாந்தில் பெரும்பான்மை மக்கள் வசதியற்ற வாழ்க்கையையே வாழப் போகிறார்கள்.

 

வலது சாரி கொள்கைகள் சில

  • மருத்துவம் , கல்வி ஆகியவற்றைத் தனியார் மயப்படுத்தி – அதற்குப் பணத்தை மக்களிடம் அறவிடுதல்
  • மக்களுக்கான வரியை அதிகரித்தல்.
  • பெரும் கார்பொரேட்களுக்கு வரிச் செலவைக் குறைத்தல்
  • வெளிநாட்டுத் தொழிலாளர் – அகதிகளின் உரிமைகளைக் குறைத்தல்
  • வெளிவிவகார கொள்கையை முற்றாக லாப நோக்கில் வரைதல்
  • இராணுவம் மற்றும் – அணு குண்டு ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக பணத்தை ஒதுக்குதல்.
  • வறியோருக்கும் பெரும் பணம் படைத்தோருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தல்
  • பெரும் செல்வந்தர்கள் மட்டும் சிறந்த கல்வி பெரும் வசிதியை ஏற்படுத்தல்.

இடது சாரி கொள்கைகள் சில

  • மக்களின் அடிப்படை சேவைகளான மருத்துவம் கல்வி ஆகியவற்றை அரச மயப்படுத்தி இலவசமாக வழங்குதல்.
  • கல்வி பெறுவதை பொருளாததார பலம் நிர்ணயிக்காத முறையில்- அனைவருக்குமான கல்வி வசதியை ஏற்படுத்தல்.
  • மக்களுக்கான வரியை அதிகரிக்காது பெரும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடும் வரியை அதிகரித்தல்.
  • அனைத்துத் தொழிலாளர்களுக்குமான உரிமைகளைப் பாதுகாத்தல் – வழங்கப்படும் குறைந்த சம்பளத்தைக் கூட்டுதல்.
  • லாப நோக்கில் அல்லாது மணித உரிமை அடிப்படையில் வெளி விவகார கொள்கையை மாற்றுதல்.
  • பெரும்பான்மை மக்களை முதன்மைப் படுத்திய சனநாயக நடவடிக்கைகளை முன் எடுத்தல்.
  • போக்குவரத்து முதலான முக்கிய சேவைகளை தேசிய மயப் படுத்தல்.

 

தமிழ் பேசும் மக்கள் சார் கோர்பின் கொள்கைகள்

  • இலங்கை தொடர்ந்து மனித உரிமை மீறினால் உடனடியாக இராணுவ தொடர்புகளை உதவிகளை துண்டித்தல். வியாபர உறவுகளைத் துண்டித்தல் – அல்லது அதை மணித உரிமையுடன் இணைத்தல்.
  • தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்தல்
  • கல்வி – மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக பாதுகாத்தல்
  • மணிக்கு பத்துப் பவுன்சுகளாக குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்தல்.
  • புதிய வீடுகளைக் கட்டுதல் – வீட்டு வாடகை நினைத்தபாட்டுக்கு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துதல்.
  • சிறு தொழில்களுக்கான வரிப்பணத்தைக் குறைத்தல்.

 

தமிழ் பேசும் மக்கள் சிந்திக்க வேண்டிய முக்கிய 3 புள்ளிகள்

  1. வருங்கால சந்ததியினரின் எதிர்காலம்.எமது அடுத்த சந்ததி பிள்ளைகளும் நிரந்தரமற்ற வாழ்க்கை வாழ்வதா ? அவர்களும் உயிர் பிழைப்பதற்காக தினமும் ஓடி ஓடி வேலை செய்து மாழ்வதா ?
  2. எத்தகய வெளிவிவகார கொள்கையை –மனித உரிமையை நாம் ஆதரிப்பது?மணித உரிமை அடிப்படையிலான கொள்கையா? லாபத்தை மட்டும் முன்னிறுத்திய கொள்கையா?
  3. நாம் -அறிவார்ந்த சமூகமாக -முற்போக்கு சமூகமாக –எல்லாருக்குமான நல்வாழ்வு சமூகத்துக்கான கொள்கைப் பக்கம் நிற்கப் போகிறோமா ? அல்லது சிறுபான்மை பெரும் கார்போரட்டுகள் மக்களின் பணத்தை சுருட்டும் கொள்கைப் பக்கம் நின்று பிற்போக்குக் கொள்கைகளை ஆதரித்து எமது வாழ்வாதாரத்தினை நாமே உடைத்துக் கொள்ளப் போகிறோமா ?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *